Word |
English & Tamil Meaning |
---|---|
கழுகுப்பொறி | kaḻuku-p-poṟi n. <>கழுகு+. Ancient machine in the shape of an eagle mounted on a fort for defence; கோட்டை மதிலில் வைக்கப்படும் கழகின் உருவமுள்ள யந்திரம். (சிலப் 15, 216, உரை.) |
கழுகுழு - த்தல் | kaḻukuḻu- 11 v. intr. To feel damp and chilly; ஈரத்தால் தரைமுதலியன நொதுநொதுத்தல். (யாழ். அக.) |
கழுச்சிறையன் | kaḻu-c-ciṟaiyaṉ n. <>கழு1+. One who deserves impaling; கழவேற்றப் படத்தக்கவன். (w.) |
கழுசி | kaḻuci n. <>gudūcī. cf. களூசி.. Moon creeper. See சீந்தில். . |
கழுத்தல் | kaḻuttal n. perh. கழி3-. Lie; பொய். (w.) |
கழுத்தறு - த்தல் | kaḻuttaṟu- v. tr. <>கழுத்து+அறு2-. Lit., to cut the throat, to harass, injure; பெருந்துன்பத்துக்கு உள்ளாக்குதல். |
கழுத்தறுப்பு | kaḻuttaṟuppu n. <>id. +. Distress, trouble, as if the throat is being cut; பெருந் துன்பம். அவன் அதில் தலையிட்டிருப்பது எனக்குக் கழுத்தறுப்புத்தான். |
கழுத்திரு - த்தல் | kaḻuttiru- v. intr. <>id. +. To press down with a heavy load, as the neck; பாரத்தாற் கழுத்து அழங்குதல். சுமையாற் கழுத்திருந்துவிட்டது. |
கழுத்திற்கட்டு - தல் | kaḻuttiṟ-kaṭṭu- v. tr. id. +. To consign to one's care against one's wishes, as a family which one cannot or will not maintain; ஒருவனை நிர்ப்பந்தித்துப் பொறுப்பாளியாக்குதல். Colloq. |
கழுத்து | kaḻuttu n. prob. கெழு-மை. cf.gala. [K. kattu, M. kaḻuttu.] 1. Neck; கண்டம். (திவா.) 2. Elevation on, or depression in, the floor suitable for placing big pots; |
கழுத்துக்கட்டி | kaḻuttu-k-kaṭṭi n. <>கழுத்து+. 1. Tumour of the neck; கழுத்துக்கழலை. 2. Obstacle, impediment; 3. Woollen wrap for the neck; |
கழுத்துக்குக்கத்தி | kaḻuttukku-k-katti n. <>id. +. Person or thing feared, as a fatal knife; நாசத்தை உண்டாக்கக்கூடிய-வன்-வள்-து. Colloq. |
கழுத்துக்குட்டை | kaḻuttu-k-kuṭṭai n. <>id. +. Neck-tie cravat; அங்கிக்குமேலே கழுத்தைச்சுற்றிக் கட்டுந் துணி. |
கழுத்துக்கொடு - த்தல் | kaḻuttu-k-koṭu- v. intr. <>id. +. 1. To risk one's life for the sake of others; தன்வருத்தம்பாராமல் பிறர் காரியத்தைத் தான் ஏற்றுநிற்றல். 2. To commit a heinous crime likely to bring about one's own destruction; 3. To be married; |
கழுத்துக்கோல் | kaḻuttu-k-kōl n. <>id.+. Balance resembling a steel-yard for weighing vegetables, etc. See கயிற்றுக்கோல். (G. Tj. D. I, 133.) . |
கழுத்துச்சட்டை | kaḻuttu-c-caṭṭai n. <>id. +. A girl's jacket; பெண்களின் அங்கிவகை. (J.) |
கழுத்துச்சந்து | kaḻuttu-c-cantu n. <>id. +. Nape of the neck; கழுத்தின்முட்டு. (திவா.) |
கழுத்துத்திருகு - தல் | kaḻuttu-t-tiruku- v. tr. <>id. +. Colloq. 1. To wring the neck, as of a fowl; கழுத்தைமுறித்தல். 2. Lit., to twist the head, to persecute; |
கழுத்துப்பட்டிகை | kaḻuttu-p-paṭṭikai n. <>id. +. See கழுத்துப்பட்டை. . |
கழுத்துப்பட்டை | kaḻuttu-p-paṭṭai n. <>id. + 1. Collar of a cloak; சட்டையின் கழுத்தைச்சுற்றித் தைத்திருக்கும் பட்டைத்துணி. 2. See கழுத்துக்கட்டி, 3. |
கழுத்துப்பிடிப்பு | kaḻuttu-p-piṭippu n. <>id. +. Stiff neck, torticollis; கழுத்துச்சுளுக்கு. |
கழுத்துமணி | kaḻuttu-maṇi n. <>id. +. A kind of necklace; கழுத்தணிவகை. |
கழுத்துமுடிச்சு | kaḻuttu-muṭiccu n. <>id. +. Adam's apple, projection formed by the thyroid cartilage in the neck; குரல்வளை. (C.G.) |
கழுத்துமுறி - த்தல் | kaḻuttu-muṟi- v. intr. <>id. +. To express dissent by turning the neck; அசம்மதக் குறியாகக் கழுத்தைத் திருப்பிக்கொள்ளுதல். Loc. |
கழுத்துரு | kaḻutturu n. <>id. + உரு3. Pieces of gold of various shapes and sizes forming the accompaniments of the tāli; திருமங்கலியத்தோடு கோக்கும் பலவகையான தங்க உருக்கள். |
கழுத்துவெட்டி | kaḻuttu-veṭṭi n. <>id. +. Cut-throat, murderer, assassin; கொலைகாரன். (w.) |
கழுத்தூட்டி | kaḻuttuṭṭi n. <>id. +ஊட்டி. Throat; தொண்டை. (w.) |
கழுத்தேறுதண்டம் | kaḻuttēṟu-taṇṭam n. <>id.+எறி-+. Capital punishment; சிரசாக்கினை. |