Word |
English & Tamil Meaning |
---|---|
கண்ணுக்குத்தை - த்தல் | kaṇṇukku-t-tai- v. intr. <>id. +. To attract the eyey, arrest the attention; கண்கவரப்படுதல். (W.) |
கண்ணுகம் | kaṇṇukam n. cf. கந்துகம்1. Horse; குதிரை. (பிங்.) |
கண்ணுங்கருத்துமாய் | kaṇ-ṇ-uṅ-karuttum-āy adv. <>கண்+. With all attention; முழுக்கவனத்துடன். Colloq. |
கண்ணுடைமூலி | kaṇṇuṭai-mūli n. A plant that grows only in hot and dry places; See விஷ்ணுகிராந்தி. (சங். அக.) |
கண்ணுடையவள்ளலார் | kaṇṇuṭayavaḷḷalār n. <>கண்+. Name of the author of Oḻivil-oṭukkam a šaivite philosophical work of the 15th c. cir.; ஒழிவிலொடுக்க நூலாசிரியர். |
கண்ணுதல் | kaṇṇutal n. <>id. + நுதல். 1. Forehead having an eye; கண்ணையுடைய நெற்றி. கண்ணுதலுடையதோர் களிற்றுமாமுகப் பண்ணவன் (கந்தபு. கடவுள். 8). 2. šiva, who has an eye in His forehead; |
கண்ணுதன்மலை | kaṇṇutaṉ-malai n. <>கண்ணுதல் +. Mountkailāsa, the abode of šiva; கைலாயம். (பிங்.) |
கண்ணுப்பீ | kaṇṇu-p-pī n. <>கண்+. Rheum of the eyes; கண்பீளை. Vul. |
கண்ணுமை | kaṇṇumai n. <>id. Sight; காட்சி. கட்டமை யொழுக்கத்துக் கண்ணுமை யானும் (தொல். பொ. 76). |
கண்ணுராவி | kaṇṇurāvi n. <>T. kannaṟa. See கண்ணராவி. (W.) . |
கண்ணுருகு - தல் | kaṇ-ṇ-uruku- v. intr. <>கண்+. To shed tears; கண்ணீர்வார்தல். மெய்யுருகிக் கண்ணுருகி (சீவக. 682). |
கண்ணுலைமூடி | kaṇ-ṇ-ulai-mūṭi n. <>id. +. Rice-strainer; colander; சிப்பல். (W.) |
கண்ணுவம் | kaṇṇuvam n.<> id. Artisan-ship; கம்மியர்தொழில். (W.) |
கண்ணுள் | kaṇṇuḷ n. <>id. + உள். 1. Acting, dance; கூத்து. (திவா.) 2. Fine, delicate workmanship in jewelry; |
கண்ணுள்வினைஞன் | kaṇṇuḷ-viṉaiaṉ n. <>கண்ணுள்+. 1. Painter; சித்திரக்காரன். கண்ணுள்வினைஞரு மண்ணீட் டாளரும் (சிலப். 5, 30). 2. Artisan; |
கண்ணுளன் | kaṇṇuḷaṉ n. <>id. See கண்ணுளாளன். கலம்பெறுகண்ணுள ரொக்கற்றலைவ (மலைபடு. 50). |
கண்ணுளாளன் | kaṇṇuḷ-āḷaṉ n. <>id. +. Actor, dancer; masquerader; கூத்தன். |
கண்ணுறக்கம் | kaṇ-ṇ-uṟakkam n. <>கண்+. Dozing, slumber, sleep; நித்திரை. (சூடா. 12, 10.) |
கண்ணுறு - தல் | kaṇ-ṇ-uṟu- v. <>id. +. tr. 1. To see, view, look at; பார்த்தல். கற்கணியக் கனிகின்ற துயரானைக் கண்ணுற்றான். (கம்பரா. குகப். 29). 2. To meet; to come upon by chance; 3. To approach, reach; |
கண்ணுறுத்து - தல் | kaṇ-ṇ-uṟuttu- v. intr. <>id. +. 1. To smart, as the eyes; கண்ணோதல். 2. To be envious; |
கண்ணுறை | kaṇ-ṇ-uṟai n. <>id. + உறை. 1. Curry; relish; கறி. வெண்சோற்றுக் கண்ணுறையாக (புறநா. 61, 5). 2. Curry-stuff; |
கண்ணுறை | kaṇ-ṇ-uṟai n. <>id. உறுத்து-. Fear at the mere sight of a thing; fright; கண்ணாற்கண்டஞ்சும் அச்சம். மத்திகைக் கண்ணுறையாக (கலித். 96, 12). |
கண்ணூறு | kaṇ-ṇ-ūṟu n. <>id. +. Evil eye, blight of the eyes causing sickness or misfortune; திருஷ்டிதோஷம் அந்திநின்று கண்ணூறழித்தா ளணிநீ றளித்தே (தணிகைப்பு. களவு. 329). |
கண்ணூறுகழி - த்தல் | kaṇ-ṇ-ūṟu-kaḻi- v. intr. <>கண்ணூறு+. To dispel the blight of an evil eye by prescribed ceremonies; திருஷ்டி தோஷம் போக்குதல். |
கண்ணெச்சில் | kaṇ-ṇ-eccil n. <>கண்+. See கண்ணூறு. கண்ணெச்சிற்படாமைக்குக் கரி பூசுகிறார். (ஈடு. 5, 1, 2). |
கண்ணெடுத்துப்பார் - த்தல் | kaṇ-ṇ-eṭuttu-p-pār- v. tr. <>id. +. 1. To lift up one's eyes and see; to look intently at a thing; கவனித்துப்பார்த்தல். 2. To look with favour, as a superior; |
கண்ணெடுப்பு | kaṇ-ṇ-eṭuppu n. <>id. +. Swelling at the corner of the eye, Dacrocystitis; கடைக்கண்ணில் உண்டாகும் நோய்வகை. (சீவரட். 269.) |
கண்ணெரிவு | kaṇ-ṇ-erivu n. <>id. +. Smarting of the eyes, from want of sleep, from heat, from intemperance; தூக்கமின்மை முதலியவற்றால்நேருங் கண்ணெரிச்சல். |
கண்ணெழுத்தாளன் | kaṇ-ṇ-eḻuttāḷaṉ n. <>id. +. One who writes letters dictated by the king, amanuensis to the king; அரசனது திருமுகம் எழுதுவோன் (சிலப். 26, 170). |