Word |
English & Tamil Meaning |
---|---|
கப்பைக்காலன் | kappai-k-kālaṉ n. <>கப்பு 2 +. Bow-legged man; தொட்டிக்காலன். |
கபக்கட்டு | kapa-k-kaṭṭu n. <>kapha +. Accumulation of phlegm in the throat; கபம் நெஞ்சில் திரண்டிருக்கை. |
கபகபவெனல் | kapa-kapa-v-eṉal n. Onom. 1. The sound of gurglings, as produced by water when poured out of a vessel with a narrow mouth; ஒர் ஒலிக்குறிப்பு. 2. Burning sensation in the abdomen from hunger or from strong passion; |
கபட்டுநாக்கு | kapaṭṭu-nākku n. <>kapaṭa +. Deceitfulness of speech, double-tongue; வஞ்சகம்பேசும் நா. |
கபட்டுப்படிக்கல் | kapaṭṭu-p-paṭi-k-kal n. <>id. +. False weight; கள்ளநிறைகல். |
கபடக்காரன் | kapaṭa-k-kāraṉ n. <>id. +. Cheat, deceiver; வஞ்சகன். |
கபடநாடகம் | kapaṭa-nāṭakam n. <>id. +. Deceitful dealing; போலிநடிப்பு, கபடநாடகத்தை மெய்யென்று நம்பி (அருட்பா, i, செஞ்சறி. 528). |
கபடம் | kapaṭam n. <>kapaṭa. Guile, fraud, deceit; வஞ்சகம். |
கபடவித்தை | kapaṭa-vittai n. <>id. +. Trick, juggle, dobge; மாயவித்தை. |
கபடன் | kapaṭaṉ n. <>id. Cheat, deceiver, knave, shuffier; வஞ்சகன் சனகியைக் கபடன் வௌவி (கம்பர. சம்ப. 59). |
கபடஸ்தன் | kapaṭa-staṉ n. <>id. + stha. See கபடன். . |
கபடி | kapaṭi n. <>kapaṭin. Deceitful person; கபடமுள்ளவ-ன்-ள். தீமைபுரி கபடி (திருப்பு. 109). |
கபடு | kapaṭu n. <>kapaṭa. See கபடம். . |
கபடேரிகம் | kapaṭērikam n. cf. kāṣṭhaka. Eaglewood. See அகில். (மலை.) . |
கபந்தம் | kapantam n. <>kabandha. 1. See கவந்தம். . 2. Simpleton, stupid person; |
கபநாசம் | kapa-nācam n. <>kapha +. See கண்டங்கத்திரி. (மலை.) . |
கபம் | kapam n. <>kapha. Phlegm, one of the three kinds of nāṭi; சிலேட்டுமம். வதபித்தகப்மென . . . மூவரும் . . . நலிந்தனர் (உத்தரரா. அரக்கர். 31). |
கபம்பம் | kapampam n. cf. kaṭabhī. Black oil tree. See காலுளூவை. (மலை.) . |
கபர் | kapar n. <>U. khabar. News; செய்தி. (W.) |
கபர்த்தம் | kaparttam n. <>kaparda. šiva's matted locks; சிவபிரான் சடை. |
கபர்த்தி | kapartti n. <>kapardin. šiva, having matted locks. சிவன். |
கபர்தார் | kapartār int. <>U. khabadār. Beware, take care; சாக்கிரதையாயிரு. |
கபரோகம் | kapa-rōkam n. <>kapha +. Any disease caused by excess of phlegm, as bronchitis or asthma; சிலேட்டுமநோய். |
கபவாதசுரம் | kapa-vāta-curam n. <>id. +. Pneumonia; சிலேட்டும வாதங்களின் சேர்க்கையால் தோன்றுஞ் சுரநோய். |
கபவிரோதி | kapa-virōti n. <>id. +. Lesser Galangal. See சிற்றரத்தை. (தைலவ.) . |
கபளீகரி - த்தல் | kapaḷīkari- 11 v. tr. <>kabalīkr. See கவளீகரி-. Colloq. . |
கபாடக்கட்டி | kapāṭa-k-kaṭṭi n. Sweet Flag. See வசம்பு. (மலை.) . |
கபாடபந்தனம் | kapāṭa-pantaṉam n. <>kapāṭa +. Keeping the doors closed; கதவடைப்பு. |
கபாடபுரம் | kapāṭa-puram n. <>id. +. The ancient Pāṇdyan capital which was the seat of the Second Tamil Academy; இடைச்சங்க மிருந்த பாண்டியன் தலைநகர். (இறை.1, உரை.) |
கபாடம் 1 | kapāṭam n. <>kapāṭa. 1. Door; கதவு. அறிவென்க பாடச்செந்தாள் (ஞான. 34, 3). 2. Guard, defence protection; |
கபாடம் 2 | kapāṭam n. Beasts' burden, as wood; பொதி. (C.G.) |
கபாத்து 1 | kapāttu n. <>U. kabāt. (W.) 1. Capon; விதையெடுத்த சேவல். 2. Pruning; |
கபாத்து 2 | kapāttu n. <>U. qawāid. Millitary drill; படைப்பயிற்ச்சி. |
கபாபு | kapāpu n. <>U. kabāb. Roast, dish of roasted meat; சூடிறைச்சி. (W.) |
கபாய் | kapāy n. <>U. qabā. Frock, a kind of long flowing tunic reaching to the ankles such as that worn generally by Muhammadans; நிலையங்கி, கடகளிறுதவு கபாய்மிசைப்போர்த்தவள் (மீனாட். பிள். காப்பு. 10). |
கபால் | kapāl n. <>kapāla. Skull. See கபலம். கைவைத்த வன்கபான் மிசை. (திவ். திருச்சந். 42). . |
கபாலக்கரப்பான் | kapāla-k-karappāṉ n. <>id. +. Scald head, Tinea porrigo, especially of children; தலையில்வருங் கரப்பான். |
கபாலக்குத்து | kapāla-k-kuttu n. <>id. +. Severe headache, acute meningitis, cephalalgia, sometimes causing blindness; கடுந்தலைவலி. (இங். வை. 217.) |