Word |
English & Tamil Meaning |
---|---|
கண்டகம் 3 | kaṇṭakam n. cf. khaṇda A measure of land; ஒருவகை நிலவளவை. (I.M.P. Sm. 100) |
கண்டகன் | kaṇṭakaṉ n. <>kaṇṭaka. 1. Cruel, harsh, unfeeling man; கொடியோன். கன்னமேகொடு போயின கண்டகர் (இரகு. யாக. 42). 2. Asura |
கண்டகாந்தாரம் | kaṇṭakāntāram n. prob. khaṇda-g-andhāra. A musical mode; பண்வகை. (திவா.) |
கண்டகாரி | kaṇṭakāri n. <>kanṭakāri. A highly thorny plant with diffuse branches; See கண்டங்கத்தரி. . |
கண்டகி 1 | kaṇṭaki n. <>kaṇṭaki. Cruel, harsh, hard-hearted woman; தீயவள். முதுகண்டகி யிவளா மசமுகி (கந்தபு. அசமுகிப். 14). |
கண்டகி 2 | kaṇṭaki n. prob. kaṇṭakin. 1. Fragrant screw-pine; See தாழை. வெம்மினது கண்ட வியன்கண்டகி யெனவும் (கந்தபு. தேவர்புல. 20). 2. A variety of bamboo; 3. Jujube-tree; See இலந்தை. (இலக். அக.) 4. Vertebra; |
கண்டகி 3 | kaṇṭaki n. <>Gaṇdakī. The Gandak, a river rising in Nepal and flowing into the Ganges near Benares, noted for containing the sacred cālakkirāmam stone; நேபாளத்தில் தோன்றிக் காசிக்கருகே கங்கையிற் கலப்பதும் சாளக்கிராமசிலை உண்டாவதற்கிடமாவதுமான ஒரு நதி. கண்டகிதீர்த்திகைப்புனல் (கந்தபு, மகாசாத். 44). |
கண்டகிச்சிலை | kaṇṭaki-c-cilai n. <>id. +. cāḷakkiramam, a fossil ammonite, used in religious worship, so called from its being found in certain rivers like the Gandak; சாளக்கிராமம். |
கண்டகிரகணம் | kaṇṭa-kirakaṇam n. <>khaṇda +. Partial eclipse; பார்சுவகிரகணம் |
கண்டகிரயம் | kaṇṭa-kirayam n. <>id. +. Sale in lots or in small quantities; பிரித்து விற்குங் கிரயம். (C. G. 94.) |
கண்டகுப்சம் | kaṇṭa-kupcam n. <>kanṭha-kubja. A kind of convulsion, one of 13 caṉṉi; சன்னிவகை. (W.) |
கண்டகோடரி | kaṇṭa-kōṭari n. See கண்டகோடலி. . |
கண்டகோடாலி | kaṇṭa-kōṭāḷi n. <>khaṇda+. 1. Battle axe; பரசு. பாவவெங் கானகந்தனக்கே ... கண்டகோடாலியே யாகுவர் (சிவரக. பூசாயோக. 8). 2. Hatchet carried on the shoulder by a class of ascetics; |
கண்டங்கத்தரி | kaṇṭaṇkattari n. cf. kaṇṭakārī. A highly thorny plant with diffuse branches, s.sh., Solanum xanthocarpum; ஒரு வகை முட்செடி. (பதார்த்த. 386). |
கண்டங்கருவழலை | kaṇṭaṇ-karu-va n. porb. khaṇda+. Kind of snake, krait, Bungarus candidus, having its body divided by thin white arches; ஒருவகைப்பாம்பு. Loc. |
கண்டங்கருவிலி | kaṇṭaṅ-karuvili n. See கண்டங்கருவழலை. . |
கண்டங்காலி | kaṇṭaṅkāli n. <>kaṇṭakārī. See கண்டங்கத்தரி. கண்டங்காலி யிடவும் அமையும் (ஈடு, 1, 6, 1). |
கண்டங்கி | kaṇṭaṅki n. prob. khaṇda+aṅga. See கண்டாங்கி. கண்டங்கிக்காரி கடைக்கண் (தனிப்பா. ii, 37, 88). |
கண்டச்சுருதி | kaṇṭa-c-curuti n. <>kaṇṭha +. Musical, vocal sound; சாரீரம். |
கண்டசர்க்கரை | kaṇṭa-carkkarai n. <>khaṇda +. Candied sugar; ஒருவகைச் சர்க்கரை. சேர்ப்பாலுங் கண்டசர்க்கரையும் (ஈடு, 9, 3, 7). |
கண்டசரம் | kaṇṭa-caram n. <>kaṇṭha +. Necklace; கழுத்தணிவகை. முகத்தின் சால்வுறு கண்ட்சரம் (கந்தபு. அவைபுகு. 34). |
கண்டசருக்கரை | kaṇṭa-carukkarai n. <>khaṇda +. See கண்டசர்க்கரை. . |
கண்டசருக்கரைத்தேறு | kaṇṭa-carukkarai-t-tēṟu n. <>id. +. Lump of sugar-candy; கற்கண்டுக்கட்டி. (சீவக. 2703.) |
கண்டசாதி | kaṇṭa-cāti n. <>id.+. (Mus.). A sub-division of time-measure, one of five cāti, q.v.; தாளத்தின் சாதியைந்தனுள் ஒன்று. (பரத. தாள. 47, உரை.) |
கண்டசித்தி | kaṇṭa-citti n. <>kaṇṭha +. Ability to compose impromptu verses according to instructions given at the moment; ஆசுகவி சொல்லும் வல்லமை. (யாழ். அக.) |
கண்டசுத்தி | kaṇṭa-cutti n. See கண்டசித்தி. (தனிப்பா. i, 150,55, தலைப்பு.) . |
கண்டசூலை | kaṇṭa-cūlai n. <>kaṇṭha +. A glandular disease of the neck; கழுத்துநோய் வகை. |
கண்டத்திரை | kaṇṭa-t-tirai n. <>khaṇda +. Curtain made of parti-coloured material, used in a stage; பல்வண்ணத்திரை. பட்டியன்ற கண்டத்திரை வளைத்து (சீவக. 647). |
கண்டத்துடர் | kaṇṭa-t-tuṭar n. <>kaṇṭha + தொடர். See கண்டநாண். (S. I. I. ii, 19.) . |
கண்டதசபந்தம் | kaṇṭa-taca-pantam n. <>khaṇda + daša + bandha. Land given as compensation for the construction of a tank, well, or channel; ஏரி குளம் முதலியவை வெட்டினற்காகக் கொடுக்கப்படும் நிலம். (C. G.). |