Word |
English & Tamil Meaning |
---|---|
முக்கூட்டு | mu-k-kūṭṭu n. <> மூன்று +. Junction, where three paths meet; மூன்று வழிகள் சேரும் இடம். |
முக்கோணி | mukkōṇi n. <> முக்கோணம். Pārvatī, as residing in the mystic triangle; பார்வதி. சக்தி கௌரி முக்கோணி (பேரின்பக்கீர்த். பக். 55). |
முக்தியார் | muktiyār n. <> U. mukhtār. Agent; காரியத்தலைவன். (M. E. R. 163 of 1931-32.) |
முகக்காறை | muka-k-kāṟai n. <> முகம் +. A kind of ornament; அணிவகை. (M. E. R. 720 of 1916-B.) |
முககட்டணம் | muka-kaṭṭaṇam n. <> id.+. Porch; கட்டட முகப்பு. (S. I. I. viii, 21.) |
முகச்சாயை | muka-c-cāyai n. <> id.+. Facial features; முகச்சாடை. Colloq. |
முகச்சேஷ்டை | muka-c-cēṣṭai n. <> id.+. Grimace; முகத்தாற்காட்டடுங் கோரணி. Pond. |
முகட்டறை | mukaṭṭaṟai n. <> முகடு +. Garret; முகட்டுவீட்டில் உத்தரமட்டத்திற்கு மேலுள்ள அறை. Pond. |
முகட்டுக்கால் | mukaṭṭu-k-kāl n. <> id.+. High level channel; மேட்டுமடையின் கால். (S. I. I. iii, 347.) |
முகட்டுப்பாய்ச்சு | mukaṭṭu-p-pāyccu n. <> id.+. Ridge piece; முகட்டுவளை. (யாழ். அக.) |
முகடு | mukaṭu n. prob. முகம். Nipple; முலைமுகம். (நாநார்த்த. 10.) |
முகத்தூண் | muka-t-tūṇ n. <> id.+. Front pillar; முகப்புத் தூண். (பெருங். உஞ்சைக். 58, 54.) |
முகத்தைக்காட்டு - தல் | mukattai-k-kāṭṭu v. intr. <> id.+. To express unwillingness by facial signs; சம்மதமின்மையை முகக்குறிப்பால் தோற்றுவித்தல். ஒரு காரியத்தில் ஏவினால் முகத்தைக் காட்டுகிறான். Loc. |
முகத்தைத்துடை - த்தல் | mukattai-t-tuṭai v. intr. <> id.+. To console; தேற்றுதல். Loc. |
முகநாடி | muka-nāṭi n. <> id.+. A treatise on the diagnosis of diseases by an examination of the face and of the breath of the nostrils; முகத்தையும் மூக்கில் ஓடுஞ் சரத்தையும் பார்த்து நோயின்தன்மை கூறும் நூல். (தஞ். சர. iii, 191.) |
முகப்பந்தல் | muka-p-pantal n. <> id.+. Pandal in front of a house; வீட்டின்முன் போடும் பந்தல். முத்துவளைத்து முகப்பந்தலிட்டார்கள். (சித். நாய. 46). |
முகம் | mukam n. <> mukha. Kind, class; வகை. பல முகங்களான கலக்கங்கள் நேரிட்ட சமயத்தில் (ரஹஸ்ய. 4). |
முகவசனம் | muka-vacaṉam n. <> id.+. Talk, words; வாய்ச்சொல். சுப்பு ஓதுவார் முகவசனத்தாலும் விசதமாகுமே (மீனாட். சரித். ii, 310). |
முகவணை | mukavaṇai n. Corr. of முகவீணை. A kind of Indian clarionet; இசைக்கருவி வகை. முகவணையை வாசி (பணவிடு. 183). |
முகவரை | muka-v-arai n. <> முகம் +. Central stone in a jewel; அணியின் நாயகக்கல். முகவரை என்று பாடமாம்போது, நாயகக்கல்லுபோலே பாட்டுக்களுக்கெல்லாம் ப்ரகாசகமாயிருக்கும் (திவ். திருப்பல். 2, வ்யா. பக். 34). |
முகவளை | muka-vaḷai n. <> id.+. Bangle of shorter size, worn as a keeper; வளைகள் கழலாதிருக்க அணியுந் தடைவளையம். வளைக்கு முகவளை (குலோத். கோ. 505). |
முகவார் | muka-vār n. <> id.+. Headstall, halter; குதிரை முதலானவைகட்கு முகத்திலிடுங் கயிறு. Pond. |
முகவுரை | muka-v-urai n. <> id.+. (திவ். திருபபல். 1, வ்யா. பக். 34.) 1. Introductory entry of date, etc., in daily account; கணக்குப்புத்தக முதலியவற்றின் தலைப்பில் எழுதும் வருஷம் மாதம் தேதி முதலிய குறிப்பு. 2. Auspicious expression, at the commencement of an epistle, etc.; |
முகுட்டை | mukuṭṭai n. cf. முகட்டுப்பூச்சி. Bug; மூட்டைப்பூச்சி. உண்ணி முகுட்டை யெறும்பு (நீலகேசி, 79). |
முசிவு | mucivu n. <> முசி-. Crumpling; கசங்குகை. திருப்பரியட்டத்தைக் கொண்டு வசைவும் முசிவுமற விரித்துச்சாத்தி (திவ். பெரியாழ். 3, 4, 2, வ்யா. பக். 594). |
முசீபத்து | mucīpattu n. <> Arab. musībat. Distress; misfortune; துன்பம். முசீபத்தைப் போக்கிப் பரக்கத்து உண்டாக்கும் (மதி. க. ii, 94). |
முசுமுசுப்பு | mucumucuppu n. Eager attention; earnestness; சிரத்தை. சீராட்டி வளர்த்த முசுமுசுப்பெல்லாம் திருநிறத்திலே தோன்றும்படியிருக்கும் (திவ். பெரியாழ். 1, 2, 12, வ்யா. பக். 38). |
முட்குடப்பழம் | muṭ-kuṭa-p-paḻam n. <> முள் + குடம்+. Jackfruit; பலாப்பழம். முட்குடப்பழமெல்லா மிடறி (திருச்செந்தூர். பிள்ளை. செங். 4). |