Word |
English & Tamil Meaning |
---|---|
காயடி - த்தல் | kāy-aṭi- v. tr. <>காய்3 +. To castrate ; விதையடித்தல். |
காயத்திரி | kāyattiri n. <>gāyatrī. 1. Gāyatrī, the sacred mantra of 24 syllables, in the Gāyatrī metre, recited by Brahmans in their daily worship ; பார்ப்பனர் நாள்தோறும் ஓதும் ஒரு வேதமந்திரம். மறவாது... காயத்திரியது செபிப்பார் (அறப். சத. 81). 2. The goddess Gāyatrī one of the wives of Brahmā ; 3. Sarasvatī; 4. Metre of 24 syllables in 4 lines ; 5. Glabrous foliaged cutch, m.tr., Acacia sundra; |
காயத்தையிருத்தி | kāyattai-y-irutti n. <>kāya+இருந்து-. Fuller's earth ; பூவழலை (மு.அ.) |
காயத்தையுருக்கி | kāyattai-y-urukki n. <>id. +. Iron ochre. See அத்திபேதி. (மு.அ.) . |
காயந்தீர்வை | kāyan-tīrvai n. <>U. qāim +. Permanent assessment ; அறுதியிடப்பட்ட நிலவரி. (G.Sm.D. ii, 122.) |
காயநூல் | kāya-nūl n. <>kāya +. Treatise relating to marks on the body, and the good or bad fortune indicated thereby ; சாமுத்திரிக சாத்திரம். காயநூன்முறை யிரைத்திடும் (கந்தபு. மார்க்கண். 71). |
காயப்பெண் | kāya-p-peṇ n. <>id. +. A female spirit believed to appear in dreams and excite passion, succubus ; கனவிற்றோன்றி மயக்கிவருத்தும் மோகினி. (W.) |
காயம் 1 | kāyam n. <>காய்1-. [T. kāyamu, M. kāyam.]. 1. Pungency ; உறைப்பு. (பிங்.) 2. Pepper ; 3. Sliced vegetables for curry ; 4. Curry stuffs, condiments, seasoning ; 5. Garlic. See உள்ளி. காயமுங் கரும்பும் (சிலப். 25, 45). 6. Asafoetida ; 7. Vegetable stimulants used in medicine. See ஐங்காயம். (தைலவ. தைல. 135.) 8. See காயமருந்து. 9. Maturity, strength ; |
காயம் 2 | kāyam n. <>Mhr. ghāya. [T. gāyamu, K.Tu. gāya M. kāyam.]. 1. Wound, injury to the flesh, bruise, contusion ; அடிமுதலியபட்டதனாலான புண். 2. Scar, cicatrice ; |
காயம் 3 | kāyam n. <>kāya. Body ; உடல். மாகாயமாய் நின்ற மாற்கு (திவ். இயற் முன்றாந்.13). |
காயம் 4 | kāyam n. <>ā-kāša. Space; sky ; ஆகாயம். விண்ணென வரூஉங் காயப்பெயர் (தொல் எழுத்.305). |
காயம் 5 | kāyam n. <>U. qāim. Permanence ; நிலைபேரு. அவனுக்கு உத்தியோகம் காயமாயிற்று. |
காயம்படு - தல் | kāyam-paṭu- v. intr. <>காயம்2 +. To be wounded or bruised ; புண்படுதல். |
காயம்பேரீஜ் | kāyam-pērīī n. <>U. qāim + U. berīz. See காயந்தீர்வை. (C.G.) . |
காயம்ஜோடி | kāyam-jōṭi n. <>id.+. Land on a fixed quit rent not subject to variation with reference to cultivation or produce; தீர்வை அறுதியிட்டு விடப்பட்ட இனாம் பூமி. (C.G.) |
காயமருந்து | kāya-maruntu n. <>காயம்1 +. A medicinal preparation of vegetable stimulants given to a lying-in-woman ; கருவுயிர்த்தவட்குக் கொடுக்குங் காரமருந்து. |
காயமலர் | kāya-malar n. <>காயா+. Dark purple flower of kāyā; காயாம்பூ. காயமலர் நிறவா (திவ். பெரியாழ்.1. 5, 6). |
காயமேரை | kāya-mērai n. <>காயம்5 +. A perquisite of the village establishment from the produce remaining with the ryot after the claims of Government are satisfied ; சர்க்கார் தீர்வைபோக எஞ்சிய விளைவில் குடிகளிடமிருந்து கிராமத்துத்தச்சர் கொல்லர் முதலிய தொழிலாளிகள் அடையும் ஊதியம். (G.Sm.D.ii, 49.) |
காயல் | kāyal n. <>காய்1-. 1. [M. kāyal.] Stretch of salt water close to the coast and separated from the sea by sand spits, backwater, lagoon ; கழி. (சூடா.) 2. Mouth of an ebbing stream ; 3. Salt pans ; 4. A village in Tinnevelly District once a famous port at the mouth of the Tāmraparṇi, where Marco Polo landed ; |
காயலா | kāyalā n. <>U. kāhilā. Fever ; சுரம். |
காயலான் | kāyalāṉ n. <>காயல். Lit., native of the port Kāyal, moorman, Tamil-speaking Muhammadan merchant ; ஒரு முகம்மதியசாதி. |
காயா | kāyā n. 1. Ironwood tree, s.tr., Memecylon edule; காசாமரம். (திவா.) 2. Oblong cordate-leaved bilberry, s.tr., Memecylon malabaricum; |
காயாம்பூவண்ணன் | kāyā-m-pū-vaṇṇaṉ n. <>காயா+ பூ+ varṇa. Lit., He of purple colour like kāyā flower, Viṣṇu ; திருமால். காயாம்பூவண்ணனிவை கழறு மன்றே (கூர்மபு. இராமனவதா.). |