Word |
English & Tamil Meaning |
---|---|
கண்கட்டி | kaṇ-kaṭṭi n. <>கண்+. 1. Styin the eye; கண்ணிலுண்டாம் பரு. Loc. 2. Game of blindman's buff; |
கண்கட்டிவித்தை | kaṇ-kaṭṭi-vittai n. <>id.+. Magic. See கண்கட்டுவித்தை . |
கண்கட்டு - தல் | kaṇ-kaṭṭu- v. tr. <>id.+கட்டு-. 1. To blindfold; கண்ணைக்கட்டிவிடுதல். 2. To blind the eyes by magic; |
கண்கட்டு | kaṇ-kaṭṭu n. <>id.+id. [T. kanukattu.] Blindfolding, blindman's buff; கண்ணைப்பொத்துகை. |
கண்கட்டுகாசம் | kaṇ-kaṭṭu-kācam n. <>id.+id.+kāca. See கண்காசம். (W.) . |
கண்கட்டுவித்தை | kaṇ-kaṭṭu-vittai n. <>id.+. Art of hoodwinking by magic; தந்திரவித்தை. கண்கட்டுவித்தைகளுங் காட்டி (குற்றா. குற. 116, 1). |
கண்கண்டதெய்வம் | kaṇ-kaṇṭa-teyam n. <>id.+. A god whose presence is easily manifest; பிரத்தியட்சதெய்வம். உன்போற் கண்கண்ட தெய்வ முளதோ (குமர. பிர. சகலகலா. 10). |
கண்கண்ணி | kaṇ-kaṇṇi n. <>id.+. Small garland; coronal; குறுங்கண்ணி. கண்கண்ணி வாடாமையானல்ல வென்றால் (திணை. நூற். 21) |
கண்கயில் | kaṇ-kayil n. <>id.+. Top piece of a coconut shell with the kernel, dist. fr. அடிக்கயில்; உடைத்த தேங்காயின் மேல்மூடி. (J.) |
கண்கல - த்தல் | kaṇ-kala- v. intr. <>id.+. 1. To look at each other, to exchange glances; ஒருவரையொருவர் பார்த்தல். 2. To come in sight; |
கண்கலக்கம் | kaṇ-kalakkam n. <>id.+. 1. Affliction in the eyes; கண்ணுறு துன்பம். 2. Distress; |
கண்கலங்கு - தல் | kaṇ-kalaṅku- v. intr. <>id.+. 1. To be dimmed, as the eyes from dust, tears, etc.; தூசி முதலியன விழுதலால் கண் கலக்கமடைதல். 2. To be distressed; |
கண்கலவி | kaṇ-kalavi n. <>id.+. First meeting of eyes signifying union of hearts, exchange of amorous glances between lovers for the first time; காதற்குறிப்போடு முதன்முறைதலைவனுந் தலைவியுங் காண்கை. தைவயோகத்தாலே இருவர்க்குங் கண்கலவி யுண்டாய் (ஈடு, 5, 3, ப்ர.). |
கண்கழுவு - தல் | kaṇ-kaḻuvu- v. intr. <>id.+. To water young plants or newly sown seeds; இளம்பயிர்க்கு நீர்பாய்ச்சுதல். கண்கழுவுதண்ணீர். (J.) |
கண்களவுகொள்(ளு) - தல் | kaṇ-kaḷavu-koḷ- v. tr. <>id.+. To stealthily gaze at one without being seen by that one; தான் பிறனைப் பார்ப்பதை அவன் காணாதவாறு தான் அவனைக் களவாகப்பார்த்தல். கண்களவு கொள்ளுஞ்சிறுநோக்கம் (குறள், 1092). |
கண்கனல்(லு) - தல் | kaṇ-kaṉal- v. intr. <>id.+. To be inflamed, as the eyes with anger; கண்சிவத்தல். கண்கனன்று வேலை விறல் வெய்யோ னோக்குதலும் (பு. வெ. 6, 23). |
கண்காசம் | kaṇ-kācam n. <>id.+kāca. Cataract of the eye; கண்ணின் படலநோய். (W.) |
கண்காட்சி | kaṇ-kāṭci n. <>id.+. 1. Gratifying spectacle; pleasant sight; pageant; exhibition; கண்ணுக்கு மகிழ்ச்சிதருவது. 2. Object of curiosity; |
கண்காட்சிச்சாலை | kaṇ-kāṭci-c-cālai n. <>id.+. Museum, place where an exhibition is held; பொருட்காட்சி மண்டபம். Mod. |
கண்காட்டி | kaṇ-kāṭṭi n. <>id.+. One who looks handsome or beautiful; அழகுள்ளவ-ன்-ள். (திவ். பெரியதி. 8, 6, 3, வ்யா.) |
கண்காட்டிவிடு - தல் | kaṇ-kāṭṭi-viṭu- v. tr. <>id.+. To instigate with a wink, set on with a significant look; சாடையால் ஏவிவிடுதல். என்மேற் கண்காட்டிவிட்ட (குற்றா. குற. 116, 2). |
கண்காட்டு - தல் | kaṇ-kāṭṭu- v. tr. <>id.+. To wink by way of hinting; குறிப்பாகக் கண்சிமிட்டுதல். கொல்லென்று காமனையுங் கண்காட்டி (தமிழ்நா. 90). |