Word |
English & Tamil Meaning |
---|---|
மாறொலி | māṟ-oli n. <> மாறு- +. Echo; எதிரொலி. Loc. |
மான்புள்ளிக்கண்டாங்கி | māṉ-puḷḷi-k-kaṇṭāṅki n. <> மான் + புள்ளி +. A kind of saree; சீலைவகை. Loc. |
மான்புள்ளிச்சேலை | māṉ-puḷḷi-c-cēlai n. <> id.+ id.+. A kind of saree; சீலைவகை. Loc. |
மானபோகம் | māṉa-pōkam n. prob. mānya +. Enjoyment of land, as ināmdār; மானிய அனுபவம். எங்கள் மானபோகமான பாப்பார வயல் (Pudu. Insc. 317). |
மானம்பார் - த்தல் | māṉam-pār- v. intr. <> வானம் +. To die; இறத்தல். Loc. |
மானவதி | māṉavati n. (Mus.) A primary rāga; மேளகர்த்தாக்களு ளொன்று (சங். சந். 47.) |
மானஸ்தன் | māṉastaṉ n. <> māna-stha. Man of self-respect; மானி. என்போலனைய மானஸ்தர்க் கெல்லாம் வசையாச்சே (பஞ்ச. திருமுக. 1409). |
மானாங்குலம் | māṉāṅkulam n. A linear measure, one-sixth of a tālam; நீட்டலளவுவகை. (சிற்பரத். 18.) |
மானாபரன் | māṉāparan n. <> māna + bhara. See மானஸ்தன். மானாபர ஞானியையன் (விறலிவிடு. 976). |
மானிறம் | māṉiṟam n. prob. மான் + நிறம். cf. மாநிறம். Fawn colour; tawny colour; வெளிறின மஞ்சள் நிறம். Loc. |
மானுயர் | māṉuyar n. <> manuja. Human beings; மக்கட் பிறப்பினர். மானுயரென்னப் படுபவர் (நீலகேசி, 86). |
மாஜினம் | mājiṉam n. <> Arab. mājun. An intoxicating drug prepared from hemp; கஞ்சாச் சேர்த்துச்செய்த லாகிரிப்பண்டவகை. (மதி. க. ii, 52.) |
மாஷகம் | māṣakam n. <> māṣa. A standard weight for weighing gold; பொன்னிறை வகை. (S. I. I. iii, 257-8.) |
மாஷபருணி | māṣaparuṇi n. prob. id. A pulse, Glycineri debilis; பயறுவகை. Pond. |
மிகுத்தம் | mikuttam n. <> மிகு-. cf. மிகுதம். Abundance; மிகுதி. (W.) |
மிகுத்தியல் | mikuttiyal n. A species of garlic pear; பெரியமாவிலிங்க வகை. (L.) |
மிச்சிரகம் | miccirakam n. prob. misraka. (Arith.) A mode of calculation; கணிதவகையுளொன்று. (யாப். வி. 528.) |
மிடறுசெய் - தல் | miṭaṟu-cey- v. intr. <> மிடறு +. To raise one's voice; பெருங்குரலெடுத்தல். (ஈடு, 3, 8, ப்ர.) |
மிடறுதின்(னு) - தல் | miṭaṟu-tiṉ- v. intr. <> id.+. To irritate in the throat; தொண்டையில் அரிப்புண்டாதல். மிடறுதின்றால் சொறிய வொண்ணாதாற்போல (திங். பெரியதி. 1, 1, 5, வ்யா. பக். 37). |
மிடை | miṭai n. <> மிடை-. Closeness; நெருக்கம். பசுக்களை மிடையற மேய்க்கும்படி பண்ணினவனே (திங். பெரியாழ். 2, 3, 7, வ்யா. பக். 292). |
மித்தியாபுருஷன் | mittiyā-puruṣaṉ n. <> mithyā +. Non-existent thing; இல்பொருள். ககனாரவிந்த மித்தியாபுருஷன் போலவே காலத்திரயத்திலுந் தனக்கில்லை (சத். பிர. பக். 82). |
மித்திரஸப்தமி | mittira-saptami n. <> mitra +. The captami titi falling on a Sunday; ஞாயிற்றுக்கிழமை வருஞ் சப்தமிதிதி. (பஞ்.) |
மிதக்கங்காய் | mitakkaṅkāy n. cf. முதுக்கங்காய். Country cucumber; தும்மட்டி. (யாழ். அக.) |
மிதுக்காய் | mitukkāy n. cf. மிதுக்கை. See மிதக்கங்காய். (வைத். மூ.) . |
மிர்தம் | mirtam n. <> mrta. Death; மரிப்பு. மிர்த மதனன் (தக்கயாகப். 35). |
மிருகசீவன் | miruka-cīvan n. <> mrga +. Animal; நாற்காற் பிராணி. Colloq. |
மிருகவியாதன் | miruka-viyātaṉ n. <> id.+. A Rudra; உருத்திரரு ளொருவர். (தக்கயாகப். 443, உரை.) |
மிருகாசயம் | mirukācayam n. <> id.+ āšaya. Menagerie; மிருகங்களை வைத்திருக்கும் இடம். Mod. |
மிருதகல்பன் | mirutakalpaṉ n. <> mrta-kalpa. One who is as good as dead; செத்தவனுக்குச் சமானமானவன். பெற்றவழி மிருதகல்பனாய் (நீலகேசி, 429, உரை). |
மிருதிடு - தல் | mirutiṭu- v. tr. <> மிருது +. 1. To polish; மெருகிடுதல். Pond. 2. To rub and smoothen; |
மிருதுவாசகம் | mirutu-vācakam n. <> id.+. Gentle speech; மென்மொழி. எந்த வேளையு மிருதுவாசகமே (சர்வசமய. பக். 202). |