Word |
English & Tamil Meaning |
---|---|
அடசு - தல் | aṭacu- 5 v.intr. <>அடைசு-. [K. adacu.] 1. To be crowded; செறிதல். 2. To move aside; |
அடஞ்சாதி - த்தல் | aṭa-cāti- v.intr. <>haṭha+. To maintain a stubborn, unyielding spirit of opposition; வன்மங்கொள்ளுதல். |
அடடா | aṭaṭā int. <>அடா+அடா. 1. An exclamation of surprise; அதிசயக்குறிப்பு. அடடா! அவன் எவ்வளவு ரசமாய்ப்பாடுகிறான். 2. An exclamation of contempt; 3. An exclamation of grief, pity; |
அடத்தி | aṭatti n. <>U. arhat. 1. Buying and selling in lots, wholesale; மொத்தவியாபாரம். 2. Premium for ready money; 3. Commission or agency business; |
அடத்திச்சீட்டு | aṭatti-c-cīṭṭu n. <>id.+. Note given by one Chetti to another, showing the amount within which to draw upon him for funds in trading; ஒரு செட்டி மற்றொரு செட்டிக்கு இவ்வளவு தொகைவரை கொடுக்கலா மென்று எழுதிக்கொடுக்குஞ் சீட்டு. Loc. |
அடதாளம் | aṭa-tāḷam n. <>aṭa+.(Mus.) Variety of time-measure; தாளவகை. (பரத. தாள. 23.) |
அடப்பங்கொடி | aṭappaṅ-koṭi n. <>அடம்பு+. Hare-leaf, m.cl., Ipomoea biloba; கொடிவகை. (L.) |
அடப்பம் | aṭappam n. Dial. var. of அடைப்பம். . |
அடப்பம்விதை | aṭappam-vitai n. Almond; வாதுமைப்பருப்பு. அடப்பம் விதையாம் வாதுமைப் பருப்பினாலே (பதார்த்த. 785). |
அடப்பன் 1 | aṭappaṉ n. Common cadamba. See கடம்பு. (மலை.) |
அடப்பன் 2 | aṭappaṉ n. Honorific appellation among Paravas; பரவர் பட்டப்பெயர். (J.) |
அடப்பனார் | aṭappaṉār n. See அடப்பன்2. (J.) |
அடம் 1 | aṭam n. <>ata. Wandering, intercourse; சஞ்சாரம். (W.) |
அடம் 2 | aṭam n. <>hatha. 1. Obstinacy, pertinacity; பிடிவாதம். அடம் பிடிப்பதுன் னருளினுக் கழகோ (அருட்பா, 2, கருணைபெறா. 4.) 2. Spite; 3. Evil, wickedness; 4. (See Kumārila Bhatta's Tantra-vārttika, p. 285.) See கொட்டைப்பாசி. |
அடம்பு | aṭampu n. [M. aṭampu.] Hareleaf, m.cl., Ipomaea biloba; கொடிவகை. (L.) |
அடயோகம் | aṭa-yōkam n. <>hatha+. Kind of Yōga involving several disciplinary exercises of a taxing nature; யோகவகை. அட யோகத்ததினால் வினைதொலைத்து (திருக்காளத். பு. 18, 5). |
அடர் 1 - தல் | aṭar- 4 v.intr.; v. tr. To be close together, thick, crowded; 1. To press round, hem in; 2. To beat, strike; 3. To fashion, mould by beating; செறிதல். அறுகையு நெருஞ்சியு மடர்ந்து (மணி. 12, 60). நெருக்குதல். வரைசேர்ந்தடர்ந்தென்ன வல்வினை (திருவாச. 6, 37). புடைத்தல். வச்சிரங்கொண் டிந்திரன் வெற் படர்வ தென்ன (ஞானவா. சனகரா. 14). தட்டியுருவாக்குதல். ஐதடர்ந்த நூற்பெய்து (புறநா. 29). |
அடர் 2 - த்தல் | aṭar- 11 v.tr. caus. of அடர்1-. 1. To press down; அமுக்குதல். திருவிரலா லடர்த்தான் வல்லரக்கனையும் (தேவா. 509, 8). 2. To oppress; 3. To attack, make an onset upon; 4. To kill; 5. To destroy, remove; |
அடர் 3 | aṭar n. <>அடர்2-. Troubling, oppressing; வருத்துகை. அடர்க்குறு மாக்களொடு (மணி. 13, 40). |
அடர் 4 | aṭar n. <>அடர்1 1. Thin flat plate of metal, esp. gold: தகடு. அடர்பொற் சிரகத்தால் வாக்கி (கலித். 51, 7). 2. Flower petal; |
அடர்சோளம் | aṭar-cōḷam n. <>id.+. Cōḷam sown closely as a fodder crop; கால்நடை மேய்ச்சற்காக அடர்த்தியாய்ப் பயிரிடும் சோளம். (M. Cm. D. [1887], 201.) |
அடர்த்தி | aṭartti n. <>id. Closeness, crowdedness; நெருக்கம். |
அடர்த்திப்பலகை | aṭartti-p-palakai n. <>id.+. Thick plank; கனமான பலகை. (J.) |