Word |
English & Tamil Meaning |
---|---|
கால்கூசு - தல் | kāl-kūcu- v. intr. <>id.+. To feel shy of stepping into a house, as a stranger; பிறவிடஞ்செல்ல மனங்கூசுதல். |
கால்கெஞ்சு - தல் | kāl-kecu- v. intr. <>கால்1+. To feel exhausted and unable to proceed further as after a hard, long walk; அடிவருந்துதல். Loc. |
கால்கைப்பிடிப்பு | kāl-kai-p-piṭippu n. <>id.+. Rheumatism; வாதநோய் |
கால்கொள்(ளு) - தல் | kāl-koḷ- v. intr. <>கால்1+. 1. To commence, as a festival; to begin; திருவிழாமுதலியவற்றுக்கு ஆரம்பஞ்செய்தல். இந்திரவிழவிற்குக் கால்கொண்டு (சிலப். 6, 6, உரை.) 2. To begin sculpturing the image of a deity in stone; 3. To spread, increase; 4. To get into; to mount, as a horse; 5. To be filled, flooded; |
கால்கோள் | kālkōḷ n. <>கால்கொள்-. 1. Beginning, commencement, as planting a pole for a festival; தொடக்கம். கால்கோள்விழவின் கடைநிலைசாற்றி (சிலப். 5, 144). 2. (Puṟap.) Theme of commencing the sculpture of the figure of a warrior who died in battle, on a memorial stone; |
கால்சாய் - தல் | kāl-cāy- v. intr.<>கால்5+. To perish utterly, to be completely ruined; அடியோடழித்தல். குலமுழுதுங் கால்சாயப் பெயர்ப்பனன்றே (பிரபோத. 38, 28). |
கால்சிதை - தல் | kāl-citai- v. intr. <>கால்1 +. To scratch with the legs; காலாற் பறண்டுதல். கால்சிதைந்து நீலவல்லேறு பொராநின்ற வானம் (திவ். இயற். திருவிருத். 7). |
கால்சீ 1 - த்தல் | kāl-cī- v. tr. <>id+. To scratch, as a fowl; காலினாற் கீறுதல். கோழி கால் சீத்து உண்ணும். |
கால்சீ 2 - த்தல் | kāl-cī- v. tr. <>கால்5+. 1. To root out, exterminate; அடியோடு போக்குதல். மாவிருள் கால்சீப்ப (பரிபா. 10, 112). 2. To efface, obliterate, brush away; |
கால்செய்வட்டம் | kāl-cey-vaṭṭam n. <>கால்3+. Large circular fan; பேராலவட்டம். (பிங்.) |
கால்தடுக்கு - தல் | kāl-taṭukku- v. intr. (கால்1+. To stumble; அடியிடறுதல். |
கால்தாங்கு - தல் | kāl-tāṅku- v. intr. <>id.+. To have the feet drawn up, stiffened, as by a fall, by disease; to hobble, limp, as bullock, because of pain in the hoof; காலை இழுத்துநடத்தல். மாடு கால்தாங்கி நடக்கிறது. |
கால்தாழ் - தல் | kāl-tāḻ- v. intr. <>கால்5+. 1. To delay; தாமதித்தல். இழந்தவையடைய மீட்பதாகச் சொல்லிப்போன நெஞ்சினாரும் அங்கே கால்தாழ்ந்தார் (ஈடு, 7, 3, 4). 2. To be absorbed, engrossed; 3. To be immersed, drowned; to be steeped thoroughly; |
கால்நடை | kāl-naṭai n. <>கால்1+. [T.M. kālnada.] 1. Walking, going on foot; காலால் நடக்கை. 2. Cattle, sheep and goats; |
கால்நடைதருவார் | kāl-naṭai-taruvār n. <>id.+. Those who are able to walk; நடக்குஞ் சத்தியுள்ளவர். கால்நடை தருவார்காலிலே விழுந்து (ஈடு, 6, 1, ப்ர.). |
கால்நோக்கு | kāl-nōkku n. <>id. +. One fourth aspect of a planet; கிரகங்களின் காற்பார்வை. (சங்.அக.) |
கால்நோய் | kāl-nōy n. <>id. +. Lymphangitis in the leg; பாதநோவு. (M.L.) |
கால்பரி - தல் | kāl-pari- v. intr. <>கால்5+. To break, to give way, as a rope; அறுபடுதல். கயிறு கால்பரிய (மணி. 4, 31). |
கால்பாவு - தல் | kāl-pāvu- v.intr.<>கால்1+. 1. To set foot, as on the ground; கால்வைத்தல். நெருப்பலே கால்பாவினாற்போலே (திவ்.திருமாலை. 4, 24, வ்யா.) 2. To settle down, rest, as in a place; |
கால்பிடி - த்தல் | kāl-piṭi- v.tr. <>id.+. 1. To press and rub the legs to induce sleep, to shampoo; பாதத்தைவருடுதல். 2. [M.Kālpidikka.] To fall at one's feet for a favour; 3. To do service; 4. To excavate or dig a channel; 5. To castrate; |
கால்பின்னு - தல் | kāl-piṉṉu v.intr. <>id.+. 1. To become cross-legged, as a result of extreme physical debility ; கால்கள் முறுக்கிக்கொள்ளுதல். 2. To be knock-kneed, as a donkey from carrying too heavy a burden; |