Word |
English & Tamil Meaning |
---|---|
முழுவோட்டம் | muḻu-v-ōṭṭam n. <> முழுமை +. Gallop; வேகமாக ஓடுகை. Pond. |
முள்ளிப்பாலை | muḷḷi-p-pālai n. prob. முள்ளி +. Vatu-maram. a tree; வதுமரம். (சங். அக.) |
முள்ளுக்குத்தினகண்டமாலை | muḷḷu-k-kuttiṉa-kaṇṭamālai n. <> முள்ளு + குத்து- +. A kind of scrofula; கண்டமாலைவகை. (பரராச. i, 254). |
முளகார் | muḷakār n. Broom; வாருகோல். Naṭ. Cheṭṭi. |
முளைதண்டல் | muḷai-taṇṭal n. <> முளை +. Obtaining grains of paddy from a few houses for the ceremony of sowing them in pots, in a marriage; திருமணத்திற் சிலவீடுகட்குச் சென்று பாலிகைதெளிக்க முளைநெல் வாங்கிவருகை. Loc. |
முளைப்பயறு | muḷai-p-payaṟu n. <> id.+. A kind of preparation, made of green gram; பயற்றுப்பணிகாரவகை. முளைப்பயற்றுக்குப் பயறு (S. I. I. vii, 300). |
முற்காரமுத்திரை | muṟkāra-muttirai n. prob. mudgara +. A hand-pose; முத்திரை வகை. (சைவாநு. வி. 20.) |
முற்கூறு - தல் | muṟ-kūṟu- v. tr. <> முன் +. To proclaim, announce, as sale; முன்னதாக அறிவித்தல். கொள்வாருளரோ என்று முற்கூற (S. I. I. iv, 285). |
முற்சேர்பு | muṟ-cērpu n. <> id.+. Preface, etc., added at the beginning of a book; முன்னுரையாகச் சேர்க்கப்பட்டது. Mod. |
முற்பணையாம் | muṟ-paṇaiyam n. <> id.+. Advance, earnest; முன்பணம். உற்றவரை முற்பணையங் கேளாதே (தெய்வச். விறலிவிடு. 331). |
முற்பாடு | muṟ-pāṭu adv. <> id.+ படு-. At first; at the beginning தொடக்கத்தில். முற்பாடு துன்பம் உறவரினும் துணிந்து செய்க (குறள், 667, மணக்.). |
முற்றனவு | muṟṟaṉavu n. <> முற்று-. Maturity, full growth; முதிர்ச்சி. (பழ. 171, உரை.) |
முறியக்குத்து - தல் | muṟiya-k-kuttu- v. tr. <> முறி- +. To defeat; தோற்கடித்தல். (Insc.) |
முறிவு | muṟivu n. <> முரி-. A flaw in diamonds; வைரக்குற்றவகை. (S. I. I. ii, 78). |
முறுவல் | muṟuval n. Lettuce-tree, laughing tree; இலச்சைகெட்டமரம். (L.) |
முறைபிறழ்வைப்பு | muṟai-piṟaḻ-vaippu n. <> முறை + பிறழ்- +. (Pros.) A defect in poetic composition; செய்யுட்குற்றங்களு ளொன்று. (யாப். வி. பக். 525.) |
முறைமைப்பிள்ளை | muṟaimai-p-piḷḷai n. <> முறைமை +. Legitimate son; ஔரச புத்திரன். Pond. |
முறையோ | muṟaiyō int. <>முறை. An interjectory word demanding justice; முறை வேண்டினார் அநியாய நிகழ்ச்சிபற்றி இடுங் கூப்பீடு. எம்பெருமானே முறையோ (திருவையாற்றுப்பு. சைவச. 8). |
முன்சாக்கிரதை | muṉ-cākkiratai n. <> முன் +. Precaution; எச்சரிக்கை. Loc. |
முன்பிதாக்கள் | muṉ-pitākkal n. <> id.+. Forefathers; பிதிர்க்கள். Pond. Manes; |
முன்பேறு | muṉ-pēṟu n. <> id.+. 1. Security; ஜாமீன்தொகை. Loc. 2. Advance money; |
முன்மண்டபம் | muṉ-maṇṭapam n. <> id.+. Front hall of a temple; கோயிலின் முகமண்டபம். Loc. |
முன்மாலை | muṉ-mālai n. <>id.+. Temple garland first offered to a person, as an honor; மரியாதையாக முதலில் ஒருவர்க்கு அளிக்கப்படுங்கோயில்மாலை. கோயிலில் முன்னொடுக்கும் முன் மாலையும் (Pudu. Insc. 710). |
முன்வாசல் | muṉ-vācal n. <>id.+. Front gate of a house; வீட்டின் முன்பக்கத்து வாயில். Colloq. |
முன்னணியம் | muṉ-ṉ-aṇiyam n. <>id.+. Bow of a ship; கப்பலின் முன்பக்கம். (M. Navi.) |
முன்னாக | muṉ-ṉ-āka adv. <>id.+ஆ-. First, at the outset; முன்னதாக. ஒரு ஆசார்யன் ஸ்ரீபாதத்திலே இயல் முன்னாகக் கற்று (திவ். பெரியாழ். 3, 3, 10, வ்யா. பக். 588). |
முன்னாடி | muṉṉāṭi adv. <>id.+நாடு-. See முன்னாக. Loc. . |
முன்னிடும்பணம் | muṉ-ṉ-iṭum-paṇam n. <>id.+இடு-+. An ancient tax; பழையவரி வகை. (S. I. I. vii, 46.) |
முன்னொடுக்கு | muṉ-ṉ-oṭukku n. <>id.+ That which is first paid; முன்னாலே செலுத்தியது (Pudu. Insc. 710.) |
முன்னோடி | muṉ-ṉ-ōṭi n. <>id.+. Spy; உளவுகாரன். Pond. |
முன்ஷி | muṉṣi n. <>Arab. munshī. Teacher of a language; பாஷை கற்பிக்கும் போதகன். |