Word |
English & Tamil Meaning |
---|---|
கவுதகம் | kavutakam n. Parapet wall; பைப்பிடிச்சுவர். Loc. |
கவுதம் | kavutam n.cf. கனகம், 2. Common kingfisher. See மீன்கொத்தி. (பிங்.) . |
கவுதாரி | kavutāri n. cf. கதுவாலி. Indian partridge; ஒரு பறவை. சிவல் குறும்பூழ் ... பொறிமயிர்க் கவுதாரிகள் (கம்பரா. பள்ளி. 14). |
கவுதாரிபுடம் | kavutāri-puṭam n. <>கவுதாரி+. Measure determining the strength of fire in the calcination or reduction of metals with three dried dung cakes; கவுதாரியளவாக மூன்று எருவிட்டெரிக்கும் மருந்துப் புடம். (மூ.அ.) |
கவுந்தம் | kavuntam n. <>சங்.அக. 1. See கர்க்டகபாஷாணம். . 2. See கோளகபாஷாணம். |
கவுந்தி 1 | kavunti n. Female jain ascetic; சைன தவப்பெண். (திவா.) |
கவுந்தி 2 | kavunti n. <>Kuntī. Kuntī, mother of the Pāṇdavas; குந்திதேவி. அறுவர்க் கறுவரைப் பெற்றுங் கவுந்தி (யாப். வி. 64, 242). |
கவுபதம் | kavupatam n. cf. kauṭaja. Conessi bark. See வெட்பாலை. . |
கவுமாரம் | kavumāram n. <>kaumāra. 1. Adolescence, youth; இளமை. கவுமாரமாய் வயங்கு (பாகவ.1, 1, 23). 2. Doctrine that Kumāra is the highest God. See கௌமாரம். |
கவுமோதகி | kavumōtaki n. <>kaumōdakī. Mace of Viṣṇu; திருமாலின் தண்டாயுதம். மாயோன் செங்கை மூரிநெடுந்தண்டு கவுமோதகி (சேதுபு. துராசா. 34). |
கவுரம் | kavuram n. <>gaura. White colour; வெண்மை. கவிரவானிறத்தளாய் (காஞ்சிப்பு. கழுவாய். 23). |
கவுரவம் | kavuravam n. Dignity, respectability; See கௌரவம். . |
கவுரவர் | kavuravar n. <>kaurava. Kaurava princes of the Mahābhārata, chiefly the sons Dhrtarāṣṭra, as decendants of Kuru; குருகுல வேந்தரான திருதராட்டிரன் புத்திரர். |
கவுரிசங்கம் | kavuri-caṅkam n. See கவுரிசங்கரம். . |
கவுரிசங்கரம் | kavuri-caṅkaram n. <>gaurī-šaṅkara. A double Rudrākṣa bead believed to represent at Pārvatī and šiva; கவுரிசங்கரர்களது உருவினதாய் இருபிளவுபட்ட ஒற்றை உருத்திராக்கம். |
கவுரிபாஷாணம் | kavuri-pāṣāṇam n. <>gaurī+. A prepared arsenic; வைப்புப்பாஷாணவகை. |
கவுல் 1 | kavul n. [T. gaulu, K. gavulu.] Fetid odour; bad smell; தீநாற்றம். அந்தக் கறி கவுலடிக்கிறது. |
கவுல் 2 | kavul n. <>U. qaul. Favourable tenure of land; agreement whereby land is held for rent either perpetually or for a term of years; நிலக்குத்தகை உடன்படிக்கை. (G. Sm. D. ii, 22.) |
கவுல்தார் | kavul-tār n. <>id. +. Ryot holding lands on kavul; நிலக்குத்தகை எடுத்தவன். |
கவுல்நாமா | kavul-nāmā n. <>id. +. Written agreement showing terms on which a land is held; நிலக்குத்தகைப் பத்திரம். |
கவுல்வாங்கு - தல் | kavul-vāṅku- v. tr. <>id.+. To take waste lands for rent either perpetually of for a term of years; வருஷத்தவணைக்குத் தர்க்காஸ்துக்குத்தகை எடுத்துக்கொள்ளுதல். |
கவுள் | kavuḷ n. <>kapōla. [M. kaviḷ.] 1. Cheek; கன்னம். கண்ணீர் கவுளலைப்ப (சீவக. 2050). 2. Temple of an elephant; 3. Jaw of an elephant; 4. Side; |
கவுளி 1 | kavuḷi n. See கவளி, 2. . |
கவுளி 2 | kavuḷi n. perh. gōdhi. [T. M. gauḷi, K. gavuḷi] Lizard; பல்லி. இடத்தெழுந்த கவுளி நன்று (குமர. பிர. மீனாட். குற. 11). |
கவுனி 1 | kavuṉi n. <>T. gavini. Gate of a fort or a city; கோட்டைவாயில். Loc. |
கவுனி 2 | kavuṉi n. A mineral poison. See குதிரைப்பற்பாஷாணம். (W.) . |
கவேரகன்னி | kavēra-kaṉṉi n. <>Kavēra +. The river Kāvēri said to be the daughter of Kavēraṉ; கவேரன் மகளான காவேரிநதி. கவேர கன்னிப் பெயரொடு விளங்கிய ... மூதூர் (மணி, 9, 52). |
கவேரவனம் | kavēra-vaṉam n.<>id. +. A forest near Kāviri-p-pūm-paṭṭiṉam where Kavēraṉ lived; காவிரிப்பூம்பட்டினத்தருகில் கவேரமுனி வசித்த வனம். கவேரனாங் கிருந்த கவேரவனமும் (மணி. e, 56). |
கவேரன் | kavēraṉ n. <>Kavēra. A royal sage; ஓர் இராகரிஷி. (மணி. 3, 56.) |
கவை 1 - த்தல் | kavai- 11 v. intr. 1. To fork, as a branch; கவடுபடுதல். கவைமுள்ளிற் புழையடைப்பவும் (புறநா. 98). 2. To be, exist; 1. To contain within oneself, to include; 2. To join with, embrace; |