Word |
English & Tamil Meaning |
---|---|
கணக்குச்சுமத்து - தல் | kaṇakku-c-cumattu- v.intr.<>id.+. To charge to one's account; கணக்கேற்றுதல். |
கணக்குச்சுருணை | kaṇakku-c-curaṇai n.<>id. +. Roll or file of accounts on palmyra leaves, kept by a village accountant; கணக்கோலைக்கற்றை, |
கணக்குச்சுருள் | kaṇakku-c-curuḷ, n.<>id.+. See கணக்குச்சுருணை . |
கணக்குச்சொல்(லு) - தல் | kaṇakku-c-col- v. intr. <>id. +. To give details of receipts and disbursements; கணக்கு விவரம் சொல்லுதல். |
கணக்குத்தீர் - தல் | kaṇakku-t-tīr. v. intr.<>id.+. 1. To be closed, as an account; கணக்குப் பைசலாதல். 2. To be made, as a settlement; |
கணக்குப்பார் - த்தல் | kaṇakku-p-pār- v. <>id.+. tr. To reckon, calculate intr; To audit accounts; எண்ணிக்கணக்கிடுதல்.- கணக்குப் பரிசோதித்தல். |
கணக்குப்பிள்ளை | kaṇakku-p-piḷḷai n. <>id.+. See கணக்குப்பிள்ளை . |
கணக்குப்பூட்டு - தல் | kaṇakku-p-pūṭṭui v. intr. <>id.+. To post up accounts into the lodger; கணக்கைப்பேரேட்டுக்குக் கொண்டுவருதல். loc. |
கணக்குமானியம் | kaṇakku-māṉiyam n. <>id.+. Land granted rent-free to the village accountant for his services, a service inam; கணக்குனுக்குக்கொடுக்கும் இறையிலி நிலம். |
கணக்குவழக்கு | kaṇakku-vaḻakku n. <>id.+. 1. Justice, order, regulation; முறைமை. அடியேன் கண்கொள்வதே கணக்குவழக்காகில் (தேவா. 1110, 4). 2. Limit, bound; 3. Accounts, pecuniary affairs; 4. Money dealings; |
கணக்கொதுக்கு - தல் | kaṇakkotukku- v. <>id. + intr. (w). To settle an account; tr. to ruin, reduce to poverty; கணக்குத்தீர்த்தல் கெடுத்தல் |
கணக்கொப்பி - த்தல் | kaṇakkoppi- v. intr. id. +. See கணக்கொப்புவி . |
கணக்கொப்புவி - த்தல் | kaṇakkoppuvi- v. intr. <>id. +. To render accounts கணக்கைப்பிறரேற்க விவரித்தல். |
கணக்கோலை | kaṇakōlai n. <>id.+ ஓலை. 1. Palmyra leaf on which accounts are written; கணக்கெழுதப்பெற்ற ஏடு. 2. Indented palmyra leaves useful for writing accounts; |
கணகண - த்தல் | kaṇa-kaṇa- v. intr. onom. 1. To sound, rattle, jingle, tinkle; ஓலித்தல், திருகுளம்பிற் கணகணப்ப (திவ். பெரியதி. 4, 4, 8). 2. To feel feverish, as from disease, from exposure to the sun, or from taking spirituous liquors; |
கணகணப்பு | kaṇa-kaṇappu- n.<>கணகண- Temperature of the body slightly more than normal; தேககாங்கை, உடம்பு கணகணப்பாயிருக்கிறது. |
கணகணெனல் | kaṇa-kaṇ-eṉal n. onom. 1. Tintinnabulation; tinkling, as of bells; chiming; ஓலிக்குறிப்பு. உடைமணி கணகணென (திவ். பெரியாழ்.1, 7, 7). 2. Burning fiercely, as fire with a hollow roar; 3. Feeling feverish; |
கணகம் | kaṇakam n. Prob. gaṇa. Division of an army consisting of 27 chariots, 27 elephants; 81 horses and 135 footmen; தனித்தனி 27, தேர் யானைகளும், 81, குதிரைகளும், 135 காலாட்களுமுள்ள படைப்பிரிவு. (பிங்.) |
கணகன் | kaṇakaṉ n. <>gaṇaka 1. Village accountant; கணக்கப்பிள்ளை. இவ்வூர்க் கணகன் பஞ்சநதி லஷ்மணன் (S.I.I.iii, 88). 2. Astrologer |
கணச்சூடு | kaṇa-c-cūṭu n.<>கணம்+. See கணச்சூடு . |
கணசங்கியாபாகம் | kaṇa-caṅkiyā-pākam n.<>gaṇa+saṅkhyā+. Aggregate number of shares into which the lands of a village are, at the time of the original grant, equally divided; கிராமப்பங்குகளின் பிரிவுத்தொகை. loc. |
கணத்தார் | kaṇattār n.<>gaṇa. Managers of village affairs; ஊர்க்காரியநிர்வாகிகள். (I.M.P.Tj. 569.) |
கணத்தி | kaṇatti n. 1. A prepared arsenic; ஒருவகை வைப்பரிதாரம். (மூ.அ.) 2. Small Indian oak. See செங்கடம்பு (L.) |
கணதரன் | kaṇa-taraṉ n.<>gaṇa+dhara. Arhat; அருகன். கணதர ரேறுசெந் தாமரைகாண் (திருநூற். 59). |
கணந்துள் | kaṇatti n. A kind of bird; பறவைவகை. (சிலப்.10, 117, உரை.) |
கணநாதநாயனார் | kaṇa-nāta-nāyaṉār n.<>gaṇa+. Name of a canonized saiva saint one of 63; அறுபத்துழவர் நாயன்மாருள் ஒருவர். (பெரியபு.) |