Word |
English & Tamil Meaning |
---|---|
அடுக்குவாகை | aṭukku-vākai n. <>id.+. Siris tree. See வாகை. (L.) |
அடுக்குள் | aṭukkuḷ n. <>id.+ உள். 1. Room within a room; அறைக்குள் அறை. 2. Kitchen; |
அடுக்கூமத்தை | aṭukkūmattai n. <>id.+ ஊமத்தை. Downy datura, m.sh., Datura metel; ஊமத்தை வகை. (L.) |
அடுகலன் | aṭu-kalaṉ n. <>அடு2-+கலம். Vessel for cooking; சமையற் பாத்திரம். அடுகலன் பிறவு மெரிபொனா விழைத்து (திருவிளை.நகரப்.64). |
அடு - களம் | aṭukaḷam n. <>id.+. Battle filed; யுத்தபூமி. அடுகளத்துள்... வாளமர் வேண்டி (திவ்.இயற்.1, 81). |
அடுகுவளம் | aṭuku-vaḷam n. <>அடுக்கு+வள்ளம். Pile of vessels containing cakes, sweet-meats, etc., one on top of another; அடுக்கி வைக்கப்பட்ட போனகப் பெட்டி. (ஈடு,6, 1, 2.) |
அடுசில் | aṭucil n. <>அடு2- Boiled rice. See அடிசில். (பதிற்றுப்.21, உரை.) |
அடுசிலைக்காரம் | aṭucilai-k-kāram n. Red species of Indian burr. See செந்நாயுருவி. (மூ.அ.) |
அடுத்தடுத்து | aṭuttaṭuttu adv. <>அடு1-+அடு1 1. One upon another; ஒன்றன்மே லொன்றாய். அடுத்தடுத்து வன்காய் பலபல காய்ப்பினும் (நாலடி.203). 2. Ever and anon; |
அடுத்தணித்தாக | aṭuttaṇittāka adv. <>id.+ அணிமை. Near, close by; சமீபமாக. (ஈடு,9, 8,7.) |
அடுத்தமுறை | aṭutta-muṟai n. <>id.+. 1. Nearest relationship; நெருங்கின உறவு. (S.I.I.ii, 254.) 2. Next time; |
அடுத்தாள் | aṭuttāḷ n. <>id.+ ஆள் Assistant; உதவியாள். Loc. |
அடுத்துமுயல் - தல் | aṭuttu-muyal- v.intr. <>id.+. To make continuous effort; இடையறாது முயலுதல். அடுத்து முயன்றாலும் (மூதுரை, 5). |
அடுத்துவரலுவமை | aṭuttu-varal-uvamai n. <>id.+. (Rhet.) Comparison in which the standard of comparison is in its turn compared to another, a fault; உவமைக்குவமை. (சீவக.107, உரை.) |
அடுத்துவிளக்கு - தல் | aṭuttu-viḷakku- v.tr. <>id.+. To solder together; உலோகப் பற்றுவைத் தொட்டுதல். அடுத்துவிளக்கின மொட்டும் பறளையும் (S.I.I.ii, 96.) |
அடுத்தூண் | aṭuttūṇ n. <>id.+ ஊண் [M.aṭuttūṇ.] Land given for livelihood; ஜீவனத்துக்கு விட்ட நிலம். (ஈடு, 4, 8, 8.) |
அடுத்தேறு | aṭuttēṟu n. <>id.+ ஏறு- Excess; மிகை. அடுத்தேறாக வந்த கரத்தைக் கழித்து (ஈடு, 3, 8, 9). |
அடுப்பங்கரை | aṭuppaṅ-karai n. <>அடுப்பு+. 1. Side of the oven; அடுப்பின் பக்கம். Colloq. 2. Kitchen; |
அடுப்பாங்கரை | aṭuppāṅ-karai n. See அடுப்பங்கரை. Colloq. |
அடுப்பு | aṭuppu n. <>அடு1-. 1. Adhering, joining; அடுத்திடல். (அக.நி.) 2. Oven, fire-place for cooking. 3. Fire in the oven; 4. The second nakSatra. See பரணி. 5. Wife; 6. Fear; |
அடுப்புக்கரி | aṭuppu-k-kari n. <>அடுப்பு+. 1. Dead coals from an oven; அடுப்பி லெரிந்தகரி. 2. Charcoal, as taken out from or used in an oven; |
அடுப்புக்கும்பி | aṭuppu-k-kumpi n. <>id.+. Hot ashes in the oven; அடுப்பு நீறு. (W.) |
அடுப்புக்கொட்டம் | aṭuppu-k-koṭṭam n. <>id.+kōṣṭha. Kitchen shed; சமையற் கொட்டகை. Loc. |
அடும்பு | aṭumpu n. [K.Tu. adumbu, M.aṭumbu.] Hare leaf. See அடம்பு. அடும்பிவ ரணியெக்கர் (கலித்.132.) |
அடுவல் | aṭuval n. <>அடு1-. Mixture of paddy and common millet; வரகு நெற்களின் கலப்பு. (J.) |
அடே | aṭē int. An exclamation of calling. See அடா,1 Colloq. |
அடேயப்பா | aṭē-y-appā int. <>id.+. An exclamation of astonishment; ஆச்சரியக் குறிப்பு. |
அடை 1 - தல் | aṭai- 4 v.intr. <>அடு1-. 1. To collect, gather, as dust; சேர்தல். வரவரத் தூசியடைகிறது. 2. To settle, become close, compact, hard, as sand by rain; 3. To join, mingle; 4. To be preservd, as pickles; 5. To go to roost, to resort to holes, as snakes; 6. To sit on eggs, as a hen; 7. To be paid up, as a debt; 8. To obtain eternal bliss, die; 1. To reach, arrive at; 2.[K.ade.] To get, obtain, enjoy; 3. To take refuge in; |