Word |
English & Tamil Meaning |
---|---|
கண்மாறு - தல் | kaṇ-māṟu- v. <>id. + intr. 1. To appear and disappear in a twinkling; தோன்றி உடனே மறைதல். கண்மாறாடவர் (மதுரைக். 642). 2. To be humbled down from a high position; to be humbled; |
கண்மிச்சில் | kaṇ-miccil n. <>id. +. See கண்ணூறு. போக்கும் பொறுளாற் கண்மிச்சில் போக்கி (பிரபுலிங். மாயையுற். 48). . |
கண்மின்னு - தல் | kaṇ-miṉṉu v. intr. <>id. +. See கண்பொறிதட்டு-. (W.) . |
கண்முகப்பு | kaṇ-mukappu n. <>id. +. Direct view; கண்ணின் முன்னிடம். நங்கண்முகப் பேமாவேறிச் செல்கின்ற மன்னவரும் (திவ். இயற். 2, 69) . |
கண்முகிழ் 1 - த்தல் | kaṇ-mukiḻ- v. intr.<> id. +. 1. To shut the eyes; கண்ழடுதல். (கம்பரா. நாகபா. 244.) 2. To put one's eyes together, become drowsy; to go to sleep; |
கண்முகிழ் 2 | kaṇ-mukiḻ n. <>id. +. Eyelid; இமை. கண்முகிழ் திறந்தால் (வெங்கைக்கோ. 218). |
கண்முழி | kaṇ-muḻi n. <>id + விழி. Vul. for கண்விழி. . |
கண்மூடி | kaṇ-mūṭi n. <>id. +மூடு-. Lit., one who has his eyes shut, fig., one who is lacking in mental perception, discernment or foresight; inconsiderate, heedless, reckless person; கவனமில்லாதவன். Colloq. |
கண்மூடித்தனம் | kaṇ-mūṭi-t-taṉam n. <>id. +. Folly, recklessness, negligence; கவனமின்மை. |
கண்மூடு - தல் | kaṇ-mūṭu v. intr. <>id. +. 1. To close the eyelids; இமைகுவித்தல். கண்மூடி மௌனியாகி (தாயு. சச்சிதா. 5). 2. To sleep; 3. To die, an euphemism |
கண்மை 1 | kaṇ-mai n. <>id. + மை. Black pigment for the eyelids; கண்ணுக்கிடும் அஞ்சனம் |
கண்மை 2 | kaṇmai n. <>id. +. மை Part. 1. Gracious look, favour; sympathy, kindliness; கண்ணோட்டம். (பிங்.) 2. view, scenery |
கண்ரெப்பை | kaṇ-reppai n. <>id. +. Eye-lash; கண்ணிதழ். |
கண்வட்டம் | kaṇ-vaṭṭam n. <>id.+. 1. Range of vision, eye-sweep, full reach of one's obervation; கண்பார்வைக்குட்பட்ட இடம். தங்கள் கண்வட்டத்திலே உண்டுடுத்திரிகிற (ஈடு, 3, 5, 2). 2. Mint; |
கண்வரி | kaṇ-vari n. <>id. +. Red streaks in the white of the eye; வெள்விழியின் செவ்வரி. (W.) |
கண்வலி | kaṇ-vali n. <>id. +. See கண்ணோவு. . |
கண்வலிப்பூ | kaṇ-vali-p-pū n. <>id. +. Eye-flower so called because it is used as a medicine for sore-eyes. See நந்தியாவட்டம் |
கண்வழுக்கு - தல் | kaṇ-vaḷukku- v. intr. <>id. +. To be dazzled, as the eye; கண்கூசுதல. கண்வழுக்கு சுடர்மாலை (கூர்மபு. திருக்கல்.18). |
கண்வளர் - தல் | kaṇ-vaḷar- v. intr. <>id. +. 1. To sleep தூங்குதல். இளந்தளிர்மேற் கண்வளர்ந்தவீசன்தன்னை(திவ். பெரியதி. 2, 10, 1). 2. To close, as the petals of a flower; |
கண்வளையம் | kaṇ-vaḷaiyam n. <>id. +. valaya. Dark ring around the beaten centre of a drumhead; மத்தளத்தின்கண்ணைச் சுற்றியுள்ள வட்டம். (பரத. ஒழிபி.12. உரை.) |
கண்வாங்கு - தல் | kaṇ-vāṅku- v. <>id. +. intr. 1. To attract attention; to be inviting; கண்ணைக்கவர்தல். காந்தள் கடிகமமுங் கண்வாங் கிருஞ்சிலம்பில் (கலித். 39, 15). 2. To withdraw attention; to cease to take notice;நோக்கம் ஒழிதல்.- tr. To clean out a well, making its springs clear; |
கண்வாரு - தல் | kaṇ-vāru- v. tr. <>id.+. See கண்வாங்கு-. பழங்கிணறு கண்வாருகிறதென் (திவ். திருமாலை, 36, வ்யா.120). |
கண்விடு 1 - தல் | kaṇ-viṭu- v. intr. <>id.+. 1. To break as the eye of a needle; ஊசிழதலியவற்றின் காது ஓடிதல். (W.) 2. To farm ,as butter while churning; 3. To melt, as silver; 4. To form, as openings in an ulcer; |
கண்விடு 2 - த்தல் | kaṇ-viṭu- v. tr. <>id.+. 1. To open the eyes; விழித்துப்பார்த்தல். கடவுண்மால்வரை கண்விடுத் தன்ன (சிறுபாண். 205). 2. See கண்திற- |
கண்விடுதூம்பு | kaṇ-viṭu-tūmpu n. <>id.+. Kind of drum; தோற்கருவிவகை. (சிலப். 3. 27. உரை.) |
கண்விதுப்பழி - தல் | kaṇ-vituppaḻi- v. intr.<>id. + விதுப்பு +.(Erot.) To blur, as the eyes of a maiden eagerly longing to see her lover; to be distressed in mind as a consequence of such wistful gazing; தலைவனைக் காண்டற்கு விரைந்து தலைவி வருந்துதல். (குறல், அதி.118.) |