Word |
English & Tamil Meaning |
---|---|
கழிகணம் | kaḻi-kaṇam n. <>கழி-1+. A disease of children attended with diarrhoea; வயிற்றுப்போக்கை உண்டாக்கும் குழந்தைநோய்வகை.(பாலவா. 40.) |
கழிகலமகடூஉ | kaḻi-kala-makaṭūu n. <>id. +. Widow, who has been stripped of her ornaments; கைம்பெண். கழிகலமகடூஉப் போலப் புல்லென்றனையால் (புறநா.261, 18). |
கழிகாலம் | kaḻi-kālam n. <>id. +. Past time; சென்றகாலம். கழிகாலமா யுலகை . . . அளிப்பாய் (திவ். திருவாய். 3, 1, 5,). |
கழிகெட்டவன் | kaḻi-keṭṭavaṉ n. <>கழி5+. Reprobate fellow, vile wretch; மிகக் கெட்டவன். (j.) |
கழிகோல் | kaḻi-kōl n. prob. கழு1+. 1. Two rods joined at an angle and thrown round the horns of an intractable cow to keep it under control while milking; எளிதில் கறவாத பசுவை அசையாமல் நிறுத்திக் கறப்பதற்கு உபயோகிக்கும் இணைப்புக்கழி. கடையாவின் கழிகோற்கைச் சறையினார் (திவ். திருவாய். 4, 8, 4). 2. Wicker basket for the mouth of a calf to prevent it from sucking; |
கழிச்சல் | kaḻiccal n. <>கழி1-. 1. Diarrhoea, looseness of bowels; பேதி. 2. Extreme fear, producing instantaneous diarrhoea; |
கழிச்சியர் | kaḻicciyar n. <>கழி2. Women of the maritime tracts; நெய்தனிலத்து மகளிர். கழிச்சியர்க ளவரை யேனலுக்கு (பெரியபு. திருக்குறிப்புத்.44). |
கழிசடை | kaḻi-caṭai n. <>கழி3- + சடை. Person or thing that is cast away, as shaven hair; கழிக்கப்பட்ட மயிர்ச்சடை போல இழிந்த-வன்-வள்-து. Loc. |
கழிசல் | kaḻical n. <>கழி1-. That which is rejected; கழிக்கப்பட்டது. |
கழிசறை | kaḻi-caṟai n. See கழிசடை. Loc. . |
கழிசிறை | kaḻi-ciṟai n. See கழிசடை. Loc. . |
கழித்தல் | kaḻittal n. <>கழி3-. (Arith.) Subtraction; எண்ணின்கழிப்பு. |
கழித்துக்கட்டு - தல் | kaḻittu-k-kaṭṭu- v. tr. <>id. +. 1. To evade by excuses; போக்குச்சொல்லி நெகிழவிடுதல். 2. To cast off with contempt; |
கழிந்தகாலம் | kaḻinta-kālam n. <>கழி-1+. (Gram.) Past tense; இறந்தகாலம். (நன்.144, மயிலை.) |
கழிந்தார் | kaḻintār n. <>id. 1. Poor, destitute persons; பொருளில்லாதவர். எடுப்பிற்கிளையுட் கழிந்தா ரெடுக்க (நான்மணி. 82). 2. Deceased persons; |
கழிந்தோர் | kaḻintōr n. <>கழி5-. Very strong men; வலிமிக்கோர். கழிந்தோ ருடற்றும் (பதிற்றுப், 90, 5). |
கழிநிலம் | kaḻi-nilam n. <>கழி2+. 1. Natural salt pan; உப்பளம். (பிங்.) 2. Saline soil, marshy tract bordering on the sea; |
கழிநெடில் | kaḻi-neṭil n. See கழிநெடிலடி. . |
கழிநெடிலடி | kaḻi-neṭil-aṭi n. <>கழி5+. Lit., a very long line, a line in verse containing, more than five feet; ஐந்தின் மிக்க சீரால்வரும் அடி. (காரிகை, உறுப்பு.12.) |
கழிப்பணம் | kaḻi-p-paṇam n. See கலிபணம். . |
கழிப்பாம்பு | kaḻi-p-pāmpu n. perh. கழி2+. Kind of animal having six feet; ஆறுகாலுடைய ஒரு பிராணி. (சிலப். பக், 524, குறிப்பு.) |
கழிப்பு - தல் | kaḻippu- 5 v. tr. Caus. of கழி1-. 1. To spend, pass, as time; போக்குதல். பன்னாட்கழிப்பு (பொருந. 111). 2. To complete; |
கழிப்பு | kaḻippu n. <>கழி3-. [M. kaḻippu.] 1. Expulsion, ejection; ஒழிக்கை. 2. Propitiating malignant deities by giving them offerings; 3. Blemish, defect, fault; 4. That which is cast aside, rejected; 5. (Arith.) Subtraction; |
கழிப்புக்கழி - த்தல் | kaḻippu-k-kaḻi- v. intr. <>கழிப்பு +. To throw away boiled rice, etc., after waving it round the head of a patient by way of averting the influence wrought by an evil eye or a malignant spirit; நோயாளி தலையைச்சுற்றிச் சோறு முதலியவற்றைத் திருஷ்டியாகக் கழித்து எறிந்துவிடுதல். |
கழிப்புல் | kaḻi-p-pul n. <>கழி2+. A kind of grass, Rotboellia laevis; புல்வகை. (w.) |
கழிப்பெடு - த்தல் | kaḻippeṭu- v. intr. <>கழிப்பு+எடு-. See கழிப்புக்கழி-. Loc. . |
கழிபடர் | kaḻi-paṭar n. <>கழி 5+. Great distress; மிக்க துயர். தலைவிக்குக் காமமிக்க கழிபடர் சிறந்தாற் போல்வது (தொல். பொ.111. பக், 472, உரை). |
கழிபிறப்பு | kaḻi-piṟappu n. <>கழி-1+. Former birth; முற்பிறப்பு. (திவா.) |
கழிமாந்தம் | kaḻi-māntam n. <>id. +. Infantile diarrhoea, one of eight kinds of māntam, q.v; குழந்தைகட்குப் பேதியோடுவரும் மாந்தநோய். |