Word |
English & Tamil Meaning |
---|---|
கவை 2 | kavai n. <>கவை-. [M. kava.] 1. Division; cleavage, as of a hoof, a crab's claws; கவர். கவைக்கதிர் வரகின் (அகநா. 393). 2. Branch of a tree; 3. Forked stick; 4. A weapon with forked iron points; 5. Cross-roads, diverging paths; 6. Wood; jungle; 7. See அகில். (மலை.) 8. Concern, interest; 9. Fort, fortification; 10. Notch in a bone; |
கவை 3 | kavai n. cf. கவ்வை2. 1. Business; காரியம். நமனார்க்கிங் கேதுகவை (பதார்த்த. 1499). 2. Young seasame pod; 3. The ninth nakṣatra. See ஆயிலியம். (பிங்.) |
கவைக்காகாமை | kavaikkākāmai n. <>கவை3+ஆகாமை. Uselessness, unprofitableness; உபயோகமின்மை. அவன்படிப்புகவைக்காமை தெரிந்ததே. |
கவைக்கால் | kavai-k-kāl n. <>கவை2+. Forked post; பிளவுபட்டுத் தோன்றுங் கால். |
கவைக்குளம்பு | kavai-k-kuḷampu n. <>id. +. Cloven hoof; விலங்கின் பிளவுள்ள பாதம். |
கவைக்கொம்பு | kavai-k-kompu n. <>id. +. 1. Forked branch; பிரிவுபட்ட மரக்கிளை. 2. Antler; |
கவைக்கோல் | kavai-k-kōl n.<>id. +. 1. Forked stick; கவரான கழி. (அகநா. 34, உரை.) 2. Pikestaff; 3. Crow-bar; See கொடிற்றுக்கோல். (சிலப். 16, 142, உரை.) |
கவைத்தாம்பு | kavai-t-tāmpu n. <>id. +. Slip-knot, noose; தாமணியையுடைய தாம்பு, சுவைத்தாம்பு தொடுத்த காழ் (பெரும்பாண்.244). |
கவைத்தாள் | kavai-t-taḷ n. <>id. +. 1. Forked, divaricated claws; பிளவுபட்ட கால். கவைத்தா ளலவன் (பெரும்பாண். 208). 2. Crab having forked claws; |
கவைநா | kavai-nā n.<> id. +. 2. Forked tongue, as of a snake; பிளவுபட்ட நா. கவைநாவரவின் (திவ். பெரியதி. 3, 2, 4). |
கவைமுட்கருவி | kavai-muṭkaruvi n. <>id. +. Elephant goad, having spikes; யானையை அடக்கும் குத்துகோல். கவைமுட் கருவியு மாகிக் கடிகொள (மணி. 18, 164). |
கவையடி | kavai-y-aṭi n. <>id. +. Cloven foot; பிளவுள்ள அடி. கவையடி பெயர்த்து (மணி. 6, 125). |
கவையமா | kavaiya-mā n. <>gavaya+. Wild cow. See கவயம்1. (பிங்.) . |
கவையாயிரு - த்தல் | kavai-y-āy-iru- v. intr. <>கவை3+. 1. To be busy; வேலையாயிருத்தல். Loc. 2. To be interested; |
கழகண்டு | kaḻa-kaṇṭu n. Mischief; தீம்பு. கண்ணைப் புரட்டிவிழித்துக் கழகண்டு செய்யும் பிரானே (திவ். பெரியாழ். 2, 4, 6). |
கழகம் | kaḻakam n. [M.kaḻakam.] 1. Assembly; ஓலக்கம். கழகமேறேல் நம்பீ (திவ். திருவாய். 6, 2, 6). 2. Assembly of poets; 3. Public place of learning, college; 4. Place for practising the use of arms; place for wrestling; boxing hall; gymnasium; 5. Place of gambling; 6. Gambling; |
கழகு | kaḻaku n. prob. See கழகம். . |
கழங்கம் | kaḻaṅkam n. prob. கழங்கு. Conical pieces in the game of dice; சூதாடுகருவி. (சது.) |
கழங்காடல் | kaḻaṅkāṭal n. <>கழங்கு+ஆடு-. Girls game with Molucca-beans; பெண்கள் ஆடும் கழற்சிக்காயாட்டம். (பிங்.) |
கழங்கிட்டுரை - த்தல் | kaḻaṅkiṭṭurai- v. tr. <>id. +. To divine with Molucca-beans; கழற்சிக்காயாற் குறியறிந்து சொல்லுதல். களமாவது கட்டுங்கழங்கும் இட்டுரைகுமிடமும் வெறியாட்டிடமுமாம் (தொல். பொ, 114, உரை). |
கழங்கு | kaḻaṅku n. perh. கழல். 1. Molucca-bean; கழற்சிக்காய். மகளிர் ... கழங்கிற் றெற்றியாடும் (புறநா. 36, 4). 2. Play among girls with Molucca-beans; 3. See கழங்குப்பருவம். (இலக். வி. 807). 4. Divination with help of Molucca-beans by a soothsayer when possessed; 5. Gambling; |
கழங்குப்பருவம் | kaḻaṅku-p-paruvam n. <>கழங்கு+. Section of peṇpāṟ-piḷḷai-t-tamiḻ, which describes the stage of childhood in which the child plays the kaḻaṅku game; பெண்பாற்பிள்ளைத்தமிழ்க்குரிய பருவங்களுள் கழற்சிக்காய் கொண்டு ஆடுவதை வருணித்துக் கூறும் பருவம். |
கழங்குபடு - த்தல் | kaḻaṅku-paṭu- v. intr. <>id. +. To practise soothsaying or divination with the help of Molucca-beans; கழங்குகொண்டு குறியறிதல். கழங்குபடுத் தன்னைக்கு முருகென மொழியும் வேலன் (ஜங்குறு.249). |