Word |
English & Tamil Meaning |
---|---|
கார்வை | kārvai n. <>கா-. A prolonged musical note, as in a harmonium ; இசையில் நாதநீட்சி. Colloq. |
காரக்கருணை | kāra-k-karuṇai n. <>கார்1- +. Elephant yam . See காறுகருணை. (M.M. 289.) . |
காரக்கல் | kāra-k-kal n. <>kṣāra +. A kind of caustic mineral; ஒருவகை விஷக்கல். (W.) |
காரக்கழிச்சல் | kāra-k-kaḻiccal n. <>id. +. A kind of diarrhoea ; அசீரணபேதிவகை. |
காரக்காஞ்சிரம் | kāra-k-kāciram n. prob. id +. Medicinal herb, Peristrophe bicalyculate; ஒருவகை மருந்துச்செடி. (M.M. 161.) |
காரகக்கருவி | kāraka-k-karuvi n. <>kāraka +. (Gram.) That which is instrumental in bringing about an action, opp. to āpaka-k-karuvi; தொழிலை இயற்றுவிக்குங் கருவி. (தொல், சொல் 74, உரை.) |
காரகபஞ்சகம் | kāraka-pacakam n. <>id. +. The five organs of action ; ஜவகைக் கருமேந்திரியம் . (சி.சி.1. 5, சிவாக்.) |
காரகம் 1 | kārakam n. <>kāraka. (Gram.) The relation of a noun to a verb denoted by the case-ending ; வேற்றுமையுருபேற்ற பெயர் வினைகொண்டு முடியும் நிலை. (பி. வி.8.) |
காரகம் 2 | kārakam n. <>kāra-grha. Jail, prison, dungeon ; சிறைச்சாலை. காரகத் திவனையாக்கி (உபதேசகா. சிவபுண். 338). |
காரகம் 3 | kārakam n. <>கரு-மை+. Secondary syphilis ; மேகநோய். Loc. |
காரகவரிக்கொம்பு | kār-aka-vari-k-kompu n. <>கார்+ அகம் +. Horn of an ox with black streaks on the inside; உட்புறத்துக் கறுப்புவரிகொண்ட மாட்டின் கொம்பு. Loc. |
காரகவெட்டை | kāraka-veṭṭai n. <>காரகம்3+. See காரகம்3. (இராசவைத்.) . |
காரகவேது | kāraka-v-ētu n. <>kāraka + hētu. (Gram.) Efficient cause, actually producing the effect, dist. fr. āpaka-v-ētu, as வாணிகத்தான் ஆயினான் தொழினிகழ்ச்சிக்குக் கருவியாயுள்ள ஏது. (தண்டி.58, தலைப்பு.) |
காரகன் | kārakaṉ n. <>kāraka. 1. Agent, doer; செய்வோன். 2. Creator; 3. (Astron.) Sun's longitude corrected for parallax, as reckoned on the fixed zodiac; |
காரங்கட்டு - தல் | kāraṅ-kaṭṭu- v. intr. <>kṣāra. 1. To strengthen the blue dye by adding the necessary ingredients; நீலச்சாயத்தை உறுதியாக்குதல். (W.) 2. To prepare caustics; |
காரங்கூட்டு - தல் | kāraṅ-kūṭṭu- v. intr. <>id. +. To prepare dyer's lye; சாயமருந்து சேர்த்தல். (W.) |
காரங்கொடு - த்தல் | kāraṅ-koṭu- v. intr. <>id. +. To give pungent medicines, as to a lying-in-woman; காரமருந்தை உண்பித்தல். Colloq. |
காரச்சாயம் | kāra-c-cāyam n. <>id. +. A compound colour for dyeing; ஒருவகைக் கலப்புச் சாயம். (J.) |
காரச்சீலை | kāra-c-cīlai n. <>id. +. Corrosive plaster, blister; புண்ணுக்கிடும் மருந்துச்சீலை. Colloq. |
காரசாரம் | kāra-cāram n. <>id. + sāra. cf. kṣāra-kṣāra. Pungency, the quality of being pungent and palatable; வேண்டிய அளவோடு அமைந்த காரச்சுவை. காரசாரஞ்சேர் சாற்றிலே கலந்த சோற்றிலே (அருட்பா, vi, அவாவறுப்பு.2). |
காரட்டு | kāraṭṭu n. <>E. carat. cf.U. qīrāṭ. Carat, standard weight for precious stones, 3 1/6 gr. troy; இரத்தினங்களை நிறுக்கும் ஒரு நிறை. |
காரடம் | kāraṭam n. [T. gāradamu, K. gārada.]. See காரவிடத்தை. . |
காரடவித்தை | kāraṭa-vittai n. [T. gāradamu, K. gārada] Juggling, legerdemain; சாலவித்தை |
காரடன் | kāraṭaṉ n. <>id. Juggler ; சாலவித்தைககாரன். |
காரடை | kār-aṭai n. <>கார் + அடை. A kind of rice cake; ஒருவகைப் பணிகாரம். |
காரடையாநோன்பு | kāraṭaiyā-nōṉpu n. <>காரடை + ஆம் +. A ceremonial fast observed by woman when the sun passes from Aquarius to Pisces, praying for the longevity of their husbands ; மாசியும் பங்குனியும் கூடும்நாளில் தம் கணவரின் தீர்க்காயுளைக் கருதிக் காரடையை உணவாகக் கொண்டு மகளிர் கைக்கொள்ளும் ஒரு விரதம். |
காரண்டம் | kāraṇṭam n. <>kāraṇdava. Little cormorant. See நீர்க்காக்கை. (சூடா.) . |
காரணக்குறி | kāraṇa-k-kuṟi n. <>kāraṇa +. 1. (Gram.) Noun conveying the etymological sense, opp. to iṭu-kuṟi; காரணப்பெயர். மழைக்கணென்பது காரணக்குறியென வகுத்தாள் (கம்பரா. காட்சி. 6). 2. Presage, omen, prognostic; |
காரணக்குறிமரபு | kāraṇa-k-kuṟi-marapu n. <>id. +. (Gram.) Noun used in its etymological sense and sanctioned by long usage; காரணம் பற்றித் தொன்றுதொட்டு வழங்கும் பெயர்ச்சொல். (நன். 275.) |