Word |
English & Tamil Meaning |
---|---|
கண்ணறையன் | kaṇ-ṇ-aṟaiyaṉ n. <>id. +. 1. Blind man; குருடன். கண்ணறையன் கொடும்பாட னென்றுரைக்க வேண்டா (தேவா. 678, 9). 2. Hard hearted person; |
கண்ணன் 1 | kaṇṇaṉ n. <>id. One who has eyes; கண்ணுடையவன். |
கண்ணன் 2 | kaṇṇaṉ n. <>Pkt. Kaṇṇa<>Krṣṇa. 1. Krṣṇa; கிருஷ்ணன். (திவ். திருவாய், 10, 8, 1.) 2. Viṣṇu; |
கண்ணனான் | kaṇ-ṇ-aṉāṉ n. <>கண்+அன்னான். Priest, who conducts religious ceremonies; புரோகிதன் கண்ணனாரொடு கடிகையும் வருகென (சீவக. 2362). |
கண்ணா - தல் | kaṇṇa- v. intr. <>id. +. 1. To be intently bent upon, mindful; கருத்துவைத்தல். கருமமே கண்ணாயினார் (நீதிநெறி. 53). 2. To be as precious as the eye; |
கண்ணா | kaṇṇā n. <>kaṇā. 1. Long pepper; See திப்பிலி. (மலை.) . 2. Racemed lanceleaved Digitate Ivy, Heptapleurum racemosum; |
கண்ணாஞ்சுழலை | kaṇṇā-cuḻalai n. <>கண்+ஆம்+. Rolling the eyes about; மருண்டு பார்க்கை. கண்ணாஞ்சுழலையிட்டு அதிசங்கை பண்ணூங்காட்டில் (ஈடு, 8, 1, 4). |
கண்ணாட்டி | kaṇ-ṇ-āṭṭi n. <>id. +. She who is regarded with the greatest affection, woman greatly beloved a term of endearment; lit apple of the eye; காதலி. கண்ணாட்டி போனவழி (இராமநா. ஆரணி. 26). |
கண்ணாடி | kaṇ-ṇ-āṭi n. <>id. + ஆடு-. [M. kaṇṇādi.] 1. Mirror made of burnished gold or of any polished metal; உருவம் பிரதிவிம்பிக்கும் படிமக்கலம். (சீவக. 2327). 2. Glass things; 3. Looking glass; 4. Spectacles; |
கண்ணாடிக்கதவு | kaṇṇāṭi-k-katavu n. <>கண்ணாடி+. Glazed door; கண்ணாடியிட்டமைத்த கதவு. (C.E.M.) |
கண்ணாடிச்சால் | kaṇṇāṭi-c-cāl n. <>id. +. Blank spaces or balks left between the furrows, in cross ploughing; எதிருங் குறுக்குமாக உழும் உழவில் நடுவில்விடப்படும் திடர். (W.) |
கண்ணாடிச்சுவர் | kaṇṇāti-c-cuvar n. <>id. +. Small wall raised to screen the over in a room; அடுப்பையடுத்த சிறுசுவர். (W.) |
கண்ணாடித்தாரா | kaṇṇāti-t-tārā n. <>id. +. A kind of duck; ஒருவகை வாத்து. |
கண்ணாடிப்பலகை | kaṇṇāti-p-palakai n. <>id. +. Plank with a peep-hole for looking through; பார்ப்பதற்கேற்ற துவாரமுள்ள பலகை. (W.) |
கண்ணாடிப்புடையன் | kaṇṇāti-p-puṭaiyaṉ n. <>id. +. See கண்ணாடிவிரியன். . |
கண்ணாடிப்புடைவை | kaṇṇāṭi-p-puṭaivai n.<>id. +. A thin, inferior kind of cloth; ஒருவகை மெல்லிய ஆடை. (W.) |
கண்ணாடியிலை | kaṇṇāṭi-y-ilai n.<>id. +. 1. Last leaf of a plantain next to the fruit; வாழையின் ஈற்றிலை. Loc. 2. Sunder-tree, m.tr., Heritiera formes; |
கண்ணாடிவிசிறி | kaṇṇāṭi-viciṟi n. <>id. +. Fan-light, fan-shaped window over a door; நிலையின்மேல் அமைக்கும் விசிறிவடிவமான கண்ணாடியடைப்பு. (C.E.M.) |
கண்ணாடிவிரியன் | kaṇṇāṭi-viriyaṉ n. <>id. +. [M. kaṇṇāram] Russell's Viper, Daboia russellii, so called from its having on its back bright squares resembling lenses; விரியன்பாம்பு வகை. |
கண்ணாணி | kaṇ-ṇāṇi n. <>id. +. Pupil of the eye; கருவிழி. கண்ணயாகவிறே காண்பது (ஈடு, 4, 7, 4). |
கண்ணாணிப்பூ | kaṇ-ṇ-āṇi-p-pū n. <>கண்ணாணி+. Leucoma; கண்ணில்விழும் பூ. |
கண்ணாணை | kaṇ-ṇ-āṇai n. <>கண்+. Oath taken upon one's own eyes; ஒரு சூளூரை. காமாவுன் கண்ணாணை (தனிப்பா. i, 298, 10). |
கண்ணாம்பூச்சி | kaṇ-ṇ-ām-pūcci n. <>id. + மூய்-. The children's game of hide-and-seek; கண்கட்டியாடும் பிள்ளை விளையாட்டுவகை. |
கண்ணாம்பூச்சிபற - த்தல் | kaṇ-ṇ-ām-pūcci-paṟa v. intr. <>id.+பூச்சி+. To be dazzled, as the eyes from glare; to swim, as the eyes from weakness or from defective vision; கண்ணுக்கு மின்மினிபறப்பதுபோல் தோன்றுதல். Loc. |
கண்ணாம்பூச்சியாடு 1 - தல் | kaṇ-ṇ-ām-pūcci-y-āṭu- v. intr. <>id.+. To play the game of blindman's buff; கண்கட்டி ஓடிவிளையாடுதல். |
கண்ணாம்பூச்சியாடு 2 - தல் | kaṇ-ṇ-ām-pūcci-y-āṭu- v. intr. <>id.+பூச்சி+. See கண்ணாம்பூச்சிபற-. . |
கண்ணாம்பொத்தி | kaṇ-ṇ-ām-potti n. <>id. +. See கண்ணாம்பூச்சி. Loc. . |