Word |
English & Tamil Meaning |
---|---|
மாடை | māṭai n. cf. māṣa. Gold; பொன். ஆடை கொண்டுயர் மாத ரம்புவி மாடை யென்பவை மீதி னெஞ்சக வாசை (அலங்காரச்சிந்து. 16). |
மாடைக்கூலி | māṭai-k-kūli n. <>மாடை+. A tax; வரிவகை. (S. I. I. iii. 161.) |
மாணவை | māṇavai n. <>māṇavikā. Female disciple; lady pupil; உபாஸக ஸ்திரீ. சிந்தாமாணவை (நீலகேசி, 531, உரை). |
மாணி | māṇi n. cf. māṇava. Disciple; மாணவகன். புத்தனார் முதன்மாணி . . .மொக்கலனெனச் சொன்னான் (நீலகேசி, 266). |
மாணிக்கச்சம்பா | māṇikka-c-campā n. <>மாணிக்கம்+. A kind of campā paddy; சம்பா நெல்வகை. (குருகூர்ப். 58.) |
மாணிக்கவாளி | māṇikka-vāḷi n. <>id.+. An ear-ornament; காதணிவகை. (S. I. I. viii, 39.) |
மாத்திரை | māttirai n. <>mātrā. 1. An ear-ornament; காதணிவகை. செம்பொன் மாத்திரை செரீஇய காதினர் (பெருங். மகத. 17, 157) 2. (Mus.) Interval in the musical scale; quartertone; |
மாத்திரைச்சுதகம் | māttirai-c-cutakam n. <>மாத்திரை+. (Pros.) Māttirai-c-curukkam, a literary device; மாத்திரைச்சுருக்கம். (யாப். வி. பக். 510.) |
மாதப்படி | māta-p-paṭi n.<>மாதம்+. A tax; வரிவகை. (S. I. I. vii, 403.) |
மாதவமனோகரி | mātava-maṉokari n. <>mādhava+. (Mus.) A specific melody-type; இராகவகை. (பரத. ராக. பக். 103.) |
மாதவழி | māta-vaḷi adv. <>மாதம்+. Every month, monthly; மாதந்தோறும். மாதவழி நூறு பொன்னு முத்தார மென்றேன். (தெய்வச். விறலிவிடு. 295). |
மாதாரிக்கம் | mātārikkam n. A tax; வரி வகை. (M. E. R. 1913, p.122.) |
மாதிருபந்து | mātirupantu n. <>mātṟbandhu. (Legal.) Mother's ātma-bandhu; தாயின் ஆத்மபந்து. |
மாதுபர்ஜாமின் | mātupar-jāmiṉ n. <>Arab. mutabar+. Substantial security; போதிய பிணை. Madr. |
மாந்தாளி | māntāḷi n. (Mus.) A specific melody-type; இராகவகை. (பரத. ராக. பக். 104.) |
மாந்தோட்டுப்பச்சை | māntōṭṭu-p-paccai n. A kind of emerald; மரகதவகை. (S. I. I. vii, 22.) |
மாந்தோட்டுப்பொத்தி | māntōṭṭu-p-potti n. A kind of emerald; மரகதவகை. (S. I. I. vii, 53.) |
மாப்பட்டடை | māppaṭṭaṭai n. A tax; வரிவகை. (S. I. I. vii, 404.) |
மாப்பணம் | mā-p-paṇam n. 1. A coin; நாணயவகை. (S. I. I. v, 224.) 2. A tax; |
மாப்பதக்கு | māppatakku n. A tax; வரிவகை. (S. I. I. vii, 30.) |
மாப்பூச்சி | mā-p-pūcci n. prob. மா+. A kind of louse; பேன்வகை. (அபி. சிங்.) |
மாம்சபுக்கு | māmca-pukku n. <>māmsabhuk. Non-vegetarian; புலாலுண்பவ-ன்-ள். (சுக சந். 53.) |
மாம்பழவண்டு | māmpaḻa-vaṇṭu n. <>மாம்பழம்+. An insect inside some species of mango fruits; சிலவகை மாம்பழங்களுள் வாழும் வண்டுவகை. (அபி. சிந்.) |
மாமகம் | māmakam n. An ancient tax in cash; காசாயவகை. (S. I. I. i, 82.) |
மாமாத்தாத்தா | māmā-t-tāttā n. <>மாமா+. Father's or mother's maternal uncle; தாய்க்கு அல்லது தந்தைக்குத் தாயுடன் பிறந்த அம்மான். Brāh. |
மாமிசபேசி | māmicapēci, n. <>māmsa pēšī. Muscle; ஆடுசதை. (சுகசந். 66.) |
மாயம் | māyam n. Brass; பித்தளை. மாயமேகலா பாரம் வாரியே (தக்கயாகப். 502). |
மாயாக்காய் | māyākkāy n. cf. māyāphala. Gall-nut; மாசக்காய். (பரராச. i, 223.) |
மாயாசம்பிரதம் | māyā-campiratam n. <>māyā+. The magic art of causing the appearance of a town, forest, hill or river at a place; ஓரிடத்தில் ஊர்போலவும் வனம்போலவும் மலைபோலவும் நதிபோலவுந் தோற்றுவிக்குங் கலை. (சௌந்த. ஆனந். 30, உரை.) |
மாயி | māyin n. <>māyi Adherent of māyāvātam; மாயாவாதி. மாயியை நிஷேதிக்கைக்காக அர்த்தம் அருளிச்செய்கிறார் (ஈடு, 1, 5, 4, ஜீ.). |
மார்க்கண்டம் | mār-k-kaṇṭam n. <>மார்+. Breast; chest; நெஞ்சுப்பிரதேசம். மார்க்கண்டந் துடிக்குதிங்கே மணவாளன் மாண்டிருக்க (கோவ. க.). |
மார்க்கா | mārkkā n. perh. E. mark. Trade name; name or style under which a business is carried on; கடை முதலியவற்றின் விலாசம். Loc. |