Word |
English & Tamil Meaning |
---|---|
கனை 4 | kaṉai n. <>கனை3-. Sound, roar, resonance; ஒலி. (சூடா.) |
கனைப்பு | kaṉaippu n. <>id. 1. Sound, roar; ஒலி. 2. Neighing, braying, bellowing; 3. Laughter, giggling, chuckling; |
கனைவு | kaṉaivu n. <>கனை1-. Closeness, thickness; நெருக்கம். (சங். அக.) |
கனோபலம் | kaṉōpalam n. <>ghana + upala. Hail-stone; ஆலங்கட்டி. மழையிற் சுரும்பு கனேபலத்திற் கஞல (சேதுபு. அகத்திய.15). |
கஜ்ஜியா | kajjiyā n. <>U. qaziya. Quarrel; சண்டை. (W.) |
கஜ்ஜோடு | kajjōṭu n. Prob. U. kaccā +. Black betel devoid of tenderness and pungency; மட்டமான வெற்றிலை. (C.G.) |
கஜக்கோல் | kaja-k-kōl n. <>U. gaz +. Yard-stick; ஒரு கஜவளவைக் குறிக்குங் கோல். |
கஜபரீக்ஷை | kaja-parīkṣai n. <>gaja +. See கசபரீட்சை. . |
கஜம் 1 | kajam n. <>gaja. 1. Elephant. யானை. |
கஜம் 2 | kajam n. <>U. gaz. Yard-measure; இரண்டுமுழங் கொண்ட அளவு. |
கஜலக்ஷ்மி | kaja-lakṣmi n. <>gaja +. Figure of Laksmi with elephants on both sides; இருபக்கத்தும் யானைகளையுடைய இலக்குமியுருவம். |
கஜவேட்டை | kaja-vēṭṭai n. <>id. +. Elephant-hunt; யானைவேட்டை. கஜவேட்டை கண்டருளிய தேவர் (S.I.I. i, 131). |
கஜான்ஜி | kajāṉji n. <>U. khazāncī. Treasure, cashier; பொக்கிஷதார். |
கஜானா | kajāṉā n. <>U. khazāna. Treasury, public treasury; பொக்கிஷசாலை. |
கஷ்கம் | kaṣkam n. <>kakṣa. See கக்ஷம். Vul. . |
கஷ்டக்கூட்டாளி | kaṣṭa-k-kūṭṭāḷi n. <>kaṣṭa +. Working partner; வேலைபார்க்கும் பங்காளி. (C.G.) |
கஷ்டகாலம் | kaṣṭa-kālam n. <>id. +. 1. Evil time, time of misforture; துரதிருஷ்ட சமயம். 2. Time of famine; |
கஷ்டசாத்தியம் | kaṣṭa-cāttiyam n. <>id. +. That which is accomplished with difficulty; அரிதிற் செய்து முடிக்கக்கூடியது. |
கஷ்டசாத்தியரோகம் | kaṣṭa-cāttiya-rōkam n. <>id. +. Disease that is difficult to cure; அரிதில் தீர்க்ககூடிய நோய். |
கஷ்டப்பிரசவம் | kaṣṭa-p-piracavam n. <>id. +. Delivery after inordinate labour pains, hard travail, opp. to cuka-p-piracavam; வருத்தப்பட்டுப் பெறும் பிள்ளைப்பேறு. |
கஷ்டம் | kaṣṭam n. <>kaṣṭa. Difficulty, trouble; வருத்தம். |
கஷ்டார்ஜிதம் | kaṣṭārjitam n. <>id. + arjita. Hard-earned wealth; வருந்தித் தேடிய சொத்து. |
கஷாயம் | kaṣāyam n. <>kaṣāya. 1. Decoction, infusion; காய்ச்சிய மருந்துக்குடிநீர். (பதார்த்த. 1489.) 2. (Jaina.) Impurity or sin clinging to the soul; defect; degeneracy; |
கஸ்தி | kasti n. <>T. kasti. cf. kaṣṭa. 1. Grief; துக்கம். 2. Difficulty, trouble. |
கஸ்து | kastu n. <>U. gasht. Night-patrol; இரவிற்சுற்றும் ஊர்காவல். கஸ்து வருகிறார்கள். (C.G.) |
கஸ்தூரி | kastūri n. <>kastūtī. 1. Musk, animal perfume supposed to come out of the navel of the musk deer, of which there are five kinds, viz., கரிகை, திலகை, குளுந்தை, பிண்டகை, நாயகை; கஸ்தூரிமானின் நாபியினின்று எடுக்கப்படும் வாசனைப்பொருள். (பதார்த்த. 1081.) See கஸ்தூரிமான். |
கஸ்தூரிதிலகம் | kastūri-tilakam n. <>id. +. Mark in the form of a dot or a vertical line with musk on the fore-head, as of an. idol; கஸ்தூரியினால் இடும் நெற்றிப்பொட்டு. |
கஸ்தூரிநிசி | kastūri-nici n. <>id. +. See கஸ்தூரிமஞ்சள். . |
கஸ்தூரிப்பட்டை | kastōri-p-paṭṭi n. <>id. +. See கஸ்தூரியலரி . |
கஸ்தூரிமஞ்சள் | kastūri-macaḷ n. <>id. +. Yellow zedoary, shrub, Curcuma aromatica; மஞ்சள்வகை. |
கஸ்தூரிமல்லிகை | kastūri=mallikai n. <> id. +. Musk jasmine, m. cl., Jasminum pubescens, having the fragrance of musk; கஸ்தூதிமணம் வீசும் மல்லிகைவகை. (மூ. அ.) |
கஸ்தூரிமான் | kastūri-māṉ n. <>id. +. Musk-deer, Moschus moschiferus; மான்வகை. |
கஸ்தூரிமிருகம் | kastūri-mirukam n. <>id. +. See கஸ்தூரிமான். . |
கஸ்தூரியலரி | kastūri-y-alari n. <>id. +. Red oleander, 1. sh., Nerium odorum rubra; அலரிவகை. |