Word |
English & Tamil Meaning |
---|---|
காரணக்குறியாக்கம் | kāraṇa-k-kuṟi-y-ākkam n.<>id. +. (Gram.) Noun used in its etymological sense to suit an occasion ; காரணம்பற்றிப் படைத்துக்கொள்ளும் பெயர்ச்சொல். (நன், 275, விருத்.) |
காரணகர்த்தா | kāraṇa-karttā n. <>id.+. The Supreme Being, the Cause of all things; முதற்கடவுள். (W.) |
காரணகுரு | kāraṇa-kuru n. <>id. +. Guru whose sole object it the spiritual benefit of his disciples, opp. to kāriya-kuru ; மோக்ஷம் அடைதற்குக் காரணமான ஞானகுரு. (W.) |
காரணகேவலம் | kāraṇa-kēvalam n. <>id. +. (šaiva.) The major condition of the soul in which it remains inert and united to āṇavam, awaiting the Period of Creation, one of three kāraṇāvattai, q.v. ; காரணாவத்தைமுன்ற னுள்ஆன்மாக்கள் சர்வசங்காரகாலத்தில் அசுத்தமாயா காரணத்திலேயொடுங்கி ஆணவமலத்தாலே மறைப்புண்டு சிருஷ்டிகாலமளவும் ஒன்றும் அறியாமற் கிடக்கும் அவத்தை (சிவப்.கட்15.) |
காரணச்சிறப்புப்பெயர் | kāraṇa-c-ciṟappu-p-peyar n. <>id. +. (Gram.) Noun used in its etymological sense and applicable to a particular object in a class or group, dist. fr. kāraṇa-ppotu-p-peyar; காரணத்தால் ஒரினத்தில் ஒன்றற்குச் சிறப்பாகவரும் பெயர்ச்சொல். (நன். 62, உரை.) |
காரணச்சொல் | kāraṇa-c-col n. <>id. +. Story, narrative; கதை. (பிங்.) |
காரணசகலம் | kāraṇa-cakalam n. <>id. +. (šaiva.) The major condition of the soul in which it is invested with bodies and subjected to births and deaths, one of the three kāraṇāvattai, q.v.; காரணாவத்தை முன்றனுள் ஆன்மாக்கள் தேகமெடுத்துச் சனனமரணங்களுக்கு உட்படும் அவத்தை. (சிவப். கட். 15.) |
காரணசரீரம் | kāraṇa-carīram n. <>id. šarīra. (Phil.) The subtlest and innermost rudiment of the body, causal frame; பஞ்சபூத பரிணாமமான தூலசரீரத்திற்குக் காரணமாயுள்ள சூக்கும சரீரம். |
காரணசுத்தம் | kāraṇa-cuttam n. <>id. +. (šaiva.) The major condition of the soul in which is becomes united to the Feet of the Lord, freed from mummalam, one of three kāraṇavattai, q.v.; காரணாவத்தை முன்றனுள் மல நீக்கம்பெற்ற ஆன்மா பதியின்திருவடிகளில் ஜக்கியப் படும் அவத்தை. (சிவப். கட்.15.) |
காரணப்பெயர் | kāraṇa-p-peyar n. <>id. +. (Gram. ) Derivative name, dist. fr. iṭu-kuṟi-p-peyar; ஒருகாரணம்பற்றி வழங்கும் பெயர். (நன்.62, உரை.) |
காரணப்பொதுப்பெயர் | kāraṇa-p-pot-up-peyar n. <>id +. (Gram. ) Noun used in ist etymological sense and applicable to a class or group, dist. fr. kāraṇa-c-ciṟappu-p-peyar; பலபொருட்குப் பொதுவாகவரும் காரணப் பெயர்ச்சொல். (நன்.62, உரை.) |
காரணம் | kāraṇam n. <>kāraṇa. 1. Principle, origin, source, cause, of three kinds, viz., முதற்காரணம், துணைக்காரணம், நிமித்தகாரணம்; முலம். 2. Reason, ground of an assertion or argument; 3. Motive, object ; 4. Means ; 5. An ancient šaiva scripture in Sanskrit, one of 28 civākamam , q.v. ; |
காரணமரபு | kāraṇa-marapu n. <>id. +. See காரணக்குறிமரபு. (நன். 275.) . |
காரணமாயை | kāraṇa-māyai n. <>id. +. (šaiva.) Māyā, as the primordial, original Principle from which all manifestations of matter are evolved, and into which they are finally resolved; தனுகரணபுவனபோகங்களுக்கு முதற்காரணமாயுள்ள மாயை. (சி.சி.2, 50, நிரம்ப.) |
காரணமாலை | kāraṇa-mālai n. <>id. +. (Rhet.) Figure of speech in which a chain of causes and correponding effects occur; பின்பின்னாக வருவனவற்றிற்கு முன்முன்னாக வருவனவற்றைக் காரணங்களாகவேனும் காரியங்களாகவேனுஞ் செல்லும் அணி. (அணியி.46.) |
காரணவணு | kārana-v-aṇu n. <>id. +. (Atheistic.) Primitive or original atoms by the fortuitous combination of which the worlds were originated ; உலகசிருட்டிக்கு ஒருங்குபல தொக்குக் காரணமாகும் பரமாணுக்கள். (W.) |
காரணவன் | kāraṇavaṉ n. <>id. One who is the First Cause, God ; முலகாரநணான கடவுள், ஏழுலகும் பரவுங் காரணவன் (திருவாலவா. 27, 32). |
காரணவாகுபெயர் | kāraṇa-v-āku-peyar n. <>id. +. (Gram.) Noun literally signifying cause, used figuratively to denote the effect, as Tiruvācakam, dist. fr. kāriya-v-āku-peyar; திருவாசகம் என்றாற்போலக் காரணம் காரியத்திற்கு ஆகிவரும் பெயர்ச்சொல். (நன். 290, உரை.) |
காரணவாராய்ச்சி | kāraṇa-v-ārāycci n. <>id +. (Rhet.) Figure of speech in which an antecedent cause is represented as not producing its effect; காரணம் குறைவின்றியிருந்தும் காரியம்பிறவாமையைச் சொல்லும் அணி. (அணியி.35.) |