Word |
English & Tamil Meaning |
---|---|
கண்கெடு - தல் | kan-ketu- v. intr.<>id.+. 1. To lose one's sight பார்வையழிதல். கண்கெட்டபின்பா சூரியநமஸ்காரம்? To lose one's wits; |
கண்கொட்டு - தல் | kaṇ-koṭṭu- v. intr. <>id.+. To wink கண்ணிமைத்தல். Colloq. |
கண்கொதி | kaṇ-koti n. <> id.+. Blight from an evil eye. See கண்ணூறு. (j.) . |
கண்கொள்ளாக்காட்சி | kaṇ-koḷḷā-k-kāṭci n. <>id.+. A rare and wonderful scene அதிசயமான தோற்றம் |
கண்சமிக்கினை | kaṇ-camikkiṉai n. <>id.+. Wink, winking கண்ணாற் செய்யுஞ் சாடை. |
கண்சமிக்கை | kaṇ-camikkai n. <>id. +. See கண்சமிக்கினை . |
கண்சவ்வு | kaṇ-cavvu n. <>id. +. Mucous membrane lining the inner surface of the eyelids, conjunctiva விழியின் ஓரச்சதை |
கன்சாடை | kaṇ-cāṭai n. <>id. +. See கண்சமிக்கினை . |
கண்சாத்து - தல் | kaṇ-cāttu- v. tr. <>id. +. To look upon with favour அன்பொடு நோக்கு தல் கயலிரிவ நெடுங்கண்சாத்தாய் (காஞ்சிப்பு, கழுவா 204) |
கண்சாய் - தல் | kaṇ-cāy- v. intr. <>id. +. 1. To lose one's wits அறிவுதளரீதல். கள்ளொற்றிக் கண்சாய்பவர் (குறள்,927) 2. To grow cold in love |
கண்சாய்ப்பு | kaṇ-cāyppu n. <>id. + . 1. Side-look out of displeasure; வெறுப்பான பார்வை (w.) 2. Connivance; 3. Favour shown by a wink 4. See கண்ணூறு. Loc. |
கண்சிம்புளி - த்தல் | kaṇ-cimpuḷi- v. intr. <>id. +. To shrink from light, to be sensitive to light, as the eye கண்சசுதல், (தொல். பொ 292, உரை.) |
கண்சிமிட்டு - தல் | kaṇ-cimiṭṭu- v. intr. <>id. +. 1. To wink, as the eye கண்ணிமைத்தல். கண்சிமிட்டி£ நோக்கும் (ஒழிவி.யோகக். 4). 2. To make a signal with the eye; |
கண்சிரட்டை | kaṇ-ciraṭṭai n. <>id. +. Top half of a coconut shell, with three 'eyes' or depressions, dist. fr. அடிச்சிரட்டை; ழக்கண்ணூள்ள கொட்டாங்கச்சி. (W.) |
கண்சிவ - த்தல் | kaṇ-civa- v. <>id. +. intr. To redden, as the eyes from disease or other causes; To be red with anger, as the eyes [நோய்முதலியவற்றுற் கண் செந்நிற மடைதல்.-tr. ] கோபித்தல். கறுவொடுமயங்கிக் கண்சிவந்தன்று (பு.வெ.12. பெண்பாற்.11. கொளு). |
கண்சுருட்டு - தல் | kaṇ-curuṭṭu- v. <>id. +. tr.-intr To entice, bewitch, captivate, fascinate by uncommon beauty or by lustre; to grow sleepy, as the eyes ; அழகு முதலியவற்றுல் வசீகரித்தல். (W.)-intr. |
கண்சுழல்(லு) - தல் | kaṇ-cuḻal- v. intr. <>id. +. To be dazed, as from a blow, sudden light, dizziness or wonder; விழிகள் மயங்குதல், பாலாழி நீகிடக்கும் பண்¬புயும் கேட்டேயும்... கண்சுழலும் (திவ். இயற் பெரிய்திருவ.34). |
கண்செம்மு - தல் | kaṇ-cemmu- v. intr. <>id. +. To be inflamed, as the eyes கண்பொங்குதல். (W.) |
கண்செருகு - தல் | kaṇ-ceruku- v. intr. <>id. +. To roll up the eyes, as in a swoon, a fit or at death ; விழிகள் உள்வாங்குதல். |
கண்செறியிடு - தல் | kaṇ-ceṟi-y-iṭu- v. tr. <>id. +. To enclose within itself; to envelope ; விழங்கிவிடுதல். ஆகாசத்தைக் கண்செறியிட்டாற்போலே யிருக்கை (ஈடு, 5, 9, 1). |
கண்சொக்கு - தல் | kaṇ-cokku- v. intr.<> id. +. To be heavy, as the eyes from sleep; தூக்கம் ழதலியவற்றுற் கண்மயங்குதல். |
கண்டக்கரப்பன் | kaṇṭa-k-karappaṉ n. <>kaṇṭha +. Disease of the throat, causing irritation, hoarseness ; கரகரப்பு புகைச்சல் முதலியன உண்டாக்கும் ஒருவகைத் தொண்டைநோய். (W.) |
கண்டக்கருவி | kaṇṭa-k-karuvi n. <>id. +. Larynx, cavity in throat containing vocal cords ; மிடற்றுக்கருவி. (சூடா.) |
கண்டக்கிரந்தி | kaṇṭa-k-kiranti n. <>id. +. Inflammation of the tonsils; ulcer in the throat causing hoarseness ; தொண்டைப்புண். |
கண்டகசங்கம் | kaṇṭaka-caṅkam n. <>kaṇṭaka. Mistletoe Berry Thorn, m. sh., Azima tetracantha; முட்சங்கு. (W.) |
கண்டகம் 1 | kaṇṭakam n. Heart, core, of the tree மரவைரம். (W.) |
கண்டகம் 2 | kaṇṭakam n. <>kaṇṭaka. 1. Thorn; முள் இளங்கண்டகம் விடாநாகத்தி னாவொக்கும் (இறை. 41, 172). 2. White long-flowered Nail Dye; See நீர்முள்ளி. கண்டகங்காள் (தேவா. 268, 2). 3. Desert; jungle; 4. Dirk or short sword worn in the girdle; 5. Sword; 6. Cruelty, hard-heartedness; |