Word |
English & Tamil Meaning |
---|---|
மேட்டேற்றம் | mēṭṭēṟṟam n. <>மேடு+. High land; மேட்டுநிலம். (S. I. I. iii, 288.) |
மேடுகல்லு - தல் | mēṭu-kallu- v. intr. <>id.+. To level down, by digging up the high ground; மேட்டுநிலத்தை வெட்டிச் சமமாக்குதல். (S. I. I. vii, 277.) |
மேதாவிலாசம் | mētā-vilācam n. <>mēdhā+vilāsa. Genius; மிக்க இயற்கையறிவு. Mod. |
மேமூட்டைபோடு - தல் | mē-mūṭṭai-pōṭu- v. intr. <>மேல்+மூட்டை+. To deceive; ஏமாற்றுதல். Colloq. |
மேமூட்டையாசாமி | mē-mūṭṭai-y-ācāmi n. <>id.+id.+. Cheat; வஞ்சகன். Colloq. |
மேய்ச்சற்றலை | mēyccaṟṟalai n. <>மேய்ச்சல்+. Pasture land; meadow; மேய்ச்சற்றரை. கன்றுகளுக்கு மேய்ச்சற்றலை பார்க்கையாலும் (திவ். பெரியாழ். 3, 3, 4, வ்யா. பக். 570). |
மேராழி | mērāḻi n. A tax in money; காசாயவகை. (S. I. I. iv, 195.) |
மேல்காயர் | mēl-kāyar n. <>மேல்+perh. Persn. kār. Superstructure; கட்டடத்தின் மேற்கோப்பு. Loc. |
மேல்பீட்டி | mēl-pīṭṭi n. <>id.+. Breast of a garment; சட்டையின் மேற்பாகம். Loc. |
மேல்விலங்கு | mēl-vilaṅku n. <>id.+. (Gram.) Sign of i, ī, in vowel-consonants; உயிர்மெய்களில் இகர ஈகாரங்களைக் குறிக்க மெய்கள் மேல் இடும் குறியீடு. (தொல். எழுத். 17, உரை.) |
மேலடி | mēl-aṭi n. <>id.+. Tax paid in kind; தானியமாகச் செலுத்தும் இறை. (T. A. S. vi, 41.) |
மேலத்து | mēlattu n. perh. id.+prob. U. hadd. Superior airs; பெருமிதம். மிகமேலத்தாய்ப் பேசிவெளிப் பகட்டாய் (பஞ்ச. திருமுக. 970). |
மேலாமரம் | mēlāmaram n. A kind of fishermen's instrument; பட்டினவரின் கருவிவகை. (அபி. சிந்.) |
மேலாவலை | mēlāvalai n. A kind of fishing net; மீன்பிடிக்கும் வலைவகை. (அபி. சிந்.) |
மேலாள் | mēl-āḷ n. <>id.+. Loc. 1. Caste Hindu; நாற்சாதியு ளொன்றைச் சேர்ந்தவன். மேலாளா? கீழாளா? 2. Overseer, supervisor; |
மேலெழ | mēleḻa adv. <>மேலெழு-. Superficially, on the surface; மேலுக்கு. மேலெழச் சிறிது கலங்கிற்றாகிலும் (ஈடு, 1, 4, 3, வ்யா. பக். 183). |
மேலெழுத்து | mēl-eḻuttu n. <>மேல்+. 1. Senior clerk; தலைமை யெழுத்தாளன். (M. E. R. 565 of 1926.) 2. Signature of a superior officer approving the order of his subordinate; |
மேலைநெற்றி | mēlai-neṟṟi n. <>id.+. The third eye of šiva on His forehead; சிவபிரானது நெற்றிக்கண். இறைவர்தம் மேலைநெற்றி விழிக்க (தக்கயாகப். 334). |
மேலோசனை | mēl-ōcaṉai n. <>id.+. யோசனை. Foresight; முன்யோசனை. (தெய்வச். விறலிவிடு. 80.) |
மேலோடு - தல் | mēl-ōṭu- v. intr. <>id.+. To attack, rush against; எதிர்த்துத்தாக்குதல். மெய்சொல்லா விராவணனை மேலோடி யீடழித்து (தேவா. 158, 2). |
மேலோலை | mēl-ōlai n. <>id.+. 1. Letter of authority; அதிகாரமளிக்குஞ் சீட்டு. 2. Covering letter; |
மேவுபர்சாத்கணக்கு | mēvuparcāt-kaṇ-akku n. <>Hind. men + Hind. barsāt+. Record of rainfall; மழைபெய்த அளவைக் காட்டுங்கணக்கு. (P. T. L.) |
மேற்கருமம் | mēṟ-karumam n. <>மேல்+. Want, need; குறை. அவர்களுக்குண்டாகிய மேற்கருமம் அந்தக் காரியப்பேர்களாலே தீர்க்கப்பட்டாற்போல (சங்கற்பநி. 2, உரை, பக். 24). |
மேற்கோண்மலைவு | mēṟkōṇ-malaivu n. <>மேற்கோள்+. (Rhet.) A defect in poetic composition; செய்யுட்குற்றங்களு ளொன்று. (யாப். வி. பக். 525.) |
மேற்கோள் | mēṟ-kōḷ n. <>மேல்+. Set purpose; உறுதிப்பாடான நோக்கம். ஒழியாமலுலகுய்யக் கொள்வனென்னு மேற்கோளுடையான் (நீலகேசி, 188, உரை). |
மேற்பயிர் | mēṟ-payir n. <>id.+. Corn, large vegetables and trees; மரம் செடி முதலியன. (R.). |
மேன்படை | mēṉ-paṭai n. <>id.+. Reserve force; மூலபலம். (R.). |
மேன்பாட்டுக்குரு | mēṉpāṭṭu-k-kuru n. <>மேன்பாடு+. High priest; பிரதான குரு. Pond. |
மேனடைநீர் | mēṉaṭai-nīr n. <>மேல்+நடை+. Surplus water; அதிகப்படியாகவுள்ள நீர். மேனடைநீர் பாயவும் (S. I. I. iii, 411). |