Word |
English & Tamil Meaning |
---|---|
கனக்குறைவு | kaṉak-kuṟaivu n. <>கனம்+. 1. Loss of weight, lightness; இலோசான தன்மை. 2. Degradation; |
கனகச்சம்பா | kaṉaka-c-campā n. <>kanaka +. A superior kind of paddy; உயர்ந்த சம்பாநெல்வகை. |
கனகச்சுற்றம் | kaṉaka-c-cuṟṟam n. <>id. +. Men in charge of the treasury, one of eṇ-peruntuṇaivar, q.v.; அரசர்க்குரிய எண்பெருந்துணைவருள் ஒருவகையாராகிய பொக்கிசவதி காரிகள். (திவா.) |
கனகசபை | kaṉaka-capai n. <>id. +. Lit., hall made of gold, hall roofed with gold plates in which the deity Nataraja is kept, as at Chidambaram; நடராசமூர்த்தி எழந்தருளியிருக்கும் பொன்னம்பலம். கனகசபை மேவு மெனது குருநாதா (திருப்பு.). |
கனகத்தும்பி | kaṉaka-t-tumpi n. <>id. +. Dragonfly, Diplax elisa; பொன்வண்டு. |
கனகதண்டி | kaṉaka-taṇṭi n. <>id. +. See கனகதண்டிகை. கனகதண்டி மேலுக்குப் பஞ்சணையில்லை யென்பார்க்கும் விசனமொன்றெ (தனிப்பா.). . |
கனகதண்டிகை | kaṉaka-taṇṭikai n. <>id. +. Taṇṭikai studded with gold; பொற்சிவிகை. |
கனகதம் | kaṉakatam n. prop. ghana + gata. Camel, as with swift pace; ஒட்டகம். (பிங்.) |
கனகதர் | kaṉakatar n. <>id. + கதம்1. Villains, base persons; சண்டாளர். (திவா.) |
கனகதோராவல்லி | kaṉaka-tōrāvalli n. <>kanaka +. A kind of topaz; ஒருவகை இரத்தினம். இவற்றின்க ணுதித்த . . . தோராவல்லி கனக தோராவல்லி (திருவாலவா. 25, 22). |
கனகபரீட்சை | kaṉaka-parīṭcai n. <>id. +. The art of testing gold, one of aṟupattu-nālukalai, q.v.; அறுபத்துநாலுகலையுள் பொன்னின் தன்மையைச் சோதித்தறியும் வித்தை. |
கனகம் | kaṉakam n. <>kanaka. 1.Gold; பொன். காரார்வண்ணன் கனகமனையானும் (தேவா. 502, )¤. 2. cf. பொன்வாய்ப்புள். Common kingfisher. See மீன்கொத்தி. (பிங். MS.) |
கனகமலை | kaṉaka-malai n. <>id. +. Mēru the gold mountain; மேருமலை. புலியூர்க் கனக மலைச்சிலை வாணனை (புலியூரந்.). |
கனகமாரிபொழி - தல் | kaṉaka-māri-poḻi- v. intr. <>id. +. Lit., to shower gold, to bestow gifts liberally; பொருளை விசேடாமாகக் கொடுத்தல். |
கனகமாழை | kaṉaka-māḻai n. <>id. +. Lump of gold, nugget; பொற்கட்டி கூப்பிய கனகமாழையால் (சீவக. 913). |
கனகமிளகு | kaṉaka-miḷaku n. Cubeb. See வால்மிளகு. (மலை.) . |
கனகன் | kaṉakaṉ n. <>kanaka. A Daitya king of golden colour. See இரணியகசிபு. நன்றெனக் கனகன் சொன்னான் (கம்பரா. இரணியன்வ. 124). . |
கனகாசம் | kaṉa-kācam n. Perh. ghana + kāca. A disease of the eye; கண்ணோய்வகை. (யாழ். அக.) |
கனகாசலம் | kaṉakācalam n. <>kanaka + a-cala. See கனகமலை. . |
கனகாபிஷேகம் | kaṉakāpiṣēkam n. <>id. + abhiṣēka. Showering gold; bestowing gifts liberally as a mark of appreciation shown by kings and noblemen; அரசர் முதலியோர் ஒருவரை மதித்துப் பொன்னால் அபிஷேகஞ்செய்கை அல்லது மிகுதியாகக் கொடுக்கை. |
கனகாமிர்தம் | kaṉakāmirtam n. cf. kanaka-mala. Silver; வெள்ளி.(W.) |
கனகாரியம் 1 | kaṉa-kāriyam n. <>ghana +. Important business; முக்கியமான அலுவல். |
கனகாரியம் 2 | kaṉa-kēriyam n. <>kanakāhvaya. See கனகி. (மலை.) . |
கனகி | kaṉaki n. <>kanaka. Thorn-apple, 1. sh., Datura stramonium; ஊமத்தை. கனகியின் முகை . . . பொதிசடை முடியினன் (தேவா. 832, 4). |
கனங்காய் | kaṉaṅkāy n. Fragrant heart's joy. See மனோரஞ்சிதம். (W.) . |
கனங்குழை | kaṉaṅ-kuḻai n. <>ghana +. Woman, wearing heavy earrings; கனவிய குழையணிந்த பெண், கனங்குழை மாதர்கொல் (குறள், 1081). |
கனங்கொள்(ளு) - தல் | kaṉaṅ-koḷ- v. intr. <>id. +. 1. To become heavy, unwieldy; பாரமாதல். 2. To become serious, important, momentous; |
கனசங்கலிதம் | kaṉa-caṅkalitam n. <>id. + saṅkalita. (Math.) Summation of cubes of natural numbers, as 1, 8, 27, 64, etc.; அடுத்துவரும் எண்களின் கனத்தைக் கூட்டுகை. |
கனசாரம் | kaṉa-cāram n. <>ghana-sāra. Camphor; பச்சைக்கர்ப்பூரம். (சூடா.) |
கனத்தநாள் | kaṉatta-nāḷ n. <>ghana +. Day which is supposed to have in itself powers to aggravate a disease in its course, as the new or full moon, when the influence of the planets is supposed to be unusually powerful; கிரகநிலையால் வியாதியைப் பெருகச்செய்யும் நாள். Colloq. |