Word |
English & Tamil Meaning |
---|---|
அடுக்கம் | aṭukkam n. <>அடுக்கு-. 1. Range, as of mountains, row; வரிசை. (பதிற்றுப்.55, 18.) 2. Pile, tier; 3. Mountain slope; 4. Middle of a mountain slope; 5. Thick grove; 6. Lesser mountain adjacent to a greater one; |
அடுக்கல் | aṭukkal n. <>id. 1. Series; அடுக்கு. ஆரவடுக்கல் பொன்னாகமிலங்க (கந்தபு. அவைபுகு.35). 2. Mountain, as stratified; |
அடுக்கலரி | aṭukkalari n. <>id.+ அலரி. Double-flowered oleander; இரட்டையலரி. |
அடுக்கலிடு - தல் | aṭukkal-iṭu- v.tr <>id.+. To pound a second time, as paddy, to clear of husks; நெல் முதலியவற்றை இரண்டா முறை குற்றுதல். (W.) |
அடுக்களை | aṭukkaḷai n. <>அடு2-+ khala [M.aṭukkaḷa.] Kitchen, cook-house; பாகசாலை. வகையமை யடுக்களை போல் (மணி.29, 61). |
அடுக்கானகன்னி | aṭukkāṉa-kaṉṉi n. <>அடுக்கு+. 1. Perfect woman; அழகும் குணமும் நிறைந்தவள். (W.) 2. A prepared arsenic; |
அடுக்கியல் | aṭukkiyal n. <>அடுக்கு+இயல். A constituent of kalippā See அராகம். (வீரசோயாப்.11, உரை.) |
அடுக்கு 1 - தல் | aṭukku- 5 v.tr. <>id. 1. To pile up one on top of another, heap up in order, pack; ஒன்றின்மே லொன்றாக வைத்தல். திங்கண் மூன் றடுக்கிய திருமுக் குடைக்கீழ் (சிலப்.11, 1). 2. To arrange in a series, row; |
அடுக்கு 2 | aṭukku n. <>id.+. [T.K. aduku, M.aṭukku.] 1. Pile, tier; ஒன்றன்மே லொன்றாக அடுக்கியது. (தாயு.தேசோ.7.) 2. Row, series 3. Set of things which fit one within another, as cooking pots; 4. Repetition of words. See அடுக்குத்தொடர். 5. Prosperity; 6. Four threads of yarn, a term used by weavers; |
அடுக்குக்குலை - தல் | aṭukku-k-kulai- v.intr. <>அடுக்கு+. 1. To get into disorder, as a row or pile of things; வரிசை கெடுதல். (W.) 2. To become deranged, as one's business or circumstances; |
அடுக்குச்சட்டி | aṭukku-c-caṭṭi n. <>id.+. Tier of pots; அடுக்குப்பானை. |
அடுக்குச்சாத்து - தல் | aṭukku-c-cāttu- v.intr. <>id.+. To adorn an idol with a cloth gathered in folds; கொய்து ஆடையணிதல். (கோயிலொ.38.) |
அடுக்குத்தீபம் | aṭukku-t-tīpam n. <>id.+. Tier of lamps in circular rows, used in temple worship; ஆலய தீபவகை. (W.) |
அடுக்குத்தும்பை | aṭukku-t-tumpai n. <>id.+. Species of balsam; காசித்தும்பை. (மலை.) |
அடுக்குத்தொடர் | aṭukku-t-toṭar n. <>id.+. Repetition of a word for emphasis or in emotion, as பல பல, பாம்பு பாம்பு. (நன்.152, உரை) |
அடுக்குநந்தியாவட்டம் | aṭukku-nantiyāvaṭṭam n. <>id.+. Double-blossomed eye-flower, l.sh., Tabernaemontana coronaria; நந்தியாவட்ட வகை. (L.) |
அடுக்குப்பருத்தி | aṭukku-p-parutti n. <>id.+. A superior cotton raised in red loam; பருத்திவகை. (G.Sm.D.I.i,227.) |
அடுக்குப்பற்சுறா | aṭukku-p-paṟ-cuṟā n. <> id.+. Grey shark, Carcharias ellioti; சுறாவகை. |
அடுக்குப்பாத்திரம் | aṭukku-p-pāttiram n. <>id.+. Vessels or cups packed one inside of another, nest of utensils; ஒன்றனுள் ஒன்றடங்கி அடுக்காகவுள்ள பாத்திரம். |
அடுக்குப்பார் - த்தல் | aṭukku-p-pār- v.tr. <>id.+.; v.intr. To rehearse, as stage players; (J.); To look out for suitable help; ஒத்திக்கை பார்த்தல். தக்க துணை தேடுதல் Loc. |
அடுக்குப்பாளம் | aṭukku-p-pāḷam n. <>id.+. Cloth gathered into folds, worn at the back of an idol; கடவுளுக்குப் பின்புறத்திற் சாத்தும் கொய்த ஆடை. |
அடுக்குப்பானை | aṭukku-p-pāṉai n. <>id.+. 1. Pots piled up in order for domestic use; ஒன்றன்மே லொன்றாக அடுக்கிய பானை. 2. Tier of seven pots used at marriage among certain castes; |
அடுக்குமல்லிகை | aṭukku-mallikai n. <>id.+. Double-flowered jasmine, m.sh., Jasminum sambac; மல்லிகைவகை, (மூ.அ.) |
அடுக்குமுள்ளி | aṭukku-muḷḷi n. <>id.+. Species of prickly nightshade Solanum; பூடு வகை. (மூ.அ.) |
அடுக்குமெத்தை 1 | aṭukku-mettai n. <>id.+. Bed with mattresses placed one upon another; அடுக்காயுள்ள பஞ்சணை. |
அடுக்குமெத்தை 2 | aṭukku-mettai n. <>id.+ T.midde. Upper lofts or stories of a house; ஒன்றன்மேலொன்றான உப்பரிகை. |