Word |
English & Tamil Meaning |
---|---|
கழுமரம் | kaḻu-maram n. <>கழு1+. Impaling stake; கழுவேற்றுதற்கு நடப்பட்ட மரம். |
கழுமல் | kaḻumal n. <>கழுமு-. 1. Confusion, fascination, delusion; மயக்கம் கழுமலெய்திய காதற் றோழன் (திருக்கோ. 28, கொளு). 2. Seizing; 3. Fulness; 4. Abundance; |
கழுமலம் | kaḻu-malam n. <>கழவு- +. 1. One of the names for Shiyali, a šaiva shrine in Tanjore District, as that which washes away sin; சீகாழி. கழுமலத்தினுட் கடவுள்பாதமே கருது ஞானசம்பந்தன் (தேவா. 149, 12). 2. Name of an ancient town in the Cera country; |
கழுமு 1 - தல் | kaḻumu- 5 v. intr. 1. To join, unite; சேர்தல். பெண்டிர் . . . செந்தீக் கழுமினார் (பு. வெ. 7, 28). 2. To be fitting, suited; 3. To come together; to crowd; 4. To mix together; 5. To be full, complete; 6. To be abundant, copious, plentiful; to overflow; 7. To be fascinated, bewildered, confused; |
கழுமு 2 | Kaḻumu n.<>கழுமு. 1. Combination, mixture; கலப்பு. (தொல்.சொல்.'351.) 2. Denseness,as of the tuft of hair; |
கழுமுள் | kaḻu-mul n.<>கழு1-. 1. See கழுக்கடை, 1. (சூடா.) . 2. Weapon; 3. Pomegranate. See மாதுளை.(திவா.) |
கழுமோது - தல் | kaḻu-mōtu-, v.intr.<>கழு2+. To cover the ground with green sods, to turf ; தரையிற் புற்பற்றை அடித்தல். |
கழுவடிக்கறுப்பன் | kaḻu-v-aṭi-k-kaṟup-paṉ, n. See கழுவடியான். . |
கழுவடியான் | kaḻu-v-aṭiyāṉ n.<>கழு+1அடி. A demon represented by a pole of the height of a man, on a raised platform beside an impaling stake; கழுவடியில் மனிதனுயரமான கழியில் தாபிக்கப்பட்டுள்ள ஒரு சிறுதேவதை.Loc. |
கழுவறை - தல் | kaḻu-v-aṟai-, v.intr.<>கழு2+. See கழுமோது-.Loc. . |
கழுவன் | kaḻuvaṉ n.<>கழு1. Daring villain, wretch, as deserving the stake; பெருந்துஷ்டன். அவன் கழுவனாய்ச் சாதிக்கிறான். Colloq. |
கழுவாணி | kaḻu-v-āṇi, n.<>id.+ஆணி. Iron point of an impaling stake; கழுவிலுள்ள இருப்புமுள்.(w.) |
கழுவாநெஞ்சன் | kaḻuvā-necaṉ, n.prob.id.+ஆம்+. Hard-hearted man; நெஞ்சுரமுள்ளவன் .Loc. |
கழுவாய் | kaḻu-vāy, n.<>கழுவு-+வாய். Purification, expiation from sin; பிராயச்சித்தம். வழுவாய் மருங்கிற் கழுவாயு முளவென (புறநா. 34, 4). |
கழுவாய்நிலம் | kaḻu-vāy-nilam, n.<>கழு2+வாய்-+. Green fields from which sods are taken; புற்பற்றை எடுக்க்ககூடிய நிலம் (w.) |
கழுவிக்குளிப்பாட்டு - தல் | kaḻuvi-kuḷi-ppāṭṭu-, v.tr.<>கழுவு-+. To wash a corpse; பிணத்தை நீராற் கழுவுதல்.Loc. |
கழுவிழுங்கி | kaḻu-viḻunki, n.<>கழு1+. Sluggard; சோம்பேறி.Loc. |
கழுவு - தல் | kaḻuvu-, 5 v.tr [T. kadugu,M.kaḻuku.] 1. To wash, cleanse by washing, rinse, purify; நீராற் சுத்தஞ்செய்தல். கழாஅக்கால் பள்ளியுள் வைத்தற்றால் (குறள் 840). 2. To melt and mould, as metal; 3. To remove; |
கழுவுணி | kaḻu-v-uṇi, n.<>கழு1+உண்-. See கழுவிழுங்கி. . |
கழுவுநீர் | kaḻuvu-nīr, n.<>கழுவு+. Lotion; புண்கழுவும் மருந்துநீர். Mod. |
கழுவுப்பற்றை | kaḻuvu-p-paṟṟai, n.<>கழு2+. See கழுப்பற்றை. . |
கழுவெளி | kaḻu-veḷi, n.<>id.+. See கழ வாய் நிலம்.(w.) . |
கழுவேற்றம் | kaḻu-v-ēṟṟam n.<>கழு1+ஏற்று-. Impalement; கழுவில் ஏற்றுகை. |
கழுவேற்று - தல் | kaḻu-v-ēṟṟu-, v.tr.<>id.+. To impale; கழுவினில் ஏற்றிக் கொல்லுதல். வெங்கழுவேற்றுவா னிவ்வேந்தனே (பெரியபு. திருஞான. 798). |
கழுவேறி | kaḻu-v-ēṟi, n.<>id.ஏறு- [M.kaḻuvēṟi.] 1. A malefactor, one impaled; கழுவேறினவன். 2. See கழுவன். (w.) |
கழுவேறு - தல் | kaḻu-v-ēṟu-, v.intr.<>id.+. 1. To be impaled; கழுவிலேறிச் சாதல். 2. To partake voluntarily in another's sufferings through friendship; |
கழை | kaḻai n.cf.கழி3-. [T.gada,M.kaḻa.] 1. Spiny bamboo; ழங்கில்.(திவா.) 2. Bamboo bottle; 3. Musical bamboo-pipe; 4. Pole used for propelling boats; 5. Elephant-goad; 6. Sugar-cane; 7. Stem of sugar-cane; shaft of a bamboo; 8. The seventh nakṣatra. See புனர்பூசம். (பிங்.) |