Word |
English & Tamil Meaning |
---|---|
முனாசப் | muṉācap adj. <>Arab. munāsib. Proper; நியாயமான. முனாசப் தீர்வை (P. T. L.) |
முனிப்பாய்ச்சலாய் | muṉi-p-pāyccalāy adv. <>முனி+. Suddenly; quickly; திடீரென. முனிப்பாய்ச்சலாய்ப் பாய்ந்து (சரவண. பணவிடு. 161). |
முனுச்சி | muṉ-ucci n. <>முன்+உச்சி. 1. Fore part of the head; நெற்றியின் மேலிடம். 2. Forelock; |
முனைக்கடல் | muṉai-k-kaṭal n. <>முனை+. Cape; கடல்முனை. Mod. |
முஜரா | mujarā n. <>Arab. majrā. Direction; திக்கு. (M. Navi.) |
முஷரப் | muṣarap n. <>Arab. mushrif. Accountant, examiner of accounts; கணக்குப் பரிசோதகன். (P. T. L.) |
முஸ்தீது | mustītu n. <>Arab. mustaid. Preparedness; ஆயத்தம். Pond. |
மூக்கரண்டி | mūkkaraṇṭi n. perh. மூக்கரட்டை. Spreading hogweed; கொடிவகை. (T. C. M. ii, 2, 632.) |
மூக்கரிசியுடைதல் | mūkkarici-y-uṭaital n. <>மூக்கு+அரிசி+. Bleeding from the nose; மூக்கிலிருந்து இரத்தம் ஒழுகுகை. Tp. |
மூக்கன்சம்பா | mūkkaṉ-campā n. prob. id.+. A kind of campā paddy; சம்பாநெல்வகை. மூக்கன்சம்பாச் சிறிய முள்ளுச்சம்பா (நெல்விடு. 181). |
மூக்குக்கணம் | mūkku-k-kaṇam n. <>id.+. A disease; கணைநோய்வகை. (பாலவா. 41.) |
மூக்குநீர்ப்பாய்ச்சல் | mūkku-nīr-p-pāy-ccal n. <>id.+நீர்+. A kind of disease; நோய்வகை. (தஞ். சர. iii, 132.) |
மூங்கிற்சம்பா | mūṇkiṟ-campā n. <>மூங்கில்+. A kind of campā paddy; சம்பாநெல் வகை. நெடுமூக்கன் அரிக்கராவி மூங்கிற்சம்பா (முக்கூடற். 97). |
மூங்கைமை | mūṅkaimai n. <>மூங்கை. Dumbness; ஊமைத்தன்மை. தலைசாய்த் தங்கிருந்தார் மூங்கைமையால் (நீலகேசி, 271). |
மூசைப்புல் | mūcai-p-pul n. <>மூசை+. Mistletoe berry thorn; சங்கஞ்செடி. (சங். அக.) |
மூஞ்சூறுவாணம் | mūcūṟu-vāṇam n. <>மூஞ்சூறு+. A kind of rocket; ஆகாசவாண வகை. (W.) |
மூட்டு | mūṭṭu n. <>மூட்டு-. The part of a mirutaṅkam, comprising the vaḷaiyam, tōl, and cāṭṭaivār; வளையம் தோல் சாட்டைவார் மூன்றும் சேர்ந்த மிருதங்கத்தின் பகுதி. (கலைமகள், xii, 399.) |
மூடலை | mūṭalai n. <>மூடம். Lack of sense; மதிகேடு. மூடலையாவதன் காரணமென்னை (நீலகேசி, 380). |
மூடுதூறு | mūṭu-tūṟu n. <>மூடு-+. Winding sheet; பிரேதச்சீலை. Pond. |
மூத்திரப்பாளம் | mūttira-p-pāḷam n. <>மூத்திரம்+. A disease of the urinary-organs; மூத்திரநோய்வகை. (தஞ். சர. iii, 140.) |
மூதண்டம் | mūtaṇṭam n. Bermuda grass; அறுகு. மூதண்ட லேகியம். Loc. |
மூதலிப்பி - த்தல் | mūtalippi- 11 v. tr. cf. மூதலி-. To cause to prove; ருசுப்படுத்துதல். ஸ்ரீபீஷ்மர் முதலான ஜ்ஞாநாதிகரையிட்டு முதலிப்பித்தும் (ரஹஸ்ய. 33). |
மூந்திக்கருக்கல் | mūnti-k-karukkal n. <>முந்தி+. Evening twilight; அந்திநேரம். Tinn. |
மூபலகு | mūpalaku n. <>Arab. mablagh. Total, especially when written in words; எண்ணினாலன்றி எழுத்தால் தெரிவிக்கும் மொத்தத்தொகை. |
மூர்ச்சை | mūrccai n. <>mūrcchā. (Mus.) Distinguishing marks of a musical mode; ஓர் இராகத்தின் சிறப்பியல்பு. (கனம்கிருஷ்ணையர், 16.) |
மூர்த்தன்னியம் | mūrttaṉṉiyam n. <>mūrdhanya. Colloq. 1. Prominence; பிரதானம். 2. Highhandedness; |
மூர்த்திகரம் | mūrtti-karam n. <>mūrti+. Sanctity; தெய்விகம். இந்தக்கோவில் மூர்த்திகரத்துக்குப் பின்னம் நேரிட்டிருக்கிறதென்று (தாசீல்தார்நா. பக். 30). |
மூரிப்போ - தல். | mūri-p-pō- v. intr. <>மூரி+. To become weak by age; முதுமையால் வலிமையற்றுப்போதல். முன்பே மூரிப்போய்ப் பல விடங்களிலும் பூண்கட்டிக்கிடக்கிறதொரு சொத்தை வில்லை (திவ். பெரியாழ். 3, 9, 2, வ்யா. பக். 771). |
மூலக்கல்வி | mūla-k-kalvi n. <>மூலம்+. Elementary education; ஆரம்பக்கல்வி. மூலக்கல்வி நாங்கள் வாசித்தா லாபத்தோ (பெண்மதிமாலை, பக். 29). |