Word |
English & Tamil Meaning |
---|---|
கழற்பதி | kaḻaṟpati n. Coomb teak. See பெருங்குமிழ். (மலை.) . |
கழற்றி | kaḻaṟṟi n. <>கழற்று-. That which causes one to slip off, to disappear; கழலப்பண்ணுவது. யோகக்கழற்றி (ஒழிவி. 3, 106). |
கழற்று - தல் | kaḻaṟṟu 5 v. tr. Caus. of கழல்-. [M. kaḻaṟṟu.] 1. To unfasten, loosen, unhinge, dislocate, unlock, unhook, unbolt, unscrew, unbutton, disentangle, extricate, disencumber; நெகிழச்செய்தல். 2. To strip, take off, divest, dismantle, unrig; to slough off, as a snake, its skin; 3. To remove, to be freed, as from sin; |
கழற்று | kaḻaṟṟu n. <>கழறு-. Admonition, expostulation; criticism, at once kind and severe; உறுதிமொழி. |
கழற்றெதிர்மறு - த்தல் | kaḻaṟṟetir-maṟu- v.intr. <>கழற்று +.(Akap.) To reject the dissuasions of a friend, as a lover; பாங்கனுடைய உறுதிமொழியைத் தலைவன் கேளாது மறுத்தல். (திருக்கோ. 23, தலைப்பு.) |
கழற்றெதிர்மறை | kaḻaṟṟetir-maṟai n. <>id. +. (Akap.) Rejecting, as a lover, the dissuasions of a friend; தலைவன் பாங்கனுடைய உறுதிமொழியைக் கேளாது மறுத்துச் சொல்லுஞ்சொல். (இறை.3, 47.) |
கழறல் | kaḻaṟal n. <>கழறு-. 1. Speech, word, speaking; சொல்லுகை. இனையன கழறலுற்றான் (கந்தபு. தாரக. 128). 2. Exhortation, admonition; |
கழறியுரை - த்தல் | kaḻaṟi-y-urai- v. intr. <>id. +. 1. To protest, find fault with and advise, as a minister, the king; இடித்துரைத்தல் மந்திரி அரசனுக்குக் கழறியுரைத்தான். 2. (Akap.) To dissuade a lover from his intention, as a friend; |
கழறிற்றறிவார் | kaḻaṟiṟṟaṟivār n. <>id. +. Name of a šaiva saint, Cēramāṉ Perumāḷ who is so called because he is said to have been able to understand the language of the lower animals; சேரமான்பெருமாணாயனார். பிறவுயிர்கள் வேறு கழறிற்றறிவார் (பெரியபு. சிறுத்.88). |
கழறு - தல் | kaḻaṟu- 5 v. intr. 1. To thunder; இடித்தல். கமஞ்சூல் ... கடுஞ்சிலை கழறி (பதிற்றுப். 81,4). 2. To make solemn declaration, bind oneself by a vow; 3. To urge, exhort, charge earnestly; 1. To say, declare, tell; 2. To be angry with; 3. To abuse, dishonour; |
கழனி 1 | kaḻaṉi n. perh. களம். [M. kaḻani.] 1. Field, paddy-field; வயல். கழனியுழவர் (புறநா. 13, 11). 2. Agricultural tract; 3.Mud; |
கழனி 2 | Kaḻaṉi n. prob. கழல்-. See கழினி. (பிங்.) . |
கழனி 3 | kaḻaṉi n. <>கழுவு-+நீர். See கழுநீர். Loc. . |
கழனிக்கடைத்தவர் | kaḻaṉikkaṭaittavar n. <>கழனி+அடைத்தவர். People of an agricultural tract; மருதநிலமாக்கள். (திவா.) |
கழனிநண்டு | kaḻaṉi-naṇṭu n. <>id.+. Fresh-water crab found in fields; வயல்நண்டு வகை. (w.) |
கழனிப்பயிர் | kaḻaṉi-p-payir n. <>id. +. Paddy ; நெல். (w.) |
கழனிலை | kaḻaṉilai n. <>கழல்+நிலை. (Puṟap.) Theme of warriors decorating a youthful victor with anklets and singing his praises to the accompaniment of a dance; இளைஞனொருவன் போரிற் புறங்கொடாமைகண்டு வியந்த வீரர் அவனுக்கு வீரக்கழலணிவித்துப் புகழ்ந்தாடும் புறத்துறை. (தொல். பொ. 60.) |
கழா அல் | kaḻāal n. <>கழுவு. Washing, cleansing; கழுவுகை. மாக்கள் வெண்கோடு கழாஅலின் (புறநா. 94, 1). |
கழா அல | kaḻāala pple. Caus. of கழல To unloose or divest ; கழற்ற. முண்டகங் கதிர்மணி கழாஅலவும் (சிறுபாண்.148). |
கழாநிலம் | kaḻā-nilam n. See கழாலை. (யாழ்.அக.) . |
கழாலை | Kaḻālai n. perh. கழாஅல். Saline soil; உவர் நிலம். (யாழ். அக.) |
கழாய் | kaḻāy n. <>கழை. 1. Spiny bamboo; மூங்கில். 2. Acrobat's pole; 3. Areca-palm. |
கழாய்க்கூத்து | kaḻāy-k-kūttu n. கழாய்+. See கழைக்கூத்து. கானகக்கூத்தும் கழாய்க்கூத்தும் ஆடுபவராக (தொல். பொ. 91, உரை). |
கழாய்வனம் | kaḻāyvaṉam n. A species of amaranth. See சிறுகீரை. (மலை.) . |
கழாயர் | kaḻāyar n. <>கழை. Pole-dancers, rope-dancers, tumblers; கழைக்கூத்தர். (சூடா.) |