Word |
English & Tamil Meaning |
---|---|
கழுத்தைக்கட்டு - தல் | kaḻuttai-k-kaṭṭu- v. tr. <>id. +. Lit., to press the neck, to importune, trouble unceasingly, harass; விடாது நிர்ப்பந்தித்தல். அந்தக்குடும்பம் என் கழுத்தைக்கட்டிக் கொண்டு வருத்துகிறது. |
கழுதாழி | kaḻutāḷi n. <>கழுது+ஆழி. See கழுதிரதம். எழுகழுதாழியி னிடையே (பகவற். சாங்கிய.22). . |
கழுதிரதம் | kaḻutiratam n. <>id. + இரதம். Lit., the devil's chariot, mirage; பேய்த்தேர் கனாக் கழுதிரதம். (சி. சி. 6, 3,). |
கழுது | kaḻutu n. 1. Demon; பேய்வகை. கூற்றக் கொஃறேர் கழுதொடு கொட்ப (மதுரைக். 633). 2. Elevated platform from which fields are guarded against damage from beasts and birds; 3. Bettle; |
கழுதுக்குத்தி | kaḻutukkutti n. See கடிச்சை1. (L.) . |
கழுதும்பை | kaḻu-tumpai n. Dial. var. of கவிழ்தும்பை |
கழுதை | kaḻutai n. cf. gardabha. [T. gādida, K. kaḷte, M. kaḻuta, Tu. katte.] Domestic ass, donkey, Equus asinus; ஒரு விலங்கு. வெள்வாய்க் கழுதைப் புல்லினம் (புறநா 392, 9). |
கழுதைக்கரணம் | kaḻutai-k-karaṇam n. <>கழுதை+. (Astrol.) A division of time. See தைதுலம் . |
கழுதைக்குடத்தி | kaḻutai-k-kuṭatti n. <>id. +. See கழுதைப்புலி. . |
கழுதைகடி | kaḻutai-kaṭi n. House with one corner under repair, considered inauspicious; ஒருமூலை இடிந்த வீடு. (யாழ். அக.) |
கழுதைத்திசை | kaḻutai-t-ticai n. <>கழுதை +. (Astrol.) North-west direction; வடமேற்குத் திசை. |
கழுதைத்தும்பை | kaḻutai-t-tumpai n. <>id. +. A low annual plant with many hispid branches, flourishing in dry situations, Trichodesma indicum; தும்பைச்செடிவகை. (பதார்த்த. 309.) |
கழுதைப்பாலை | kaḻutai-p-pālai n. <>id. +. Indian ipecauanha, m.cl., Tylophora asthmatica; நச்சறுப்பான்கொடி. (L.) |
கழுதைப்புலி | kaḻutai-p-puli n. <>id. +. [M. kaḻutappuli]. Hyena, Hyaena striata; கடுவாய் விலங்கு. |
கழுதைமுள்ளி | kaḻutai-muḷḷi n. <>id. +. [M. kaḻumuḷ.] Holly-leaved bear's-breech, m. sh., Acanthus ilicifolius; செடிவகை. (L.) |
கழுதையாட்டம் | kaḻuti-y-āṭṭam n. <>id. +. A game at cards. See தழைவாரி Colloq. . |
கழுதையூர்தி | kaḻutai-y-urti n. <>id. +. Goddess of ill-luck who rides an ass; மூதேவி. (பிங்.) |
கழுதைவண்டு | kaḻutai-vaṇṭu n. <>id. +. A species of beetle; ஒருவகைவண்டு. |
கழுதைவாகினி | kaḻutai-vākiṉi n. <>id. + vāhanī. See கழுதையூர்தி. நிணத்தசையில் வீழும். . . கழுதைவாகினி பதாகை (இரகு. திக்கு.112). |
கழுதைவிரியன் | kaḻutai-viriyaṉ n. <>id. +. A viper, black, slow in movement, growing to a large size, of deadly bite; விரியன் பாம்பு வகை. |
கழுந்தன் | kaḻuntaṉ n. <>கழுந்து. Stout person without brains, as the smooth end of a pestle; கழுந்துபோற் பருத்து அறிவுமழங்கினவன். கழுந்தரா யுனகழல் பணியாதவர் (கம்பரா. தனியன். 9). |
கழுந்தாக்கு - தல் | kaḻuntākku- v. intr. <>id. +. To make tenons for dovetailing; பலகையின் பொருத்துவாய் உண்டாக்குதல். (w.) |
கழுந்து | kaḻuntu n. prob. கெழு-மை. [M. kaḻuṇṇu.] 1. Rounded end, as of a pestle or of a bow; உலக்கை வில் முதலியவற்றின் திரண்டநுனி. கழுந்துடை வரிசிலை (கம்பரா. கிளை. 26). 2. Rashness, rudeness 3. Heart or core of a tree; 4. Tenon; |
கழுநர் | kaḻunar n. <>கழுவு-. Those who wash away dirt or sin; அழக்கு பாவம் முதலியவை கழுவுவோர், பாரகங் கழுநர்போல (சீவக.2771). |
கழுநீர் 1 | kaḻu-nīr n .perh. கெழு-மை+நீர்-மை. 1. Purple Indian water-lily. See செங்குவளை. கழுநீர்மாலை . . . அணிந்தும் (திருவாச. 2, 113). 2. Blue Indian water-lily. See நீலோற்பலம். |
கழுநீர் 2 | kaḻu-nīr n. <>கழுவு- +. 1. Water in which rice has been washed; அரிசி கழவியநீர்.கழ நீருட் காரடகேனும் (நாலடி, 217). 2. Sacred water for cleansing away sin, as that of the Ganges; |
கழுப்பற்றை | kaḻu-p-paṟṟai n. <>கழு +. Tuft of grass, turf; புற்கரடு. (w.) |
கழுமணி | kaḻu-maṇi n. <>கழுவு- +. Spotless gem; polished gem; கடைந்து சுத்தஞ்செய்யப்பட்ட இரத்தினம். கழுமணியே யின்னுங் காட்டு கண்டாய் (திருவாச. 6, 27). |
கழுமம் | kaḻumam n. <>கழுமு-. Fault; குற்றம். கழுமமி னெஞ்சகம் (காஞ்சிப்பு. பன்னிரு.93). |