Word |
English & Tamil Meaning |
---|---|
கடைசோரி | kaṭai-cōri n. Stall for selling cakes; அப்பக்கடை. (சங். அக.) |
கடைஞ்சன் | kaṭaicaṉ n. <>கடை. See கடைஞன். வேந்தனாம் புலைக்கடைஞ்சன் (ஞானவா. காதி. 16). . |
கடைஞன் | kaṭaiaṉ n. <>id. 1. Man of low or degraded caste; இழிகுலத்தோன். இப்படித்தாகிய கடைஞ ரிருப்பினின் (பெரியபு. திருநாளை.11). 2. Man of the labouring caste in an agricultural tract; 3. Man of mean character; |
கடைத்தடம் | kaṭai-t-taṭam n. <>id.+taṭa. Gateway; வாயில். (W.) |
கடைத்தரம் | kaṭai-t-taram n. <>id.+tara Lowest grade; wrost of its kind; அதமம். |
கடைத்தலை | kaṭai-t-talai n. <>id.+. See கடைத்தலைவாயில். கடைத்தலை சீய்க்கப்பெற்றாற் கடுவினை களையலாமே (திவ். திருவாய். 10, 2, 7). . |
கடைத்தலைவாயில் | kaṭai-t-talai-vāyil n. <>id.+. Outer gate, outer court; புறத்தலைவாயில். (J.) |
கடைத்தும் | kaṭaittum pple. <>id. Even, when or where, although, used as an adverbial suffix; ஒரு வினையெச்சவிகுதி. பலநல்ல கற்றக்கடைத்தும் (குறள், 823). |
கடைத்தெரு | kaṭai-t-teru n. <>id.+. Market street, bazaar road; ஆவண வீதி. (திவா.) |
கடைத்தேற்றம் | kaṭai-t-tēṟṟam n. <>id.+தேறு-. Rescue, deliverane, salvation; ஈடேறுகை. |
கடைத்தேறு - தல் | kaṭai-t-tēṟu- v. intr. <>id.+. [T. kadateṟu.] To be saved; to be rescued; to pull through difficulties; ஈடேறுதல். |
கடைதலைப்பாடம் | kaṭai-talai-p-pāṭam n. <>id.+தலை+. Reciting a lesson perfectly, in any order; தலைகீழாகப் பாடம்பண்ணுகை. |
கடைதலைப்பூட்டு | kaṭai-talai-p-pūṭṭu n. <>id.+id.+. Inverted construction in which the last word in a verse is syntactically connected with the first; பூட்டுவிற் பொருள்கோள். (W.) |
கடைதிறப்பு | kaṭai-tiṟappu n. <>id.+. 1. Opening a door; கதவுதிறக்கை. 2. Rousing the women from sleep, that they may listen to the eulogy sung about, and also join in singing the praises of, a warrior returning home in triumph; |
கடைதுடிப்பு | kaṭai-tuṭippu n. <>id.+. Sonority of the last line of a stanza; செய்யுளினீற்றடி சிறந்துநிற்கை. சீர்தளை விகற்பம் பொருந்தி நன்னீதியாய்க் கடைதுடிப்பாய் (திருவேங். சத. 56). |
கடைநன் | kaṭainaṉ n. <>கடை-. Turner; கடைசல்வேலைசெய்வோன். கோடுபோழ் கடைநரும் (மதுரைக். 511) |
கடைநாள் | kaṭai-nāl n. <>கடை+. 1. The last day; கடைசிநாள். 2. The last day of one's life; 3. The last day of the world; 4. The 27th nakṣatra, from its being the last asterism. See இரேவதி. (சூடா.) |
கடைநிலை | kaṭai-nilai n. <>id.+. 1. Outer gate; புறவாயில். 2. End; completion; 3. (Gram.) Ending; 4. (Puṟap.) Theme of the poet who comes from a long distance resting awhile, to remove the discomforts of his tiresome journey, at the outer gates of the residence of a patron or chief, while sending in the gatekeeper to announce his (poet's) arrival 5. Poem on the kaṭai-nilai theme; |
கடைநிலைத்தீவகம் | kaṭai-nilai-t-tīvakam n. <>id.+. (Rhet.) Figure of speech in which a word that is used at the end of a verse throws light upon, and is therefore considered to be understood in, the other parts of the same; தீவகவணிவகை. (தண்டி. 38, உரை.) |
கடைப்படி | kaṭai-p-paṭi n. <>id.+. A measure of weight, equal to 16 palam; ஓரளவு. (தைலவ. தைல. 121, உரை.) |
கடைப்படு - தல் | kaṭai-p-paṭu- v. tr. <>id.+. 1. To be inferior; to be lowest in quality or estimation; to sink into insignificance; இழிவாதல். தோணியியக்குவான். . . கடைப்பட்டான் (நாலடி, 136). 2. To be fulfilled, accomplished; |
கடைப்படுதானம் | kaṭai-p-paṭu-tāṉam n. <>கடைப்படு-+. Charity with a motive such as that which is given for the sake of a return or through fear, considered as a very inferior kind of benevolence; கைம்மாறுகருதுகை அச்சம் முதலிய காரணம்பற்றிச் செய்யுங் கொடை. (திவா.) |
கடைப்பந்தி | kaṭai-p-panti n. <>கடை-+. 1. The last one of the rows of guests at a feast; விருந்தினர் பந்தியின் கடைவரிசை. 2. Last sitting of guests at a feast; |