Word |
English & Tamil Meaning |
---|---|
காஞ்சொறி | kācoṟi n. Climbing nettle, m. cl.,Tragia involucrata ; பூடுவகை. |
காஞ்சோன்றி | kācōṉṟi n. See காஞ்சொறி. (மலை.) . |
காஞா | kāā n. See காயா. (மலை.) . |
காட்சி | kāṭci n. <>காண்-. 1. Sight, view ; கண்ணுறல். தரும மூர்த்தியைக் காட்சியை யினிக்கடன் (கம்பரா. விபீடண. 19). 2. Form, appearance ; 3. Vision of a deity, sight of a great personage; audience ; 4. Exhibition, See கண்காட்சி. 5. Attractive object of sight ; 6. Perception ; 7. Knowledge ; 8. (Puṟap.) Theme describing the first sight of a maiden by a man who falls in love with her ; 9. (Puṟap.) Theme describing the choice of a suitable stone for a memorial of a warrior, or of a virtuous wife who chose not to survive her deceased husband ; 10. (Puṟap.) Theme describing the actual sight of the memorial stone ; 11. Place, site, where something was once seen or found ; 12. Beauty ; 13. Nature ; |
காட்சிகொடு - த்தல் | kāṭci-koṭu- v. intr. <>காட்சி +. To appear or manifest oneself, as God to worshippers; to give audience, as a king to his subjects ; தரிசனமளித்தல். பேதையுந் தாமுமாங் காட்சிமுன் கொடுத்தர் (பெரியபு. அமர்நீதி. 46). |
காட்சிப்பிரமாணம் | kāṭci--p-piramāṇam n. <>id. +. Perception; means of perception ; பிரத்தியட்சப்பிரமாணம். |
காட்சிப்பொருள் | kāṭci-p-poruḷ n. <>id. +. Thing seen, object of sight, opp. to karuttup-poruḷ ; கட்புலனாற் காணும் பொருள். (தொல். பொ.1, உரை.) |
காட்சிமறைத்தல் | kāṭci-maṟaittal n. <>id.+.(Jaina) That which causes the obscuration or clouding of the taricaṉam. See தரிசனாவரணீயம். (சூடா.) . |
காட்சியணி | kāṭci-y-aṇi n. <>id. +. (Rhet.) See நிதரிசனம். (அணியி. 19.) . |
காட்சியர் | kāṭciyar n. <>id. See காட்சியவர். (சங். அக.) . |
காட்சியவர் | kāṭci-y-avar n. <>id. The wise ; அறிஞர். புன்மையில் காட்சியவர் (குறள், 174) . |
காட்சியளவை | kāṭci-y-aḷavai n. <>id. +. See காட்சிப்பிரமாணம். (சி. போ. சிற். 1, 1, பக்.15.) . |
காட்சியறிவு | kāṭci-y-aṟivu n. <>id. +. Perceptual cognition ; பிரத்தியட்ச ஞானம். |
காட்சியுணர்வு | kāṭci-y-uṇarvu n. <>id. +. See காட்சியறிவு. . |
காட்சியெருதுக்காசு | kāṭci-y-erutu-k-kācu n.<>id. +. An ancient tax probably on bulls kept for show ; ஒரு பழையவரி. (S.I.I. ii.) |
காட்சியோகு | kāṭci-yōku n. <>id. +. Realisation of true insight in thought and conduct ; ஞானயோகம். காட்சி யோகினை... நுதலிக் காட்டினோன் (கந்தபு. மோனநீங். 33) . |
காட்சிவரி | kāṭci-vari n. <>id. +. (Dram.) Dance, exhibiting sorrow and distress ; தன்வருத்தத்தைப் பலருங் காணும்படி நடிக்குங் கூத்து. (சிலப். 8, 106, உரை.) 2. Tax on public shows ; |
காட்சிவாதி | kāṭci-vāti n. <>id. +. Materialist, who holds that perception is the only means of acquiring knowledge ; பிரத்தியட்சந் தவிர வேறுபிரமாணம் இல்லை என்று வாதிக்கும் உலோகாயதன் (சி. போ. பா. அவை. பக்.40.) |
காட்டகத்தமிர்து | kāṭṭakattamirtu n. <>காடு + அகம் + அமிர்து. Forest produce ; காட்டில் உண்டாகும் பொருள்களாகிய அரக்கு உலண்டு தேன்மயிற்பீலி நாவி என்பன. காட்டாகத் தமிர்துங் காண்வரக் குவலி (சிவக. 2110). |
காட்டகத்தி | kāṭṭakatti n. <>id. + அகத்தி. A straggling shrub. See வீழி. (மலை.) . |
காட்டசை | kāṭṭacai n. <>id. + அசை Purple fleabane, m. sh., Vernonia anthelmintica ; காட்டுச்சீரகம். (தைலவ. தைல. 69.) |
காட்டணம் | kāṭṭaṇam n. cf. kriṣṇavrntā. Coomb teak. See பெருங்குமிழ். (மலை.) . |
காட்டத்தி | kāṭṭatti n. <>காடு + அத்தி. 1. Devil fig. See பேயத்தி. (மலை.) . 2. Gaub, m.tr., Diosphyros embryopteris ; |
காட்டப்பெறு - தல் | kāṭṭa-p-peṟu- v. tr. <>காட்டு +. To lay claim ; பாத்தியதைகொண்டாடுதல். எப்பேர்ப்பட்டதுங் காட்டப்பெறாதோமாகவும் (S.I.I. iii, 142). |