Word |
English & Tamil Meaning |
---|---|
கணநாதன் | kaṇa-nātaṉ n. <>gaṇa-nātha. 1. chief of šiva's hosts; சீவகணத்தலைவன். நடந் தெதிர்ந்த கணநாதரை யெல்லாம் (கந்தபு. தாரக. 123). 2. Ganesa; See கணநாதநாயனர். |
கணப்பறை | kaṇa-p-parai n. A kind of drum; தோற்கருவிவகை. (சிலப். 3, 27, உரை). |
கணப்பு | kaṇappu n. cf. கணகண-. 1. Fire kindled to dry one who is wet or to give warmth to one who feels cold; குளிர்காயுந் தீ. See கணப்புச்சட்டி. |
கணப்புச்சட்டி | kaṇappu-c-caṭṭi n. <>கணப்பு +. Earthen vessel with charcoal etc., used for warming oneself; a kind of earthen grate used in Indian households; குளிர்காய்£கதற்குரிய தீப்பொய்கலம். |
கணப்பெருமக்கள் | kaṇa-p-peru-makkaḷ n. <>gaṇa +. Managers of village affairs in ancient times; ஊர்க்காரியநிர்வாகிகள். ( I. M. P.Cg. 516.) |
கணப்பொருத்தம் | kaṇa-p-poruttam n. <>id. +. 1. (Poet.) Rule of propriety which lays down that the first word in a poem shall be one of nir-k-kaṇam, mati-k-kaṇam, intira-kaṇam , or nila-k-kaṇam , one of ten ceyyuṇmutaṉ- moḻi-p-poruttam , q. v; செய்யுண்முதன் மொழிப்பொருத்தவகை.(வெண்பாப். முதன். 20.) 2. (Astrol.) Correspondence between the horoscopes of the prospective bride and bridegroom in respect of the three kaṇams, viz., tēva-kaṇam, irāṭata-kaṇam, māṉuṭa-kaṇam, one of ten kaliyāṇa-p-poruttam, q. v.,; |
கணப்பொழுது | kaṇa-p-poḻutu n. <>kṣaṇa +. Instant, moment of time; நொடிப்பொழுது. |
கணபங்கம் | kaṇa-paṅkam n. <>id. + bhaṅga. That which is of momentary duration, transient; க்ஷணத்தில் தோன்றியழிவது. புத்தி கண பங்கமெனப் புத்திகெட்டபுத்தனுரை (சிவப். பிரபந். சிவஞா. நெஞ்சு. 210). |
கணபங்கவாதி | kaṉa-paṅka-vāti n. <>id. + id. +. (Phil.) One who asserts that the universe is incessantly appearing every instant and is also as rapidly dissolving; பிரபஞ்சங் கணந்தோறுந்தோன்றியழியும் என்று வாதிப்பவன் . (சி. போ. பா. அவை.) |
கணபதி | kaṇa-pati n. <>gaṇa-pati. 1. Gaṇēša, who is the chief of šiva's hosts; விநாயகன். (திவா.) 2. Name of a Upaniṣad; |
கணபதியணி | kaṇapati-y-aṇi n. <>id. +. Bermuda grass, so called because it is sacred to Gaṇēša. See அறுகு. (தைலவ. தைல. 132.) . |
கணபர் | kaṇa-par n. <>gaṇa-pa. šiva's chief attendants, as guardians of their hosts; சிவகணத்தலைவர். கணபர்கள் வானோரொடு (கோயிற்பு. திருவிழா. 47). |
கணபிச்சை | kaṇa-piccai n. <>kaṇa +. Rice gleaned by an householder, as alms from door to door; இல்வாழ்வானால் வீடுதோறும் வாங்கப்பெறுந்தண்டுல பிட்சை. (சைவச. பொது. 257, உரை.) |
கணம் 1 | kaṇam n. prop. கணகண-. Child's disease. See கணை2, 1. (பிங்.) . |
கணம் 2 | kaṇam n. <>kaṇa. 1. Trifle, triviality; அற்பம். (சூடா.) 2. See கணபிச்சை. (சைவச. பொது. 257.) |
கணம் 3 | kaṇam n. <>kaṇā. Long pepper. See திப்பிலி. (பிங்.) . |
கணம் 4 | kaṇam n. <>gaṇa. 1. Group; collection; class; tribe; clan; flock; herd; series; கூட்டம். கணங்கொண்டு சுற்றத்தார் (நாலடி, 25). 2. Company, assembly, concourse of people; 3. Demon; devil. 4. Constellation, star; 5. Celestial hosts, divided in to 18 classes, viz., அமரர், சித்தர், அசுரர், தைத்தியர், கருடர், கின்னார், நிருதர், கிம்புருடர், கந்தருவர், அயக்கர், விஞ்சையர், பூதர், பிசாசர், அந்தரர், முனிவர், உரகர், ஆகாயவாசியர், போகபூமியர்) 6. The number 18; 7. See கணப்பொருத்தம், 2. (விதான. கடிமண. 4.) 8. Division of an army. See கணகம். (திவா.) 9. Sphericity; globularity; 10 .Circle; |
கணம் 5 | kaṇam n. <>ksaṇa. Moment; shortest duration of time, as measured by a snap with the fingers; காலநுட்பம். வெகுளி கணமேயுங் காத்தலரிது (குறள், 29). |
கணம்புல்லநாயனார் | kaṇam-pulla-nāya-ṉār n. A canonized šaiva saint, one of 63; அறுபத்துமூவர் நாயன்மாருள் ஒருவர். (பெரியபு.) |
கணமாந்தம் | kaṇa-māntam n. <>கணம்1 +. One of eight māntam arising out of fever and disordered bowels; மாந்தவகை. (W.) |
கணமூலி | kaṇamūli n. Buffalo tongue, milk-hedge. See எருமைநாக்கி. (W.) . |
கணவம் | kaṇavam n. Pipal. See அரசு. சாகைக ணிறைபணைக் கணவம் (அரிசமய. பரமபத. 2). . |