Word |
English & Tamil Meaning |
---|---|
முத்துப்பேய்ச்சி | muttu-p-pēycci n. A village goddess; ஒரு கிராமதேவதை. (பஞ்ச. திருமுக. 671.) |
முத்துராக்கு | mutturākku n. A village goddess; ஒரு கிராமதேவதை. முத்துராக்கு முத்துப்பேய்ச்சி ரணவீரி (பஞ்ச. திருமுக. 671). |
முதல் | mutal n. Document; பத்திரம். இந்த முதல் இற்றைநாள் முதலியான் காட்டுகையில் (S. I. I. v, 90). |
முதல்நூல் | mutal-nūl n. <> முதல் +. Primer; ஆரம்ப பாடநூல். கூட்டுறவு முதல்நூல். Mod. |
முதலி | mutali n. <> முதல். Chief officer of the state; பிரதான அரசாங்க அதிகாரி. (M. E. R. 1923-24, p. 103.) |
முதவல்லி | mutavalli n. See முத்தவல்லி. Loc . |
முதற்றிரமம் | mutaṟṟiramam n. <> முதல் + திரமம். A tax; வரிவகை. (Colas, ii, 334.) |
முதன்மரியாதை | mutaṉ-mariyātai n. <> id.+. First honours; முதலிற் செய்யும் மரியாதை. |
முதுக்கங்காய் | mutukkaṅkāy n. cf. மிதக்கங்காய். Country Cucumber; தும்மட்டிக்காய். Loc. |
முதுக்கள் | mutukkaḷ n. <> முது-மை. Ancestors; முன்னோர். எங்கள் முதுக்கள் ஒற்றி வைக்கையில் (Pudu. Insc. 317). |
முதுகண் | mutu-kaṇ n. <> id.+. Guardian; காப்பாளன். சந்தரப்பட்டனையே முதுகண்ணாகவுடைய (S. I. I. v, 272). |
முதுகால் | mutu-kāl n. <> id.+. Leaves at the middle of the betel vine; வெற்றிலைக் கொடியின் மத்தியிலுள்ள இலை. (மதி. க. ii, 55.) |
முதுதறை | mutu-taṟai n. <> id.+. Barren ground; பாழ்நிலம். நீர்நிலமும் முதுதறையும் (Pudu. Insc. 361, p. 233.) |
முதுநீர்மலையாளர் | mutu-nīr-malaiyāḷar n. <> id.+. A sect of hill-men; மலையில் வாழும் ஒருவகைச் சாதியார். (S. I. I. vii, 49.) |
முதுப்போக்கன் | mutuppōkkaṉ n. Cook; சமையற்காரன். Loc. |
முந்நீர் | mu-n-nīr n. <> மூன்று +. The three kinds of liquids, viz., milk of tender cocoanut, sugared water and juice of sugarcane; இளநீர் சர்க்கரைநீர் கன்னலினீர் என்பன முந்நீ ரடைக்காயும் படைத்து (ஞானதீக்ஷை, 4). |
முப்பட்டையரம் | muppaṭṭai-y-aram n. <> id.+ பட்டை. Corner file; மூன்று பட்டைகள் அமைந்த அரவகை. Loc. |
முப்பறமுந்நாழி | muppaṟamunnaḻi n. A tax; வரிவகை. (T. A. S. iii, 216.) |
முப்பால் | mu-p-pāl n. <> மூன்று +. The three kinds of land, viz., vaṉpāl, meṉpāl and cama-p-pāl; வன்பால் மென்பால் சமப்பால் என்ற மூவகை நிலங்கள். |
முர்தார் | murtār n. prob. முதாரி. Leaves at the bottom of the betel vine; வெற்றிலைக் கொடியின் அடிப்பகுதியிலுள்ள வெற்றிலை. (மதி. க. ii, 55.) |
முரசகேதனன் | muraca-kētaṉaṉ n. <> முரசம் +. Dharmaputra, as having the drumemblem on his banner; [முரசைக் கொடியாகவுடையவன்] தருமபுத்திரன். காமேவு முரசகேதனனுள் மகிழ்ந்திட (பழனிப்பிள்ளைத். காப்பு. 2). |
முரண்மொழி | muraṇ-moḻi n. <> முரண் +. (Pros.) A defect in versification; செய்யுட்குற்றங்களு ளொன்று. (யாப். வி. பக். 525.) |
முருந்து | muruntu n. Stalk of flower; பூவின் தாள். பூமுருந்துங் குருந்துஞ் செருந்தும் பொருந்து மூட்டுடன் (குருகூர்ப். 6). |
முல்லங்கிமோகரா | mullaṅki-mōkarā n. An ancient coin; பழைய நாணயவகை. (சரவண. பணவிடு. 62.) |
முலாஜா | mulājā n. <> Arab. mulāhizā. Compassion; தயவு. (தாசீல்தார்நா. பக். 82). |
முலைத்தடம் | mulai-t-taṭam n. <> முலை +. cf. முலைத்தளம். An ornament; அணிவகை. (M. E. R. 720 of 1916-B). |
முலையெழு - தல் | mulai-y-eḻu- v. intr. <> id.+. To become an adolescent girl; பெண் பருவமடைதல். பிராட்டி முலையெழுந்தாப்போலேயோ நான் முலையெழுந்தபடி (திவ். நாய்ச். 8, 4, வ்யா.). |
முழங்காற்கரப்பான் | muḻaṅkār-karap-pāṉ n. <> முழங்கால் +. A kind of karappāṉ disease; கரப்பானோய்வகை. (தஞ். சர. iii, 92.) |
முழவரிசை | muḻavaricai n. A tax; வரிவகை. (S. I. I. vii, 51.) |
முழுக்கூழ் | muḻu-k-kūḻ n. <> முழு-மை +. Utter confusion; கலக்கம். செய்தாய் முழுக்கூழ் (நீலகேசி, 399). |
முழுந்து - தல் | muḻuntu- 5 v. tr. perh. முழுங்கு-. To swallow; விழுங்குதல். முத்திப் பராமிழ்த முழுந்திட (பாடு. 92, 7). |