Word |
English & Tamil Meaning |
---|---|
அதிதெய்வம் | ati-teyvam n. <>id.+. Presiding deity; அதிதேவதை, புரமபொடி படுத்த புண்ணியேனே யதிதெய்வம் (சூத. எக்கி. பூ. 6, 4.) |
அதிதேசம் | ati-tēcam n. <>ati-dēša. 1. Extending a rule to an analogous case; ஒன்றற்குரியதை மற்றொன்றற்கு ஏற்றிக்கூறுகை. 2. Explaining the meaning through analogy; |
அதிதேசி - த்தல் | atitēci- 11 v.tr. <>id. To extend to an analogous case; ஒன்றற்குரியதை மற்றொன்றற்கு ஏற்றிக்கூறுதல். (ஈடு, 10, 10, 6.) |
அதிதேவதை | ati-tēvatai n. <>adhi+. Presiding deity, as of a mantra; அதிட்டான தேவதை. |
அதிநுட்பம் | ati-nuṭpam n. <>ati+. That which is exceedingly minute; மிக நுண்ணியது. (குறள். 636.) |
அதிபசமி | ati-pacami n. prob. ati+T. pasimi. Indian laburnum. See கொன்றை. (மலை.) |
அதிபத்தநாயனார் | ati-patta-nāyaṉār n. <>ati+bhakta+. Name of a canonized Saiva saint, one of 63; அறுபத்துமூன்று நாயன்மாருள் ஒருவர். |
அதிபதி 1 | atipati n. <>adhi+pati. 1. Ruler, king, sovereign; அரசன். (பெரியபு. கண்ணப்ப. 7.) 2. Lord, master, superior; |
அதிபதி 2 | atipati n. Champak. See சண்பகம். (மூ. அ.) |
அதிபதிச்சங்கம் | atipati-c-caṅkam n. Climbing staff plant. See வாலுளுவை. (மூ. அ.) |
அதிபதிப்பொருத்தம் | atipatipporuttam n. <>adhi+. (Astrol.) A correspondence between the horoscopes of the prospective bride and bridegroom. See இராசியதிபதிப்பொருத்தம். (W.) |
அதிபதுங்கி | ati-patuṅki n. Ceylon leadwort. See கொடுவேலி. (மூ. அ.) |
அதிபலை | ati-palai n. <>ati+balā. 1. Species of Hibiscus. See பேராமுட்டி. (தைலவ.) 2. A powerful mantra for removing thirst and producing bodily vigour and strength, said to have been taught to Rāma by Višvāmitra; |
அதிபறிச்சம் | ati-paṟiccam n. Climbing staff plant. See வாலுளுவை. (மூ. அ.) |
அதிபன் | atipaṉ n. <>adhi-pa. Lord; தலைவன். (பிங்.) |
அதிபாதகம் | ati-pātakam n. <>ati+. Heinous sin; பெரும்பாவம். (தணிகைப்பு. அகத். 226.) |
அதிமதுரகவி | ati-matura-kavi n. <>id.+. Name of a poet in the court of Tirumalarāyar, contemporary of Kāḷamēka-p-pulavar, 15th c.; ஒருபுலவர். (தமிழ்நா. 207.) |
அதிமதுரம் 1 | ati-maturam n. <>id.+. That which is very sweet; மிக இனிமையானது. அதிமதுரக் கனியொன்று (பெரியபு. காரைக். 25.) |
அதிமதுரம் 2 | ati-maturam n. cf. yaṣṭi-madhura. 1. Liquorice-plant, Glycyrrhiza glabra; பூடுவகை. (மச்சபு. சருவ. 8.) 2. Crab's-eye. See குன்றி. |
அதிமலம் | ati-malam n. Species of Crataeva. See மாவிலிங்கம். (மூ. அ.) |
அதிமாதம் | ati-mātam n. <>adhi+. Intercalated month. See அதிகமாதம். (சங். அக.) |
அதிமாமிசம் | ati-māmicam n. <>ati+. Proud flesh, cancer, esp. in the eyes or back part of the gums; அதிகமாக வளருந்தசை. (ஜீவரட்.) |
அதிமானுஷம் | ati-māṉuṣam n. <>id.+. That which is superhuman; மனிதனுடைய சக்திக்கு மேற்பட்டது. |
அதிமிதி | ati-miti n. <>id.+. Acting very ostentatiously because of prosperity; வீம்பான நடை. (J.) |
அதிமுத்தம் | ati-muttam n. <>ati-mukta. Common delight-of-the-woods. See குருக்கத்தி. (மலை.) |
அதிமேற்றிராசனம் | ati-mēṟṟirācaṉam n. <>ati+. Archiepiscopal see or diocese; அதிமேற்றிராணியாரின் இருப்பிடம். R.C. |
அதிமேற்றிராணியார் | ati-mēṟṟirāṇiyār n. <>id.+. Archbishop; மேற்றிராணிமாரில் பிரதானமானவர். R.C. |
அதியமான் | atiya-māṉ n. See அதியமானெடுமானஞ்சி. (புறநா. 90.) |
அதியமானெடுமானஞ்சி | atiyamāṉeṭumāṉ-aci n. <>adhika+ நெடுமான்+. Name of an ancient chief noted for his liberality and for his patronage of the poetess Avvai, one of seven kaṭai-vaḷḷal, q.v.; ஒரு கடை வள்ளல். (புறநா. 87.) |
அதியர் | atiyar n. <>id. Name of the line of Atiyamāṉ, a branch of the Cēras; அதியமான் வம்சத்தோர். (புறநா. 91.) |
அதியரையன் | ati-y-araiyaṉ n. <>அதி+. Chief of fishermen; மீன்வலைஞர் தலைவன். (திருவாலவா. 22, 9.) |