Word |
English & Tamil Meaning |
---|---|
கணவர் | kaṇavar n. <>gaṇa. Members of a group or assemblage; கூட்டத்தார். பூதகணவர் (கந்தபு. திருக்கயி. 8). |
கணவலர் | kaṇa-v-alar n. prob. id. +. Sweet oleander. See அலரி கள்ளார்துழாயுங் கணவலரும் (திவ்.பெரியதி. 11, 7, 6). . |
கணவன் | kaṇavaṉ n. prop. கண். [M. kaṇavaṉ.] Husband; கொழநன். எங்கணவ ரெந்தோண் மேற் சேர்ந்தெழினும் (நாலடி, 385). |
கணவாட்டி | kaṇavāṭṭi n. Woman of the kaṇavāḷam caste; கணவாளச்சாதிப் பெண். (நன். 276, மயிலை.) |
கணவாய் 1 | kaṇavāy n. [T. kanama, K. kaṇavē.] Define between hills; mountain pass, ravine, ghat; மலைகளுக்கிடையுள்ள சிறுவழி. (பிங்.) |
கணவாய் 2 | kaṇavāy n. Cuttlefish, a cephalopod, sepia; சிப்பிவகை. (J.) |
கணவாய்மை | kaṇavāymai n. <>கணவாய்2 + மை. Black liquid found in the shell of a cuttlefish, sometimes used for ink; ஒருவகைச் சிப்பியின் கருநீர். (W.) |
கணவாயோடு | kaṇavāy-ōṭu n. <>id. +. Shell of the cuttlefish; கணவாய்ச்சிப்பியின் ஓடு. |
கணவாளம் | kaṇavāḷam n. An ancient caste; ஒருசாதி. கணவாளகுலத்தினன் செட்டிப்பிள்ளையப்பன் (பெருந்தொ. 1349). |
கணவாளன் | kaṇavāḷaṉ n. Man of the kaḷavāḷam caste; கணவாளச்சாதியான். (இலக். வி. 52, உரை.) |
கணவிரம் | kaṇavīram n. See கணவீரம். கணவிர மாலை (மணி. 3, 104). . |
கணவீரம் | kaṇavīram n. <> Pkt. kaṇavira <> karavīra. Red Oleander; செவ்வலரி. பெருந்தன் கணவீர நறுந்தண் மாலை (திருமுரு. 236) |
கணன் 1 | kaṇaṉ n. <>கள்- + ந் + அன். Thief, rogue; திருடன். (சைவச. பொது. 248.) |
கணன் 2 | kaṇaṉ n. <>gaṇa. Collection, aggregation, whole series; தொகுதி, கணனடங்கக் கற்றுனு மில் (சிறுபஞ். 31). |
கணனம் | kaṇaṉam n. <>gaṇana. (Astron.) Calculation of the movement of planets etc., கிரகநடை முதலியன கணிக்கை. |
கணனை | kaṇaṉai n. <>gaṇanā. Number; எண். பரிசங் கணனை பரிமாணம் (பிரபோத. 42, 2). |
கணாதமதம் | kaṇāta-matam n. <>kaṇāda +. The Vaišeṣika branch of the Nyāya system of philosophy, founded by kaṇātaṉ; வைசேடிகமதம். |
கணாதர் | kaṇātar n. <>kāṇāda. Logicians; தார்க்கிகர். ஆய்ந்த கணாதர்கள் (திருக்காளத். பு. 5, 41). |
கணாதன் | kaṇātaṉ n. <>kaṇāda. Lit., 'atom-eater', name of the founder of the Vaišesika system of Indian Philosophy, which is closely allied to the Nyāya system with which it came to be syncretized at later stages, the original relation of Indian atomism to the Vaišeṣika system; வைசேடிக மதாசாரியனான முனி வன் அக்கபாதன் கணாதன் சைமினி (மணி. 27, 82). |
கணாமூலம் | kaṇā-mūlam n. <>kaṇā +. Long-pepper root; திப்பலிவேர். (தைலவ. தைல. 82.) |
கணாரிடல் | kaṇār-iṭal n. <>கணார் Onom. + இடு-. Ringing, as of a bell; senorous pealing; clanging, as sounding brass; echoing, as rock; ஒலிக்கை. (J.) |
கணி 1 | kaṇi n. cf. அகணி. Agricultural tract; மருதநிலம். (பிங்.) |
கணி 2 | kaṇi n. <>gaṇi. 1. Learned man; one who is well versed in some branch of knowldege நூல்வல்லவன். கணிபுகழ் காளை (சீவக. 722). 2. Painter; 3. Astrologer; 4. East Indian Kino. See வேங்கை. (திவா.) 5. Science; any branch of knowledge; |
கணி 3 - த்தல் | kaṇi- 11 v. tr. <>gan. 1. To compute, reckon, calculate, count; கணக்கிடுதல். 2. To estimate, conjecture, surmise; 3. To esteem, honour, respect, regard; 4. To read, study; 5. To create; 6. To repeat mentally in worship, as mantras; |
கணிக்காரிகை | kaṇi-k-kārikai n. <>கணி2 +. Female fortune-teller, as a gypsy ; குறிசொல்லும் பெண். (தொ. பொ. 60, உரை பழையபதிப்பு.) |
கணிகம் 1 | kaṇikam n. cf. gaṇa. One thousand millions; நூறுகோடி. (W.) |
கணிகம் 2 | kaṇikam n. <>kṣaṇika. 1. Moment, short duration of time; காலநுட்பம். காலங்கணிகமெனுங் குறுநிகழ்ச்சியும் (மணி. 27, 191). 2. That which is momentary, transient; 3. Lingam made of earth, rice, or any material, near at hand, for worship, for the occasion; |