Word |
English & Tamil Meaning |
---|---|
கழைக்கூத்தன் | Kaḻai-k-kūttaṉ, n.<>கழை+ See கழைக்கூத்தாடி. (திவா.) . |
கழைக்கூத்தாடி | Kaḻai-k-kūttāṭi, n.<>id.+. Pole-dancer, rope-dancer; கழையில் நின்று கூத்தாடுவோன். |
கழைக்கூத்து | Kaḻai-k-kūttu, n. <>id. +. Pole dancing; கழையினின்றுடுங் கூத்து. மோகன மாடக் கழைக்கூத்தாட (தனிப்பா.1, 235,1). |
கழைந்து | Kaḻaintu, n.<>கழஞ்சு. See கழஞ்சு. (T.A.S. i,9.) . |
கழைநெல் | Kaḻai-nel, n. <>கழை+. Bamboo seed; முங்கிலரிசி. போகுயர் நீள்கழை நெல்லும் (சீவக. 1422). |
கள் - தல்[கட்டல்] | kal-, 9 v.tr.[K.M. kal.] 1. To weed; களைபிடுங்குதல். கட்டபி னீரினு நன்ற தன் காப்பு (குறள்,1038). 2. To pluck; 3. To rob, steal; 4. To deceive, entertain furtive designs upon; |
கள் 1 | Kaḷ, n.<>கள்-. [K kal.] Stealing, theft, robbery; களவு. (சூடா.) |
கள் 2 | Kal, n.cf.kalyā [T. kallu, K.M.kaḷ,Tu.kali.] 1. Toddy, vinous liquor; மது. கட்காதல் கொண்டொழுகுவார் (குறள், 921). 2. The saccharine juice formed in flowers; honey; 3. Bee; |
கள் 3 | kaḷ, part. [K.kaḷ.] 1. A plural ending; பன்மைவிகுதி. வாய்ச்சொற்க ளென்ன பயனு மில (குறள் 1100). 2. An expletive; |
கள்வம் | Kaḷvam, n.<>கள்-.[M.kaḷḷam.] Act of thieving; திருட்டுச்செயல். கண்ணன் கள்வங்களே (திவ். திருவாய்.9,6,5) |
கள்வன் 1 | Kaḷvaṉ, n.<>id. 1. cf.kalama. [M.kaḷavaṉ, Tu. kaḷvē.] Thief, robber; திருடன். என்னுள்ளங் கவர் கள்வன் (தேவா. 61,1). 2. Dark black person; 3. Mediator; 4. Lungoor, Semnopithecus priamus; 5. cf. களவன். Crab; 6. Cancer of the zodiac; |
கள்வன் 2 | Kaḷvaṉ, n.<> kalabha. Elephant; யானை. (பிங்.) |
கள்விலைஞன் | Kaḷ-vilaiaṉ, n.<>கள்3+. Toddy-seller; கள்விற்போன். (திவா.) |
கள்விலையாட்டி | Kaḷ-vilai-y-āṭṭi, n. <>id. +. She who sells toddy; கள்விற்பவள். கல்விலையாட்டி மறுப்பப் பொறாமறவன் (சிலப்.12, உரைப்பாட்டு மடை, 13, பாடல்). |
கள்ள | Kaḷḷa, n. Prob.கள்-. A particle of comparison; ஓர் உவமவுருபு. கள்ள மதிப்ப வெல்ல வீழ (தொல். பொ, 289). |
கள்ளக்கடவு | Kaḷḷa-k-kaṭavu, n.<>கள்ளம்+கடவு. Secret passage; திருட்டுவழி. |
கள்ளக்கடை 1 | Kaḷḷa-k-kaṭai, n. <>id. +. A repository of stolen goods; திருட்டுச்சாமன்களை விற்குங் கடை |
கள்ளக்கடை 2 | Kaḷḷa-k-kaṭai, n.<>id. + கட-. See கள்ளக்கடவு. . |
கள்ளக்கத்தி | Kaḷḷa-k-katti, n. <>id. +. Hollow cane, with a knife inside it; உள்ளே கத்தியுள்ள கைத்தடி. |
கள்ளக்கதவு | kaḷḷa-k-katavu, n. <>id. +. Trap-door; பிறரறியாமற் செல்லுதற்குரிய கதவுள்ள வாயில்.(C.E.M.) |
கள்ளக்கப்பல் | Kaḷḷa-k-kappal, n. <>id. +. Vessel of pirates; கடற்கொள்ளைக்காரர்க்குரிய கப்பல்.(w.) |
கள்ளக்கப்பற்காரன் | Kaḷḷa-k-kappaṟ-kā-raṉ, n. <>id. +. Pirate; கடற்கொள்ளையடிப்போன். |
கள்ளக்கயிறு | Kaḷḷa-k-kayiṟu, n. <>id. +. 1. Ring or cord for holding articles firm in an uṟi; உறியின் சுருக்குக்கயிறு. உறிகளிலே சேமித்துக் கள்ளக் கயிறுவிவைத்த (ஈடு, 2,3,8). 2. Cord for opening and closing a bag or purse; |
கள்ளக்கவறு | Kaḷḷa-k-kavaṟu, n. <>id. +. False dice; கள்ளக் சூதுகருவி.(w.) |
கள்ளக்கவி | Kaḷḷa-k-kavi, n. <>id. +. 1. One who palms off another's poetical composition as one's own, plagiarist-poet; பிறனாருவனது பாட்டைத் தனதென்று காட்டுபவன். 2. He who transfers a poem composed in honour of one to another; |
கள்ளக்காசு | Kaḷḷa-k-kācu, n. <>id. +. See கள்ளநாணயம். . |
கள்ளக்காமம் | Kaḷḷa-k-kāmam, n. <>id. +. Feigned or pretended love to gain some ulterior object; காரியத்தின் பொருட்டு மேற்கொண்ட போலிக்காமம். கரும நுதலிய கள்ளக்காமம் (பெருங் உஞ்சைக் 35, 228). |