Word |
English & Tamil Meaning |
---|---|
கள்ளிச்சொட்டு | Kaḷḷi-c-coṭṭu, n.<> கள்ளி1+. Drop of spurge milk; கள்ளிப்பாலின் திவலை. பால் கள்ளிச்சொட்டுப்போல் இருக்கிறது. |
கள்ளிப்பால் | Kaḷḷi-p-pāl, n. <>id. +. Spurge milk; கள்ளிச்செடியின் பால். |
கள்ளிப்புறா | Kaḷḷ-p-puṟa, n. prob. id.+. Little brown dove.See தவிட்டுப்புறா. . |
கள்ளிப்பூ | Kaḷḷi-p-pū, n.<>id.+. Part of a jewel; ஓர் அணியுறுப்பு. படுகண் நாலும் கள்ளிப்பூ நாலும் கொக்குவாய் ஒன்றும் சவக்கமிரண்டும் உட்பட பொன் (S.I.I. ii, 16). |
கள்ளிப்பூக்கிரந்தி | Kaḷḷi-p-pū-k-kiranti, n. <>id. +. Secondary syphilis; ஒருவகைக் கொடிய மேகவியாதி. |
கள்ளிப்பெட்டி | Kaḷḷi-p-peṭṭi, n.<> id. +. Deal-wood box; சாதிக்காய்ப் பெட்டி.Loc. |
கள்ளிமடையான் | Kaḷḷi-maṭaiyāṉ, n.cf. .கள்ளிமுளையான். See கள்ளிமந்தாரை. . |
கள்ளிமாந்தாரை | Kaḷḷi-mantārai, n.<> கள்ளி1+. Pagoda tree. See பெருங்கள்ளி. (மலை.) . |
கள்ளிமுளையான் | kaḷḷi-muḷaiyān, n.cf. கள்ளிமடையான். 1. See கள்ளிமந்தாரை (பதார்த்த 371.) . 2. Spurge sprout, fleshy plant with angular stems, Boncerosia umbellata; |
கள்ளுக்காடி | Kaḷḷu-k-kāṭi, n. <> கள்3+. Vinegar,sour toddy; புளித்த கள். |
கள்ளுச்சாராயம் | Kaḷḷu-c-cārāyam, n.<> id. +. Arrack from the juice or sap of certain palms; பனஞ்சாறு முதலியவற்றினின்று காய்ச்சி வடிக்கபடும் மது. (w.) |
கள்ளுவெறி | Kaḷḷu-veṟi, n.<> id. +. Drunkenness; குடிவெறி. |
கள்ளேடுவிடு - தல் | Kaḷḷēṭu-viṭu-. v. intr. <> கள்ளம்+ஏடு+. 1. To pass over a leaf wilfully while reading or copying; படித்துக்கொண்டு அல்லது எழுதிக்கொண்டு போம்போது சில ஏடுகளை வேண்டுமென்று படியாமலோ எழுதாமலோ தள்ளிவிடுதல். 2. To perform duties perfunctorily; |
கள 1 | kaḷa, n. See களா. (நன் 165, மயிலை.) . |
கள 2 | Kaḷa n.<> கள்-. See களவொழுக்கம். காமங் களவிட்டு (பரிபா. 11,42). . |
களக்கம் | Kaḷakkam, n. <> kalaṅka. Fault, defect; குற்றம். களக்கமில்லாதோன் (திருவாலவா 50, 8). |
களக்கர் | Kaḷakar, n.<> id.(w.) 1. Inferiors; ஈனர். 2. A hunting caste; |
களக்குறிப்பு | Kaḷa-k-kuṟippu, n.<> khala +. Account of the grain on the threshing-floor; களத்துத் தானியக்கணக்கு. (C.G.) |
களக்கொட்டு | Kaḷa-k-koṭṭu, n. <> id. +. Beating of the drum to keep thieves away from the threshing-floor; நெற்களங் காத்தற்குக் கொட்டும் பறையொலி. Loc. |
களகண்டம் | Kaḷa-kaṇṭam, n. <>kala-kanṭha. Koel, the Indian cuckoo, as having a sweet throat; குயில். (திவா) |
களகம் 1 | Kaḷakam, n. perh. khanaka. Bandicoot; பெருச்சாளி. (திவா.) |
களகம் 2 | Kaḷakam, n.perh. khala+ga. Sheaf of paddy; நெற்கதிர். வண்களக நிலவெறிக்கும் (திவ் பெரியதி. 6, 9, 10). |
களகம் 3 | Kaḷakam, n.perh. கல-. cf. களபம். Lime mortar; கண்ணாம்புச்சாந்து. களகப்புரிசைக் கவினார்... காழி (தேவா, 112, 3). |
களகம் 4 | Kaḷakam, n. cf. kala-hamsa. Hamsa, swan; அன்னம் (திவ். பெரியதி. 6, 9, 10 வ்யா) |
களகம்பளம் | Kaḷa-kampalam, n.<> galakambala. Bull's dew-lap; எருத்தின் அலைதாடி. களகம்பளமாங் குறியுடைய தானெனல்போல் (வேதா. சூ.20). |
களகள | Kaḷa-kaḷa, n. See களகளெனல். கடாந்திறந்திட்டு வானிற் களகள முழங்கும் வேழம் (சீவக. 806) |
களகள - த்தல் | Kaḷa-kala-, 11 v.intr. To rattle, chatter, gurgle; ஒலியெழுதல். |
களகளப்பு | Kaḷa-kaḷappu, n. <> களகள-. [T. K. Tu. kaḷa-kaḷa.] Loud and confused noise, as the din of the bazaar or the roar of the waters; பேரொலி. (பிங்.) |
களகளம் | Kaḷa-kaḷam, n. See களகளப்பு. (பிங்.) . |
களகளெனல் | Kaḷa-kaḷeṉal, n.<> களகள+. Onom. expr. signifying tinkling, flowing with a gentle sound, chattering; ஈரடுக்கொலிக்குறிப்பு. (திவா.) |
களங்கசத்துரு | Kaḷaṅka-catturu, n. Mountain containing lead; ஈயமணற்குன்று. (w.) |
களங்கட்டி | Kaḷaṅkaṭṭi, n. A kind of fish; மீன்வகை. (w.) |
களங்கம் | Kaḷaṅkam, n.<> kalaṅka. 1. Stain, blot, tarnish; மறு. (திவா.) . 2. Fault, defect, moral guilt; 3. Rust; 4. Verdigris; 5. Black colour; 6. Dark spot in a diamond; 7. Blue colour; 8. Mark, sign, token; 9. A mineral poison. See சீதாங்க பாஷாணம். (சங். அக.) |