Word |
English & Tamil Meaning |
---|---|
கன்னிகை 2 | kaṉṉikai n. <>karṇikā. (பிங்.) 1. Pericarp of the lotus; தாமரைக்கொட்டை. 2. Flower bud; |
கன்னிச்சவ்வு | kaṉṉi-c-cavvu n. <>கன்னி +. Virginal membrane stretched across the external orifice of the vagina, hymen; கன்னிமை நீங்குதற்குமுன் யோனியே மூடியுள்ள சவ்வு. (W.) |
கன்னிச்செவ்வாய் | kaṉṉi-c-cevvāy n. <>id. +. Mars in the zodiacal sign, Virgo, indicating drought and famine; கன்னிராசியிற் பிரவேசித்த செவ்வாய். கன்னிச்செவ்வாயிற் கடலும் வற்றும். |
கன்னித்தமிழ் | kaṉṉi-t-tamiḻ n. <>id. +. Immortal Tamil; அழிவில்லாத தமிழ்மொழி. கன்னித்தமிழோர் கம்பலை யென்ப (திவா. 11). |
கன்னித்திசை | kaṉṉi-t-ticai n. <>id. +. South-west; தென்மேற்கு மூலை. Colloq. |
கன்னித்தீட்டு | kaṉṉi-t-tīṭṭu n. <>id. +. Ceremonial pollution at the attainment of puberty by a girl; முதற்பூரிப்புக்கு உரிய தீட்டு. |
கன்னித்தேங்காய் | kaṉṉi-t-tēṅ-kāy n. <>id. +. First fruit of a cocount tree; தென்னையின் முதற்காய். (யாழ். அக.) |
கன்னிநகர் | kaṉṉi-nakar n. <>id. +. See கன்னிமாடம். (கம்பரா. மதிலைக். 82.) . |
கன்னிநாகு | kaṉṉi-nāku n. <>id. +. Heifer; ஈனாத இளம்பசு. (யாழ். அக.) |
கன்னிநாடு | kaṉṉi-nāṭu n. <>id. +. The Pāṇdya country, which was, according to tradition, once ruled by a virgin princess, Taṭātakai, identified with the goddness, Mīṉākṣī; பாண்டிநாடு. கன்னிநாட்டு நல்வினைப்பயத்தாற் கேட்டார் (பெரியபு. திருஞான. 605). |
கன்னிப்பாறை | kaṉṉi-p-pāṟai n. Horsemackerel, bluish-green, attaining at least 1 ft. in length, Caranx atropus; கடல்மீன்வகை. |
கன்னிப்பிடி | kaṉṉi-p-piṭi n. <>கன்னி +. Ball of coloured food thrown to feed crows by women praying for the welfare of their brothers on the day following makara-caṅkirānti; சங்கிராந்திக்கு அடுத்தநாள் பெண்கள் தம் உடன்பிறந்தாருடைய ஆக்கங்கருதிக் காகங்களுக்கு இடும் சித்திரன்ன பலி. |
கன்னிப்பிள்ளைத்தாய்ச்சி | kaṉṉi-p-piḷḷai-t-tāycci n. <>id. +. A woman in her first pregnancy; முதற்கருவுற்றவள். (J.) |
கன்னிப்புதன் | kaṉṉi-p-putaṉ n. <>id. +. Mercury in the zodiacal sign Virgo, indicating learning for one born under such influences; சாதகனுக்கு வித்தை நிரம்புவதன் அடையாளமாகக் கன்னிராசியிலுள்ள புதன். (W.) |
கன்னிப்பூப்பு | kaṉṉi-p-pūppu n. <>id. +. First menstruation; முதற்பூப்பு. கயலேர் மலருண்கண் கன்னிப்பூப் பெய்தி (இலக். வி. 485, உரை). |
கன்னிப்பொங்கல் | kaṉṉi-p-poṅkal n. <>id. +. Festival on the day following the caṅkirānti specially celebrated by unmarried girls; சங்கிராந்திக்கு அடுத்தநாளில் கன்னிகைகளாற் கொண்டாடப்பெறும் ஒரு பண்டிகை. |
கன்னிப்போர் | kaṉṉi-p-pōr n. <>id. +. Maiden battle; வீரனது முதற்போர். காகுத்தன் கன்னிப்போரில் (கம்பரா. தாடகை. 76). |
கன்னிமடம் | kaṉṉi-maṭam n. <>id. +. See கன்னியாஸ்திர்மடம். Chr. . |
கன்னிமதில் | kaṉṉi-matil n. <>id. +. Impregnable fort; அழியாத கோட்டை. (கம்பரா. மிதிலைக். 59.) |
கன்னிமரி | kaṉṉi-mari n. <>id. +. See கன்னிமரியம்மாள். Chr. . |
கன்னிமரியம்மாள் | kaṉṉi-mari-y-ammāḷ n. <>id. +. Virgin mary; இயேசுநாதரைப் பெற்ற தாய். Chr. |
கன்னிமரியாள் | kaṉṉi-mariyāḷ n. See கன்னிமரியம்மாள். Chr. . |
கன்னிமாடம் | kaṉṉi-māṭam n. <>id. +. [K Kannemāda]. Residence of virgin princesses; இராசகன்னியர் வசிக்கும் மாளிகை. மற்றவள் கன்னிமாடத் தடைந்தபின் (மணி. 22, 100). |
கன்னிமார் | kaṉṉimār n. <>id. [M.kannimār.] 1. Virgins, unmarried girls; மணஞ்செய்யப்பெறாத பெண்கள். 2. Deified females, pious virgins on earth, afterwards born in the supernal worlds in one of the three lower states of bliss; 3. Seven deified virgins. See சத்தகன்னியர். எங்கன்னிமா ரறியச்சொன்னேன் (குமர. பிர. மீனாட். குறம். 22). |
கன்னிமுத்திரை | kaṉṉi-muttirai n. <>id. +. See கன்னிச்சவ்வு. (W.) . |
கன்னிமூலை | kaṉṉi-mūlai n. <>id. +. See கன்னித்திசை. . |
கன்னிமை | kaṉṉimai n. <>id. +. Virginity; கன்னித்தன்மை. கன்னிமை கனிந்து (சீவக.1260). |
கன்னியழி - தல் | kaṉṉi-y-aḻi- v. intr. <>id. +. To lose virginity, be deflowered, as a virgin; கன்னிமைகெடுதல். (W.) |
கன்னியழித்தல் | kaṉṉi-y-aḻittal n. <>id. +. The ceremonial celebration of the first sexual intercourse of a girl of the dancing-girl caste; புருஷர் கணிகையருடன் முதன்முதற் கூடிக் கன்னித் தன்மையை நீக்குஞ் சடங்கு. |