Word |
English & Tamil Meaning |
---|---|
கண்ணாமண்டை | kaṇṇā-maṇṭai n. <>id. +. Frontal bone; கண்மேலுள்ள எலும்பு. (W.) |
கண்ணாமூய்ச்சி | kaṇṇā-mūycci n. <>id. + மூய்-. See கண்ணாம்பூச்சி.(J.) . |
கண்ணாயிரம் | kaṇ-ṇ-āyiram n. <>id. +. Indra, the thousand-eyed; இந்திரன்.(W.) |
கண்ணாயிரு - த்தல் | kaṇ-ṇ-āy-iru- v. intr. <>id. +. 1. To be watchful, vigilant, closely attentive; to look steadfastly; விழிப்பாயிருத்தல். 2. To be dear, precious; |
கண்ணார் | kaṇṇār n. <>கண்ணு- + ஆ neg. Enemies, foes; பகைவர். கண்ணார்மதிக்கும் கவிராச சிங்கம் (தமிழ்நா. 240). |
கண்ணாரக்காண்(ணு) - தல் | kaṇ-ṇ-āra-k-kāṇ- v. tr. <>கண்+. 1. To see with one's own eyes; கண்கூடாகப் பார்த்தல். (திவ். இயற். திருவிரு. 97.) 2. To have a full view to one's complete satisfaction; |
கண்ணாலக்காணம் | kaṇṇāla-k-kāṇam n. <>kalyāṇa +. An ancient marriage tax; விவாகத்தின் பொருட்டுச் செலுத்தும் ஒரு பழையவரி. (I.M.P.Cd. 563). |
கண்ணாலம் | kaṇṇālam n. <>kalyāṇa. Wedding, marriage; கலியாணம். கண்ணாலங் கோடித்து (திவ். நாய்ச். 11, 9, ). |
கண்ணாலமுருக்கு | kaṇṇāḷa-murukku n. See கலியாணமுருக்கு. (தைலவ. தைல. 103, உரை.) . |
கண்ணாவி | kaṇ-ṇ-āvi n. <>கண்+. Evil eye, blight of the eyes; கண்ணூறு. Loc. |
கண்ணாள் | kaṇṇāl n. <>id. Sarasvatī, the goddess of learning; சரசுவதி. (பிங்) |
கண்ணாளன் | kaṇ-ṇ-āḷaṉ n. <>id. +. 1. Husband, lover, used as a term of endearment; நாயகன். மதுமலராள் கண்ணாளா (திவ். பெரியதி. 8, 10, 4). 2. Associate, companion, as an affectionate friend; 3. Smith, artisan; |
கண்ணாற்சுடு - தல் | kaṇṇāṟ-cuṭu- v. tr. <>id. +. To blight with the eyes; கண்ணேறுபடப் பார்த்தல். (W.) |
கண்ணாறு | kaṇ-ṇ-āṟu n. <>id. +. 1. Irrigation water-course leading to a paddy field, as a stream issuing from a sluice; பாசனவாய்க்கல். (S.I.I. iii, 78.) 2. Block or division of wet lands for purpose of classification according to productivity; 3. Culvert |
கண்ணாஸ்பத்திரி | kaṇ-ṇ-āspattiri n. <>id. +. Eye infirmary, ophthalmic hospital; கண்வைத்தியசாலை. Mod. |
கண்ணி 1 | kaṇṇi n. prob. கண்ணு-. 1. Wreath worn on the head; chaplet; சூடும் பூமாலை. கண்ணியுந் தாருமெண்ணின ராண்டே (தொல். பொ. 634). 2. Flower garlanding general; 3. A flower, used as a military badge; 4. Bunch of flowers; 5. Bud; 6. Gin, snare, noose; 7. Net; 8. Noose of a rope for a bullock's neck; 9. Knot, tie; 10. [K. kaṇṇi.] Rope; 11. [M. kaṇṇi.] Sprout, shoot, tender leaf; 12. Each of the several distiches in long poems as the kali-veṇpā; 13. Stanza of two lines often set to music, and sung without pallavi and aṉupallavi; 14. See கண்ணிக்கால். Loc. |
கண்ணி 2 | kaṇṇi n. <>அழுகண்ணி. See அழுகண்ணி. . |
கண்ணி 3 | kaṇṇi n. <>கரிசலாங்கண்ணி. See கரிசலாங்கண்ணி. (தைலவ. தைல. 103.) . |
கண்ணிக்கயிறு | kaṇṇi-k-kayiṟu n. <>கண்ணி1 +. Thread of linen wound on the two beams of a weaver's loom, which the reed moves up and down; நெய்வாரது விழதுக்கயிறு. (W.) |
கண்ணிக்கால் | kaṇṇi-k-kāl n. <>id. +. Branch channel; கிளைவாய்க்கால். |
கண்ணிக்கொடி | kaṇṇikkoṭi n. prob. id.+. See கருங்காக்கணம் (மூ .அ.) . |
கண்ணிகட்டு - தல் | kaṇṇi-kaṭṭu- v. intr. <>கண்ணி1+. 1. To bud; அரும்புகொள்ளுதல். 2. To set a snare, a net; |
கண்ணிகண்ணு - தல் | kaṇṇi-kaṇṇu- v. intr. <>id.+. To plan such warlike operations as are appropriate to the particular flower donned as the military badge; சூடியபோர்க்கண்ணிக்கேற்ப வினைசெய்யக் கருதுதல். கண்ணி கண்ணிய வய்வர் பெருமகன் (பதிற்றுப். 58, 8). |
கண்ணிகம் | kaṇṇikam n. Black Nightshade; See மணித்தக்காளி. (மலை.) . |