Word |
English & Tamil Meaning |
---|---|
கணிகவெற்பு | kaṇika-veṟpu n. <>கணிகம்2 +. The hill of tiru-t-taṇi, in the North Arcot District; திருத்தணிகைமலை. (தணிகைப்பு. வீராட். 121.) |
கணிகன் | kaṇikaṉ n. <>gaṇi. Astrologer; சோதிடன். கணிகரிம் மைந்தன் வைகிற் காவல னிறக்கு மென்ன (காசிக. வீரேசன். 11). |
கணிகாரம் | kaṇikāram n. <>karṇikāra. Red cotton tree. See கோங்கு. கணிகாரங் கொட்குங்கொல் (கலித். 143, 5). . |
கணிகாரி | kaṇi-kāri n. See கணிக்காரிகை. (தொல். பொ. 60, உரை.) . |
கணிகை | kaṇikai n. <>gaṇikā. 1. Harlot, courtesan, prostitute; பொதுமகள். கணிகையொருத்தி கைத்தூணல்க (மணி. 16, 6). 2. Eared jasmine. See முல்லை. கணிகைதுன் றளப்பில் கோங்கு (இரகு. இந்தும. 14). |
கணிச்சி | kaṇicci n. 1. Battle-axe; மழ. மாற்றருங் கணிச்சி மணிமிடற்றோன் (புறநா. 56, 2). 2. Kind of pick- axe for breaking stone; 3. Goad for urging the elephant; 4. Chisel; 5. Axe, hatchet; 6. Knife for cutting the stalk of the betel; |
கணிச்சியோன் | kaṇicciyōṉ n. <>கணிச்சி. šiva, who holds the battle-axe in his hand; மழவேந்தியாகிய சிவன். கணிச்சியோன் சினவலின் (கலித். 2, 6). |
கணிசக்காரன் | kaṇica-k-kāraṉ n. <>கணிசம் +. Estimable person; மதிப்புடையவன். |
கணிசம் | kaṇicam n. <>gaṉ. 1. Estimating, guessing, round calculation; மதிப்பு. கைக்கணிசமாகத் தூக்கிப்பார்த்தான். 2. Honour, dignity, respectability, worth, weight of character; 3. Measure, weight in the hand, size, bulk, in a limited sense; 4. Voice; |
கணிசம்பார் - த்தல் | kaṇicam-pār- v. <>கணிசம் +. tr. 1. To estimate, value, appraise; மதிப்பிடுதல். 2. To estimate roughly the weight of an article by taking it in the hand and shaking it; 1. To be zealous of one's own dignity; 2. To discriminate in respect of caste, or of rank; to examine worth; |
கணிசி - த்தல் | kaṇici- 11 v. tr. <>id. 1. To consider, meditate, comtemplate; சிந்தித்தல். இவன் வளர்ந்தருளுகைக்குக் கணிசித்தபடியைக் கண்டு (ஈடு, 7, 4, 1). 2. To desire, wish for; 3. To honour, esteem; 4. To discern; |
கணிதசாஸ்திரம் | kaṇita-cāstiram n. <>gaṇita +. 1. Mathematics; கணிதநூல். 2. Astronomy, astrology; |
கணிதம் | kaṇitam n. <>gaṇita. 1. Methods of arithmetical calculation; processes of computation, of which eight are mentioned, viz., சங்கலிதம் (கூட்டல்), விபகலிதம்(கழித்தல்), குணனம் (பெருக்கல்), பாகாரம் (வகுத்தல்), வர்க்கம், வர்க்கமூலம், கனம், கனமூலம்; கணக்குவகை. (பிங்.) 2. Arithmetic, mathematices; 3. Astrology including astronomy; 4. That which is predicted by astronomy or prognosticated by astrology; 5. Measure, limit; |
கணிதரத்தினம் | kaṇita-rattiṉam n. <>id. +. Name of a mathematical work in Tamil; ஓர் தமிழ்க் கணிதநூல். (கணக்கதி. பாயி.) |
கணிதன் | kaṇitaṉ n. <>id. 1. Astronomer, astrologer; சோதிடன். கணிதர் சொற்ற வோரையில் (நைடத. அரசா. 9). 2. Arithmetician, mathematician; 3. Accountant, cashier, secretary, clerk; |
கணிப்பு | kaṇippu n. <>கணி-. 1. Computing, counting; அளவிடுகை. வெம்படை கணிப்பில கொண்ட . . . தேர் (கந்தபு. முதனாட். 42). 2. Esteeming, honouring, reverencing, venerating; 3. Estimating, appraising; |
கணிமேதாவியார் | kaṇi-mētāviyār n. <>gaṇi +. Name of the author of Elāti and Tiṇai-mālai-nūṟṟaimpatu; ஏலாதி, திணைமாலை நூற்றைம்பது என்ற நூல்களின் ஆசிரியர். |
கணியான் | kaṇiyāṉ n. <>id. Man of a low caste noted for his skill in magic and his knowledge of astrology; ஒரு சாதியான். (G. Tn. D. 227.) |
கணிலெனல் | kaṇil-eṉal. n. See கணீரெனல் கவின்மணி கணிலென்னும் (கம்பரா. மூலபல.228). . |
கணிவன் | kaṇivaṉ n. <>gaṇi. Astrologer; சோதிடன், தொல்கேள்விக் கணிவன் (பு. வெ. 8, கொளு, 20). |