Word |
English & Tamil Meaning |
---|---|
களங்கன் | Kaḷaṅkaṉ, n.<> id. 1. Moon, as spotted; சந்திரன். (திவா.) 2. Person with mental or moral defect; |
களங்கு 1 | Kaḷaṅku, n. <> id. Blemish; களங்கம். திங்கள்..உடற்களங்கால் (பிரபுலிங்.கைலாச.6). |
களங்கு 2 | Kaḷaṅku, n. perh . கல-. Pill prepared from several metals including mercury; பாதரசம்முதலிய உலோகங்களால் உண்டாக்கிய குளிகை. (w.) |
களங்குமுறை | Kaḷaṅku- muṟai, n. See களங்கு. (w.) . |
களங்கொள்(ளு) - தல் | Kaḷaṅ-koḷ-, v. <> கள்ளம் +. intr. To gain a victory; To secure an abiding-place; வெல்லுதல்.ஆர்த்துக் களங்கொண்டோர் (சிலப், 5, 83)-tr. இருப்பிடமாக்குதல், கண்ணையு மனத்தையுங் களங்கொண்டிட்டவே (சீவக.1481). |
களசுவேதம் | Kaḷa-cuvētam, n. perh gara+švētā. Atees. See அதிவிடையம். (மலை) |
களஞ்சம் | Kaḷacam, n. <> kalaja. In toxicating drugs like kacā; கஞ்சாமுதலியாலகிரிப் பண்டங்கள். உணர்வழி களஞ்ச முண்டல் (பிரபோத .39, 16). |
களஞ்சி | Kaḷaci, n. A prepared arsenic See சூதபாஷாணம. (W.) . |
களஞ்சியம் | Kaḷaciyam, n. [T.kaḷajamu, K. kaḷaji.] 1. Granary, barn; தானியஞ்சேர்க்கும் இடம். 2. Storeroom, repository, treasury, magazine; |
களஞ்செதுக்கு - தல் | Kaḷa-cetukku-, v. intr. <> களம்2+. To clear an area of grass, weeds, etc., for threshing-floor; களத்தைச் சுத்தப் படுத்துதல். (w.) |
களத்திரகாரகன் | Kaḷattira-kārakaṉ, n. <> kalatra + kāraka. (Astrol.) The planet venus whose position in the zodiac indicates particulars regarding one's wife; இல்லாள் சார்பில் நிகழும் நன்மை தீமைகளைக் குறிப்பிக்குங் கோளாகிய சுக்கிரன். |
களத்திரம் | Kaḷattiram, n. <> kalatra. Wife; மனைவி. (சூடா.) |
களத்திர்ஸ்தானம் | Kaḷattira-stāṉam, n. <> id. +. (Astrol.) The seventh house from the ascendant; இலக்கினத்திற்கு ஏழாமிடம். |
களத்துமேடு | Kaḷattu-mēṭu, n. <> களம்2+. Elevated place used as threshing-floor; நெற்களமாக அமைந்த மேடு. (C.G.) |
களதௌதம் | Kaḷatautam, n. <> kaladhauta. Silver; வெள்ளி. (திவா.) |
களந்துரி | Kaḷanturi, n. perh. kali-dru. Belleric myrobalan. See தான்றி. (சங். அக) . |
களந்தூறி | Kaḷantūṟi, n. See களந்துரி. (மலை.) . |
களந்தூன்றி | Kaḷantūṉṟi, n. See களந்துரி. (மு.அ.) . |
களநடை | Kaḷa-naṭai, n. <> களம்2+. Actual produce of a field; கண்டுமுதல். Loc. |
களநடைக்கணக்கு | Kaḷa-naṭai-k-kaṇakku, n. <> id. +. Account of the grain on the threshing-floor; களத்துத் தானியக்கணக்கு. (C.G.) |
களப்படி | Kaḷa-p-paṭi, n. <> id. +. Grain distributed at the threshing-floor to labourers or village public servants; வேலையாட்களுக்குக் களத்திற் பகிர்ந்து கொடுக்கும் மானியம். (C.G.) |
களப்பலி | Kaḷa-p-pali, n. <> id. +. Sacrifice, offered at the battle-field to the goddess of victory before commencing a battle; யுத்தகளத்தில் போர்தொடங்குமுன் கொற்றவைக்குக் கொடுக்கும் பலி. களப்பலியூட்டு சருக்கம். (பாரத.) |
களப்பன்றி | Kaḷappaṉṟi, n. Coomb teak. See பெருங்குமிழ். (மலை.) . |
களப்பாட்டு | Kaḷa-p-pāṭṭu, n. <> களம்2+. Song or ballad of the threshing-floor; களத்துப் போரடிப்போர் பாடும் பாட்டு. (w.) |
களப்பாய் | Kaḷa-p-pāy, n. <>id. +. Mat spread on the threshing-floor to tread out grain; களத்தில் விரிகும் பாய்(w.) |
களப்பிச்சை | Kaḷa-p-piccai, n. <>id. +. Grain given in charity on the threshing-floor; களத்திற் கொடுக்குந் தானிய தருமம். (C.G.) |
களப்பு | Kaḷappu, n. Shallow part of the sea; கடலில் ஆழமில்லாத இடம். (W.) |
களப்பூசை | Kaḷa-p-pūcai, n. <>களம்2+. Sacrifice offered on the threshing-floor; நெற்களத்தில் கொடுக்கும் பலி. களப்பூசைக்குப் பன்றி பிடிக்கப் போனேன். Loc. |
களப்பேச்சு | Kaḷa-p-pēccu, n. <> id. +. Dialect peculiar to the threshing-floor; களத்தில் வழங்கும் பரிபாஷை. (w.) |
களப்பேறு | Kaḷa-p-pēṟu, n. <> id. +. Grain distributed on the threshing-floor at different fixed rates to religious mendicants, washermen, barbers, and other dependents; நெற்களத்தில் குடிமக்கள் முதலியோர்பெறுஞ் சுதந்திரம். (j.) |