Word |
English & Tamil Meaning |
---|---|
கடைமுரண் | kaṭai-muraṇ n. <>id.+. (Pros.) A mode of constructing verse in which the last foot of each line contains words conveying opposite meanings; அடிதோறும் இறுதிச்சீர்க்கண் சொல்லினும் பொருளினும் மறுதலைப்படத்தொடுக்குந் தொடை. (யாப். வி. 39.) |
கடைமுறி - தல் | kaṭai-muṟi- v. intr. <>id.+. To fail in business; வியாபாரம் அழிதல். Mod. |
கடைமுறை | kaṭai-muṟai <>id.+. n. 1. Meanest condition; இழிந்த நிலை. கடைமுறைவாழ்க்கையும் போம் (திவ். திருவாய். 9, 9).-adv. 2. At last; |
கடைமை | kaṭaimai n. <>id. Meanest condition; கீழ்மை. மையாற் கடைமைத்தலைநின்றான் (பெரியபு. சண்டேசுர. 50). |
கடைமோனை | kaṭai-mōṉai n. <>id.+. (Pros.) A mode of constructing verse in which the initial letters of the last foot of each line are the same or assonant; அடிதோறும் கடைச்சீரின் முதலெழுத்து ஒன்றிவரத் தொடுக்கும் மோனைத்தொடை. (யாப். வி. 39.) |
கடையடைக்காய் | kaṭai-y-aṭai-k-kāy n. An ancient tax; ஒரு பழையவரி. (S.I.I. ii, 521.) |
கடையம் | kaṭaiyam n. Dance of Intirāṇi in the field adjacent to the north gate of Vāṇācuraṉ's capital, as the last one of 11 kūttu, q.v.; இந்திராணிகூத்து. அயிராணி மடந்தை யாடிய கடையமும் (சிலப். 6, 63). |
கடையர் | kaṭaiyar n. <>கடை. 1. Men of the lowest rank or status; இழிந்தோர். கடையரே கல்லாதவர் (குறள், 395). 2. Low caste men of agricultural tracts; 3. Gate-keepers; 4. Name of a sub-division of Paḷḷas, who are lime-burners and divers for pearls; |
கடையல் | kaṭaiyal n. <>கடை-. [K. kadecalu, M. kadaccal.] 1. Turning in a lathe; கடைகை. 2. Turner's work; 3. Agitating, shaking; churning; |
கடையழி - தல் | kaṭai-y-aḻi- v. intr. <>கடை+. (W.) 1. To be afflicted with painful and lingering disease; to suffer extremely; வருந்துதல். 2. To be distressed with poverty; 3. To degenerate; |
கடையனல் | kaṭai-y-aṉal n. <>id.+. Final deluge of fire; ஊழித்தீ. (பிங்.) |
கடையா | kaṭaiyā n. See கடையால். கடையாவின் கழிகோற்கைச் சறையினார் (திவ். திருவாய். 4, 8, 4). . |
கடையாகெதுகை | kaṭai-y-āketukai n. <>கடை+ஆகு- + எதுகை. (Pros.) A variety of initial etukai; இனவெழுத்து எதுகையாக வருந்தொடை. (காரிகை, ஒழிபி. 6, உரை.) |
கடையாட்டம் | kaṭai-y-āṭṭam n. <>id.+. (J.) 1. Lingering in disease, great suffering; வருத்தம். 2. Vexation, teasing, trouble, annoyance, as mean work; 3. Last play in a game; |
கடையாணி | kaṭai-y-āṇi n. <>id.+. [K. kadāṇi.] 1. Linchpin; அச்சாணி. (C.G.) 2. Pin used to keep a tenon in a mortise; |
கடையாந்தரம் | kaṭai-y-ān-taram n. <>id.+ஆம்+tara. The very last stage, extremity; கடைசி. (W.) |
கடையால் 1 | kaṭaiyāl n. Stern of a vessel. See கடைசால், 2. (W.) . |
கடையால் 2 | kaṭai-y-āl n. <>கடை+சால். Bamboo bottle; பால்கறக்கும் மூங்கிற்குழாய்க்கலம். (W.) |
கடையிணைத்தொடை | kaṭai-y-iṇai-t-toṭai n. <>id.+. (Pros.) A kind of verse in which the last two feet of a line have mōṉai and other features; மோனை முதலியவை அடிகளின் ஈற்றிரண்டு சீர்களில் வரத் தொடுக்குந் தொடை. (காரிகை, 5, உரை.) |
கடையிலாக்காட்சி | kaṭai-y-ilā-k-kāṭci n. <>id.+. Boundless vision, omnipercipience, one of arukaṉ-eṇkuṇam, q.v.; அருகனெண் குளங்களுள் எல்லையில்லாது யாவற்றைங் காணுங் குணம். (சீவக. 2847.) |
கடையிலாவறிவு | kaṭai-y-ilā-v-aṟivu n. <>id.+. Boundless knowledge, omniscience, one of arukaṉ-eṇ-kuṇam q.v.; அருகனெண் குணங்களுள் முடிவில்லா அறிவுடைமை. (சீவக. 2847.) |
கடையிலாவின்பம் | kaṭai-y-ilā-v-iṉpam n. <>id.+. Boundless bliss, one of arukaṉ-en-kuṇam, q.v.; அருகனெண்குணங்களுள் முடிவில்லா ஆனந்தமுடைமை. (பிங்.) |
கடையிலாவீரியம் | kaṭai-y-ilā-vīriyam n. <>id.+. Boundless strength, omnipotence, one of arukaṉ-eṇ-kuṇam; அருகனெண்குணங்களுள் எல்லையில்லா வீரியமுடைமை. (பிங்.) |
கடையீடு | kaṭai-y-īṭu n. <>id.+. 1. Land of the poorest quality; கடைத்தரமான நிலம். (C.G.) 2. Order issued by a subordinate officer; |