Word |
English & Tamil Meaning |
---|---|
கனதி | kaṉati n. <>ghana-tā. 1. Heaviness, ponderosity, gravity; பாரம். 2. Thickness. 3. Pride, haughtiness; |
கனதை | kaṉatai n. <>id. Honour, dignity; கௌரவம். மற்றுள பொருளுந் தோற்றுக் கனதை போய் (குற்றா. தல. மந்தமா. 43). |
கனப்படுத்து - தல் | kaṉa-p-paṭuttu v. tr. <>ghana +. To honour, respect, esteem; பெருமைப்படுத்துதல். |
கனப்பு | kaṉappu n. <>id. 1. Being heavy; கனமாயிருக்கை. 2. Thickness; 3. Weight, heaviness; 4. Hardness, as of a swelling; 5. Fattiness; 6. Pride, self conceit; |
கனபாடி | kaṉa-pāṭi n. <>id. + pāṭhin. One who recites the Vēda in a certain manner known as ghanam; வேதத்துக்குக் கனஞ்சொல்ல வல்லோன். |
கனம் 1 | kaṉam n. <>ghana. 1. Heaviness, weight; பாரம். (திவா.) 2. Thickness; size; 3. Honour, dignity, respectability, moral worth; 4. Density, closeness, hardness, solidity; 5. Roundness; 6. Firmness; 7.Abundance,copiousness,excessiveness,plenty,much; 8. (Math.) Cube of a number, one of aṭṭa-kaṇitam, q.v.; 9. A particular manner of reciting the Rg and Yajur Vēdas; 10. See கனராகம். (பரத. இராக. 65.) 11. Cube, as a solid; 12. Multitude, assemblage, crowd; 13. Circle; 14. Width, breadth; 15. Cloud; 16. Tuber of kōrai grass; |
கனம் 2 | kaṉam n. <>kanaka. Gold; பொன். கனங்குழாய் (கலித். 57). |
கனம்பாடு - தல் | kaṉam-pāṭu v. intr. <>ghana +. To sing with a full deep voice; குரல்விட்டுப் பாடுதல். (W.) |
கனம்பார் - த்தல் | kaṉam-pār- v. intr. <>id. +. 1. To estimate weight; நிறையளவையை மதிப்பிடுதல். 2. To consider conditions or extenal circumstances; |
கனம்பொருந்திய | kaṉam-poruntiya adj. <>id. +. Honourable, worthy, esteemed, common form of address to a superior; கண்ணியமுள்ள. |
கனமாப்பலகை | kaṉam-āpalakai n. <>id. +. The famous miraculous seat of the members of the third Tamil Saṅgam; சங்கப்பலகை. கனமாப்பலகை யேற்றிக் கீழிருந்து சூத்திரப் பொருளூரைப்ப (இறை. 1, உரை). |
கனமூலம் | kaṉa-mūlam n. <>id. + mūla. (Math.) Cube root, one of aṭṭa-kaṅitam, q.v.; கனத் தொகையினின்று அறியும் அதன்மூலம். (திவா.) |
கனமோசம் | kaṉa-mōcam n. <>id. +. Unfathomable deceit or treachery; பெருவஞ்சகம். |
கனரதம் | kaṉa-ratam n. <>ghana-rasa. Water. See கனவிரதம். (உரி. நி.) . |
கனராகம் | kaṉa-rākam n. <>ghana +. A name common to each of the ten musical modes, viz., நாட்டை, சாரங்கநாட்டை, கேதாரநட்டை, வராளி, ஆரபி, பௌனம், கௌளம், ரீதிகௌளம், நாராயணகௌளம், ஸ்ரீராகம்; ஒருசார் இராகங்களின் தொகுதி. (பரத. இராக. 65, உரை.) |
கனருசி | kaṉa-ruci n. <>id. + ruci. Lit., lustre of the cloud, lightning; மின்னல். (பிங்.) |
கனல் | kaṉal n. <>கனல்-. cf. anala. [K. M. kanal.] Fire; நெருப்பு. உழிதரு காலுங் கனலும் (திருவாச. 5, 8). |
கனல்(லு) - தல் | kaṉal- 3 v. [T.kanalu, K. kanal.] intr. 1. To be hot; to glow, as fire; எரிதல். வேமிருந்தையெனக் கனலும் (கம்பரா. சூர்ப்ப. 118). 2. To boil, as hot water; 3. To be angry; 4. To redden; |
கனல்வு | kaṉalvu n. <>கனல்-. Anger; கோபம். இங்குநின்வர வென்னவெனக் கனல்வெய்த (கம்பரா. சூளா. 78). |
கனலி | kaṉali n. <>id. 1. Sun; சூரியன். வெங்கதிர்க் கனலி (புறநா. 41, 6). 2. Fire; 3. Ceylon leadwort . See கொடுவேலி. (மலை.) 4. Hog; |
கனலிநாள் | kaṉali-nāḷ n. <>கனலி +. The 13th nakṣatra. See அத்தம்8. (பிங்.) . |
கனலொழுங்கு | kaṉal-oḷuṅku n. <>கனல் +. Flame; சுவாலை. (சூடா.) |
கனலோன் | kaṉalōṉ n. <>id. Lit.., he who is hot, sun; சூரியன். காடுகனலக் கனலோன் சினஞ்சொரிய (பு. வெ. 10, பொதுவியற். 10). |