Word |
English & Tamil Meaning |
---|---|
அது 2 | atu part. 1. A gen. ending followed by a neut. sing., as in எனது முகம்; ஆறாம் வேற்றுமையின் ஓர் உருபு. (நன். 300.) 2. An expletive suff.; |
அதுக்கம் | atukkam n. <>அதுங்கு-. Reduced condition as of a boil; அதுங்குகை. |
அதுக்கு 1 - தல் | atukku- 5 v.tr. caus. of அதுங்கு- [K. adaku, M. atukkuka.] 1. To press with the fingers, as a ripe fruit or boil; அமுக்குதல். 2. To squeeze, pinch, as the stomach in grief; 3. To bite, as one's lips; 4. To chew; 5. To stuff into the mouth, like a monkey; 6. To slap with the hand, beat with a stick; |
அதுக்கு 2 | atukku n. <>அதுங்கு-. State of being pressed in, as of parts of a vessel; பாத்திரமுதலியவற்றின் அதுங்கல். Colloq. |
அதுக்கெடு - த்தல் | atukkeṭu- v.intr. <>அதுக்கு+எடு. To mend a vessel, etc., parts of which have been pressed in; பாத்திர முதலியவற்றின் அதுங்கலைச் சீர்ப்படுத்துதல். Colloq. |
அதுகுபடி | atukupaṭi n. <>T.atukubadi. Giving waste land to a cultivator at a low rate of assessment on condition of his cultivating it; தரிசுநிலத்தைத் தாழ்ந்த வரியில் விவசாயத்துக்கு விடுகை. (W.G.) |
அதுங்கு - தல் | atuṅku- 5 v.intr. To be forced out or in by pressure, to be stuffed in, compressed; அமுங்குதல். |
அதும்பு - தல் | atumpu-tal 5 v.intr. To swarm; மொய்த்தல். முரல்வண் டதும்புங் கொழுந்தேன் (திருவாச.6,36). |
அதுலம் | atulam n. <>a-tula. 1. That which is unequalled; ஒப்பற்றது. அசங்க மதுலம் (கைவல்ய. சந்தே. 137). 2. A thousand quintillions; |
அதுலன் | atulaṉ n. <>id. One who is unequalled; ஒப்பற்றவன். வான்மிசை யதுலன் (காஞ்சிப்பு. இரணீச. 5.) |
அதெந்து | atentu int. [M. atentu.] 'What is that?' as uttered by one in encouragement to dispel the fears of his dependant; அது என்ன என்று அருளொடு கேட்டற் குறிப்பு. அதெந்துவே யென்றரு ளாயே (திருவாச. 29,1). |
அதை - த்தல் | atai- 11 v.intr. 1. To swell, to be puffed up; வீங்குதல். கால் அதைத்திருக்கிறது. 2. To grow arrogant, become proud; 3. To rebound, recoil; |
அதைப்பு | ataippu n. <>அதை-. 1. Swelling; வீக்கம். 2. Dropsy; 3. Rebounding; |
அதைரியம் | a-tairiyam n. <>a-dhairya. Want of fortitude, timidity, dispiritedness. . |
அதோ | atō int. [K. adō, M. atā.] Lo! behold! சுட்டிக் கவனிக்கச்செய்தற் குறிப்பு. அங் கதோ வுள்கறுத் தழகிற் றேய்ந்தது (சீவக. 2679). |
அதோகதி | atō-kati n. <>adhas+. 1. Low state, degraded condition; தாழ்நிலை. 2. Hell; 3. A hell, one of eḻu-narakam, q.v.; |
அதோங்கம் | atōṅkam n. <>id.+aṅga. Part of the body below the waist; அரையின் கீழ்ப்பட்ட அங்கப்பகுதி. (தைலவ. தைல. 54, உரை.) |
அதோசாதி | atō-cāti n. <>id.+. Low caste, inferior caste; கீழ்க்குலம். அதோசாதி யகத்தி னருந்தினனும் (சிவதரு. பரி. 31). |
அதோபாகம் | atō-pākam n. <>id.+. Lower part, bottom, foot; அடிப்பக்கம். பிரமாண்டத் ததோபாகம் (சிவதரு. கோபுர. 30). |
அதோமாயை | atō-māyai n. <>id.+. Impure Māyā. See அசுத்தமாயை. (சி. சி. 2, 80, சிவாக்.) |
அதோமார்க்கம் | atō-mārkkam n. <>id.+. Lower path, as in religious worship; தாழ்ந்தநெறி. (சி. சி. 2, 51, சிவாக்.) |
அதோமுகசிரம் | atōmuka-ciram n. See அதோமுகம், 2. (பரத. பாவ. 76.) |
அதோமுகம் | atō-mukam n. <>id.+. 1. The face that books downwards; கீழ்நோக்கியமுகம். ஐந்துமுகத்தோ டதோமுகமும் (கந்தர்கலி. 78). 2. (Nāṭya.) Looking down with head bent, one of 14 muka-v-apinayam, q.v.; 3. Inverted position; 4. Mouth of a river, confluence of a river with sea; |
அதோமுகி | atō-muki n. cf. adhō-mukhī. Species of Trichodesma. See கவிழ்தும்பை. (W.) |
அதோலோகம் | atō-lōkam n. <>adhas+. Lower world; கீழுலகம். |
அதோள் | atōḷ adv. <>அ. There; அவ்விடம். (தொல். எழுத். 398, உரை.) Obs. |
அதோளி | atōḷi adv. See அதோள். (தொல். எழுத். 159, உரை.) Obs. |