Word |
English & Tamil Meaning |
---|---|
கனவட்டம் | kaṉa-vaṭṭam n. prob. ghana + vrtta. 1. Horse; குதிரை. (திவா.) 2. The state horse of the Pāṇdya kings; |
கனவல் | kaṉaval n. <>கனவு-. Dreaming; கனாக்காண்கை. கனவலிற் பொருக்கென வெழந்து (தணிகைப்பு. திருநாட்டுப். 42). |
கனவளவு | kaṉa-v-aḷavu n. <>ghana +. See கனவளவை. . |
கனவளவை | kaṉa-v-aḷavai n. <>id. +. Cubic measure; அகல நீளங்களுடன் ஆழம் அல்லது உயரம் அல்லது கனத்தைப் பெருக்குதலாற் பெறப்பட்ட கணக்கு. |
கனவான் | kaṉavāṉ n. <>ghana. A person worthy of respect, honour, esteem; a gentleman; கௌரவமுடையவன். எங்குநிறை கனவான் (பிரபுலிங். விமலை. 33). |
கனவிரதம் | kaṉa-v-iratam n. <>ghana-rasa. Lit.., juice from the cloud, water; நீர். (பிங்.) |
கனவீனம் | kaṉa-vīṉam n. <>ghana + hīna. Dishonour, disgrace; கௌரவக்குறைவு. |
கனவு - தல் | kaṉavu 5 v. tr. <>கனவு. To dream; கனாக்காணுதல். கவரி . . . நரந்தங் கனவும் (பதிற்றுப். 11, 22). |
கனவு | kaṉavu n. [K. Tu. kana, M. kanāvu.] 1. See கனா. கனவினாற் காதலர்க் காணாதவர் (குறள், 1219). . 2. Sleep; 3. Stupor, drowsiness; |
கனவுமூலி | kaṉavu-mūli n. Poison-lily. See விஷ மூங்கில். (மலை.) . |
கனற்கூர்மை | kaṉaṟ-kūrmai n. prob. கனல் +. Glass-gall. See வலையலுப்பு. . |
கனற்சி | kaṉaṟci n. <>கனல்-. 1. Heat, glow; வெப்பம். 2. Rage, anger; |
கனற்சிலை | kaṉaṟ-cilai n. prob. id. +. A kind of black stone; ஒரு வகைக் கருங்கல். |
கனற்சுக்கிரன் | kaṉaṟ-cukkiraṉ n. <>கனல் +. A disease of the eye; கண்ணோய்வகை. (சீவரட். 265.) |
கனற்பேதி | kaṉaṟ-pēti n. Prob. id. +. A kind of ochre; சகத்திரவேதி. (W.) |
கனற்று - தல் | kaṉaṟṟu- 5 v. Caus. of கனல்-. tr. 1. To cause to burn; எரியச்செய்தல். கலந்தவர் காமத்தைக் கனற்றலோ செய்தாய் (கலித். 148). 2. To heat gently, to impart heat by direct rays, not applicable to heating in a vessel; 3. To render warm; |
கனறல் | kaṉaṟal n. <>கனல்-. Anger; கோபம். (W.) |
கனன்மரம் | kaṉaṉ-maram n. <>கனல் +. A kind of tree said to shine in the dark; சோதிவிருட்சம். (சங். அக.) |
கனனத்தம்பம் | kaṉaṉa-t-tampam n. <>khanana + stambha. Art of preventing the discovery of buried treasures, one of aṟupattunālu-kalai, q.v.; அறுபத்துநாலுகலையுள் புதையலை அகப்படாமற் செய்யும் வித்தை. (W.) |
கனனிறக்கல் | kaṉaṉiṟa-k-kal n. <>கனல் + நிறம் +. Ruby; மாணிக்கம். (W.) |
கனா | kaṉā n. [T. kala, K. Tu. kana.] Dream; கனவு. கனாவுறு திறத்தினும் (மணி. 27, 281). |
கனாக்காண(ணூ) - தல் | kaṉā-k-kāṇ- v. intr. <>கனா +. 1. To dream. கனாக்கண்டேன் தோழீ நான் (திவ். நாய்ச். 6, 1). 2. To aspire for anything beyond reach; |
கனாநூல் | kaṉā-nūl n. <>id. +. Treatise on the significance of dreams by Poṉṉavaṉ; கனாப்பயன்களைப்பற்றிப் பொன்னவன் என்ற புலவர் பாடிய நூல். (சிலப். 15, 106, உரை.) |
கனி 1 - தல் | kaṉi- 4 v. intr. [M.kani.] 1. To ripen, as fruits; to turn mellow, luscious, sweet; பழத்தல். காலமின்றியுங் கனிந்தன (கம்பரா. வனம்பு. 44). 2. To be overripe; 3. To become complete, perfect; 4. To be mellifluous, to be full of sweetness; 5. [K. kari.] To melt, grow tender, become soft, as the heart by affection, love, devotion; 6. To be red-hot, to glow; 7. To become red-hot, as a metal; 8. [T. kini.] To get suddenly angry, to be irritable; |
கனி 2 - த்தல் | kaṉi- 11 v. tr. Caus. of கனி1-. To melt, soften; இளகச்செய்தல். அனங்கனைக் கனிக்கு நீராள் (சீவக. 607). |
கனி 3 | kaṉi n. <>கனி1-. [M. kani.] 1. Ripeness, maturity; கனிவு. கனிவளர் கிளவி (சீவக. 486). 2. Fruit; ripe, mellow fruit; 3. Sweetness; 4. Essence; 5. See கனிச்சீர். வெள்ளைத்தன்மை குன்றிப்போஞ் சீர்கனிபுகில் (காரிகை, ஒழிபி. 3). 6. The last metrical division in a word of three syllables sounding like 'kaṉi'; |