Word |
English & Tamil Meaning |
---|---|
அடைகல் 2 | aṭai-kal n. <>அடை2-+. Stone placed at the entrance of a sluice to prevent water from flowing; மதகடைக்குங் கல். (W.) |
அடைகஷாயம் | aṭai-kaṣāyam n. <>அடை1-+. Strong decoction of various drugs preserved for a long time; கஷாயவகை. |
அடைகா - த்தல் | aṭai-kā- v.intr. <>அடை+. To incubate, as a hen; கோழி அவயங்காத்தல். |
அடைகாய் | aṭai-kāy n. <>id.+. Pan supāri; வெற்றிலைபாக்கு. |
அடைகிட - த்தல் | aṭai-kiṭa- v.intr. <>id.+. 1. To incubate; அடைகாத்தல். 2. To abide, stay; |
அடைகியாழம் | aṭai-kiyāḻam n. <>அடை1-+. See அடைகஷாயம். (பாலவா.985.) |
அடைகுடி | aṭai-kuṭi n. <>id.+. Dependent family; சார்ந்த குடும்பம். இவன்தானும் இவன் அடைகுடி...ஆனைச்சாத்தனும் (S.I.I.ii, 444) . |
அடைகுளம் | aṭai-kuḷam n. <>அடை2-+. Tank with no outlet; போக்கில்லாத குளம். (J.) |
அடைகுறடு | aṭai-kuṟaṭu n. <>அடை1-+. 1. Anvil; கம்மியர் பட்டடை. (பிங்.) 2. Tongs; |
அடைகொடு - த்தல் | aṭai-koṭu- v.intr. <>அடை+. To pay the king's share of the produce; நிலவிளைவில் அரசன் பங்கைச் செலுத்துதல். (W.) |
அடைகொள்ளு - தல் | aṭai-koḷḷu- v.intr. <>id.+. To accept a deposit for safe keeping; அடைக்கலம் புகுந்த பொருளைக் காக்குமாறு ஏற்றுக்கொள்ளுதல். அடைகொண்டு பாழ்போக்குவா னொருவனன்றே (ஈடு, 5, 10, 5). |
அடைகொளி | aṭai-koḷi n. <>id.+. (Gram.) That which is qualified; விசேடியம். |
அடைகோட்டை | aṭai-kōṭṭai n. <>அடை2-+. Besieged fort முற்றுகையிடப்பட்ட கோட்டை. |
அடைகோழி | aṭai-kōḻi n. <>அடை+. Sitting hen; அடைகாக்குங் கோழி. |
அடைச்சீட்டு | aṭai-c-cīṭṭu n. <>id.+. Receipt for payment of tithe or tax; வரி ரசீது. (J.) |
அடைச்சு - தல் | aṭaiccu- 5 v.tr.caus.of அடைசு-. 1. To put, place; சேரச்செய்தல். அடைச்சிய கோதை பரிந்து (கலித்.51). 2. To insert, stick in, as flower in the hair; 3. To clothe or surround oneself with; 4. To shut, to close; |
அடைசல் | aṭaical n. <>அடைசு- Crowded condition, density; பொருள்நெருக்கம். |
அடைசீலை | aṭai-cīlai n. <>அடை2-. Cloth steeped in a medicinal preparation and put in the mouth for sore throat; பாளச் சீலை. (W.) |
அடைசு - தல் | aṭaicu- [K.adasu.] 5 v.intr. 1. To crowd, get close together; நெருங்குதல். அஞ்சுபூத மடைசிய சவடனை (திருப்பு.537). 2. To be joined, placed; 3. To deviate, recede, give place, make room; To shower upon; |
அடைசுபலகை | aṭaicu-palakai n. <>அடைசு-+. Boards inserted in place of a door; செருகுபலகை. (W.) |
அடைசுபொட்டணம் | aṭaicu-poṭṭaṇam n. <>id.+. See அடைசீலை. (W.) |
அடைசுவலை | aṭaicu-valai n. <>id.+. Kind of net; வலைவகை. Loc. |
அடைசொல் | aṭai-col n. <>அடை+. Qualifying word. See அடைமொழி. . |
அடைத்தகுரல் | aṭaitta-kural n. <>அடை2-+. Hoarse, husky voice; கம்மிய குரல். (W.) |
அடைத்துப்பெய் - தல் | aṭaittu-p-pey- v.intr. <>id.+. To rain incessantly with the whole sky overcast; மேகமூட்டமாய் விடாது பெய்தல். |
அடைத்தேற்று - தல் | aṭaittēṟṟu- v.tr. <>id.+ ஏற்று-. To accomplish with difficulty, as lifting water to an upper channel; வருந்திக் காரிய முடித்தல். (ஈடு, 6, 8, 1.) |
அடைதடையம் | aṭai-taṭaiyam n. <>id.+. Foisted property; பொய்யாய் உரிமைப் படுத்திய பொருள். loc. |
அடைந்தோர் | aṭaintōr n. <>அடை1-+. 1. Those who have taken refuge; அடைக்கலம் புகுந்தவர். (கம்பரா.விபீடண.114.) 2. Relatives; |
அடைநிலை | aṭai-nilai n. <>id.+. Detached foot that is a constituent of kali verse; கலிப்பாவி னுறுப்பாகிய தனிச்சொல். (தொல்.பொ.447.) |
அடைப்பக்காரன் | aṭaippa-k-kāraṉ n. <>அடைப்பம்+. Personal servant who carries the betel pouch; வெற்றிலைப்பையெடுத்து ஊழியஞ் செய்வோன். |