Word |
English & Tamil Meaning |
---|---|
மேனத்து | mēṉattu n. See மேலத்து. Tinn. . |
மேனாம்பு | mēnāmpu n. perh. மேல் + நா + வம்பு. Harsh word, offensive language; அவமதிச்சொல். கண்டாற் புலவரை மேனாம்பு பேசுசுங்கசடர் (பெருந்தொ.1336). |
மேனிச்சம்பா | mēṉi-c-campā n. <>மேனி+. A kind of campā paddy; சம்பாநெல்வகை. (தமிழன்.) |
மேஜாடு | mējāṭu n. prob. மேஜை+. Goat; ஆடு. வருகிற போகிற சில துரைகளுக்குக் கொழுத்த மேஜாடும் (தாசீல்தார்நா. பக். 8). |
மேஷசிருங்கி | mēṣa-ciruṅki n. <>mēṣa+šriṅgī. Wormkiller; ஆடுதின்னாப்பாளை. |
மேஷவிஷாணிகை | mēṣa-viṣāṇikai n. <>id.+viṣāṇi. See மேஷசிருங்கி. . |
மை | mai n. Ignorance; அஞ்ஞானம். மைதபு ஞான மனத்திடையொன்றும் (பாகவத. 8, வாமனாவ. 32). |
மைகோதி | mai-kōti n. prob. மயிர்+. Comb; சீப்பு. சுவரின்மேல் மைகோதியும் ஈர்கோலியுமே கிடக்கின்றன (எங்களூர், 127). |
மைந்து | maintu n. Child; பிள்ளை. (திவ். பெரியாழ். 1, 1, 8, வ்யா. பக். 16). |
மைப்பு | maippu n. Rottenness, as of wood; மரம் முதலியன உளுத்திருக்கை. |
மைப்பேறு - தல் | maippēṟu- v. intr. <>மைப்பு+. To become rotten, as wood; மரம் முதலியன உளுத்துப்போதல். |
மையக்கவர்ச்சி | maiya-k-kavarcci n. <>மையம்+. Centripetal force; ஒரு பொருளின் சுற்றெல்லைக்குட்பட்ட அணுக்கள் அப்பொருளின் மையத்தை நோக்கி நெருங்குஞ் சக்தி. Mod. |
மையநாட்டம் | maiya-nāṭṭam n. <>id.+ Gravitation; ஒரு பொருளை மற்றொருபொருள் இழுக்கும் ஆகருஷணசக்தி. Mod. |
மையநூக்கம் | maiya-nūkkam n. <>id.+. Centrifugal force; ஒரு பொருளின் மத்தியிலுள்ள அணுக்கள் அப்பொருளின் சுற்றெல்லையை நோக்கிப் போகுஞ் சக்தி. Mod. |
மையுறிஞ்சி | mai-y-uṟici n. <>மை+. Blotting paper; மை யொற்றி. Mod. |
மொக்கட்டையீனம் | mokkaṭṭai-y-īnam n. Disrespect; மதிப்புக்கேடு. (யாழ். அக.) |
மொச்சம் | moccam n. cf. மோசம். Plantain; வாழை. (சங். அக.) |
மொசுகுமொசுகெனல் | mocuku-mocuk-eṉal n. Onom. expr. of being resonant; நாதம் நிரம்புதற் குறிப்பு. மொசுகுமொசுகென் றிருக்கிற நாதத்தை யுடைத்தா யிருக்கையாலும் (திவ். அமலனாதி. 6, வ்யா. பக். 71). |
மொசுமொசெனல் | mocumoceṉel n. Expr. signifying luxuriant growth; செழித்து வளர்தற்குறிப்பு.மொசுமொசென்று வளர்ந்த பெரிய வடிவும் (திவ். அமலனாதி. 9, வ்யா. பக். 103). |
மொட்டூசி | moṭṭūci n. <>மொட்டு+. Pin; குண்டூசி. Loc. |
மொட்டைக்கட்டை | moṭṭai-k-kaṭṭai n. <>மொட்டை+. Nakedness, nudity; அம்மணம். Tp. |
மொட்டைக்கோதுமை | moṭṭai-k-kōtumai n. <>id.+. A kind of wheat; கோதுமைவகை. (விவசா. 3.) |
மொட்டைத்தனம் | moṭṭai-t-taṉam n. <>id.+. 1. Shaven condition, as of head; முண்டிதம். Pond. 2. Foolishness; |
மொட்டைப்பையன் | moṭṭai-p-paiyaṉ n. <>id.+. Boy of bad conduct; துர்நடத்தையுள்ள சிறுவன். Tp. |
மொண்டளியன் | moṇṭaḷiyaṉ n. A kind of sea-fish; கடல்மீன்வகை. Loc. |
மொத்தி | motti n. cf. மொத்தை. Dullwitted woman; புத்தியில்லாதவன். Tp. |
மொதக்கொண்டை | motakkeṇṭai n. cf. மதுக்கெண்டை. A kind of keṇṭai fish; கெண்டைமீன்வகை. (R.) |
மொய் | moy n. 1. Beauty; அழகு. மொய்யகலத்துள் யிருப்பாள் (திவ். திருநெடுந். 19). 2. Country fig; |
மொய்ப்பு | moyppu n. prob. மொய்-. Crowd, multitude; கூட்டம். Pond. |
மொயின்சாபிதா | moyiṉ-cāpitā n. <>மொயின்+. List of revenue establishment; அரசிறை யுத்தியோகஸ்தர் பட்டி. (G. sm. D. I, i, 283.) |