Word |
English & Tamil Meaning |
---|---|
கண்ணிகுத்து - தல் | kaṇṇi-kuttu- v. intr. <>கண்ணி1+. To set a noose for ensnaring game; சுருக்குக்கயிறுவைத்தல். கண்ணிகுத்தி வலைதொடுத்து (தணிகைப்பு. அகத். 439). |
கண்ணிகை | kaṇṇikai n. <>karṇikā. Pericarp of the lotus; தாமரைப்பொகுட்டு. |
கண்ணிடுக்கு - தல் | kaṇ-ṇ-iṭukku- v. intr. <>கண்+. To be half asleep, to be drowsy; தூக்கமயக்கமாயிருத்தல. (W.) |
கண்ணிதழ் | kaṇ-ṇ-itaḻ n. <>id.+. See கண்ணிமை. . |
கண்ணிநடு - தல் | kaṇṇi-naṭu- v. intr.<>கண்ணி1+. To set a net or a snare; வலை அல்லது கண்ணி வைத்தல். (W.) |
கண்ணிநுண்சிறுத்தாம்பு | kaṇṇi-nuṇ-ciru-t-tādmpu n. <>id. +. A poem of the name by Matura-kavi-y-āḻvār, so called because it commences with these words; திவ்யப் பிரபந்தங்களுள் மதுரகவியாழ்வார் அருளிச்செய்த நூல். |
கண்ணிப்பாறை | kaṇṇi-p-pāṟai n. <>id. +. Horse-mackerel, bluish green, attaining at least one foot in length, Caranx atropus; சிறு கடல்மீன் வகை |
கண்ணிமை | kaṇ-ṇ-imai n. <>கண்+. [K. kaṇṇime, M. kaṇṇima.] 1. Eyelid; கண்ணிதழ். 2. Eye-wink, moment as measured by a wink; |
கண்ணிமை - த்தல் | kaṇ-ṇ-imai- v. intr. <>id.+. To wink; இமை கொட்டுதல். கண்ணி மைத்தலான் (நள. சுயம்வர. 153). |
கண்ணிமைப்பசபசப்பு | kaṇ-ṇ-imai-p-paca-pacappu n. <>கண்ணிமை+. Inflammation of the eyelids, Blepharitis marginitis; கண்ணிமையின் அரிப்பு. |
கண்ணிமையார் | kaṇ-ṇ-imai-yar n. <>id. +. See இமையார். (சீவக. 248.) . |
கண்ணியம் 1 | kaṇṇiyam n. <>gaṇya. Respectability, dignity, honour; கௌரவம். |
கண்ணியம் 2 | kaṇṇiyam n. Tree Turmeric. See மரமஞ்சள். (L.) . |
கண்ணிரங்கு - தல் | kaṇ-ṇ-iraṅku- v. intr. <>கண்+. 1. To sound; ஒலித்தல். கலாபம்வீங்கி மிளிர்ந்து கண்ணிரங்க (சீவக. 1985). 2. To pity; to have compassion; |
கண்ணில்[ற்] - த[ற]ல் | ka-ṇil- v. intr. <>id. + நில்-. To stand before one's eyes; எதிர் நிற்றல். கண்ணின்று கண்ணறச் சொல்லினும் (குறள், 184). |
கண்ணிலன் | kaṇ-ṇ-ilaṉ n.<>id.+இல் neg. Blind man; குருடன். 2. Merciless man; |
கண்ணிலி | kaṇ-ṇ-ili n. <>id.+. Blind person கண்ணில்லாதவ-ன்-ள். கண்ணிலி குமரன் வெம்பி (பாரத பதின்மூன். 91). |
கண்ணிவை - த்தல் | kaṇṇi-vai- v. intr. <>கண்ணி1+. To set a snare or trap for catching game etc.; புள்முதலியவற்றை அகப்படுத்தச் சுருக்குக்கயிறு தொடுத்துவைத்தல். Colloq. |
கண்ணிறுக்கம் | kaṇ-ṇ-iṟukkam n. <>கண்+. A disease of the eyes, esp. of children. Ophthalmia neonatorum; கண்ணோய்வகை. (தைலவ. தைல. 57). |
கண்ணிறை | kaṇ-ṇ-iṟai n. <>id. +இறு-. Sleep; துக்கம். பின்னர்க் கண்ணிறை கோடல் செய்யான் (கம்பரா. கும்பக.10). |
கண்ணினளவு | kaṇṇiṉ-aḷavu n. <>id. +. Moment as measured by a wink, eye-wink; ஒருமாத்திரை யளவு. (சீவக. 1393.) |
கண்ணீர் 1 | kaṇṇīr n. <>id.+. [T. kannīru, K. M. kaṇṇīr, Tu. kaṇṇa-nīr.] Tears; விழிநீர். (மணி. 3, 13.) |
கண்ணீர் 2 | kaṇṇīr n. <>கள்+. Toddy; கள்ளாகிய நீர். (சிலப். 13, 188. உரை.) |
கண்ணீர்நடுக்குறை | kaṇṇīrnaṭukkuṟai n. Spreading Hogweed; See மூக்கிரட்டை. (மலை.) . |
கண்ணீர்முட்டல் | kaṇṇīr-muṭṭal n. <>கண் +. Increased fluid-pressure within the eyeball, Glaucoma; கண்ணோய்வகை. |
கண்ணீர்விடு - தல் | kaṇṇīr-viṭu- v. intr. <>கண்ணீர்1+. 1. To weep, shed tears; கண்ணீர் சிந்துதல். 2. To grieve, feel sad; |
கண்ணீராக்கி | kaṇṇīr-ākki n. <>id. +. Crude camphor; பச்சைக்கருப்பூரம். (W.) |
கண்ணு - தல் | kaṇṇu- 5 v. tr. 1. To purpose, think, consider; கருதுதல். கண்ணிய துணர்தலும் (மணி. 2, 25.) 2. To be attached to, fastened to; |
கண்ணுக்கரசன் | kaṇṇukkaracaṉ n. <>கண்ணுக்கு + அரசன். Blue vitriol; துரிசு. (மூ. அ.) |
கண்ணுக்கினியான் | kaṇṇukkiṉiyāṉ n. <>id. + இனியான். (மூ. அ.) 1. Lit., that which is good for eyes, name of a medicinal plant. See பொன்னாங்காணி. . 2. A plant growing in wet places; See கையாந்தகரை. |
கண்ணுக்குக்கண்ணா - தல் | kaṇṇukku-k-kaṇ-ṇ-ā- v. intr. <>id. +. 1. To be very dear, precious, as the eye; மிகப்பாராட்டப்படுதல். அவன் கண்ணுக்குக் கண்ணாயிருந்தான். 2. To be a trusted confidant; |