Word |
English & Tamil Meaning |
---|---|
கால்விழுந்துபோ 1 - தல் | kāl-viḻuntu-pō- v. intr. <>id. +. To be rendered powerless, as one's legs by paralytic attack; பாரிசவாயுமுதலியவற்றால் கால் அசைவற்றுப்போதல். |
கால்விழுந்துபோ 2 - தல் | kāl-viḻuntu-pō- v. intr. <>கால்5+. To be spent up or thoroughly exhausted, as at the time of death; செயலற்றுப் போதல். |
கால்வீச்சு | kāl-vīccu n. <>கால்1+. Sweeping motion of legs, as in strut, generally due to one's arrogance; கால்வீசி நடக்கை. |
கால்வீசு 1 - தல் | kāl-vīcu- v. intr. <>id. +. To shed rays, as the moon; கிரணம்விசுதல். |
கால்வீசு 2 - தல் | kāl-vīcu- v. intr.<>கால்3+. To blow, as the wind ; காற்றடித்தல். கால்வீசி மின்னிப் படர்ந்து (தாயு, சுகவாரி. 8). |
கால்வெடிப்பு | kāl-veṭippu n. <>கால்1 +. Fissure in feet, as due to excess of bile in one's system; காலிற்காணும் பித்தவெடிப்பு. (M.L.) |
கால்வை - த்தல் | kāl-vai- v. intr. <>id. +. Lit., to place the foot, to step, in enter; பிரவேசித்தல். அவன்வீட்டில் நான் கால்வைக்கமாட்டேன். |
காலக்கடவுள் | kāla-k-kaṭavuḷ n. <>kāla +. 1. Yama, as the deity that puts an end to life; யமன். 2. šiva, as the god of destruction; |
காலக்கணிதம் | kāla-k-kaṇitam n. <>id. +. Astronomy; காலகணனம்பற்றிய வானசாத்திரம் காலக்கணிதமுங் கலைகளின் றுணிவும் (மணி 2, 29). |
காலக்கணிதர் | kāla-k-kaṇitar n. <>id. +. Astronomers, as calculators of time; காலத்தைக் கணித்தற்குரிய சோதிடர். மாலைக்காரருங் காலக்கணிதரும் (மணி. 28, 40). |
காலக்கழிவு | kāla-k-kaḻivu- n. <>id. +. 1. Delay, postponement, putting off; தாமதம். ஞானக்கைதா காலக்கழிவு செய்யேலே (திவ். திருவாய் 2, 9, 2). 2. Wasting or killing time; |
காலக்கனல் | kāla-k-kaṉal n. <>id. +. See காலத்தீ காலக்கனல் கட்கடை கக்குங் கணங்கள் (கூர்மபு, அந்தகா.102) . . |
காலக்கிரமம் | kāla-k-kiramam n. <>id. +. 1. Course of time; நாளடைவு. 2. Chronological order; |
காலக்கிரயம் | kāla-k-kirayam n. <>id. +. Current price; தற்காலவிலை. |
காலக்குறி | kāla-k-kuṟi n. <>id. +. Seasonal indications, signs, of weather; பருவத்துக்குரிய அடையாளம். |
காலக்கொடுமை | kāla-k-koṭumai n. <>id. +. Evil time, hardness of the times; காலத்தின் தீமை. |
காலகட்கம் | kāla-kaṭkam n. <>id. +. A hell; ஒரு நரகம். (சி.போ.£. 2, 3, பக் 203.) |
காலகதி | kāla-kati n. <>id.+. 1. Lit., the results brought about by time in its course, fate; விதி. 2. Death; |
காலகம் | kālakam n. prob. kālaka. See சேங்கொட்டை. (மலை.) . |
காலகரணம் | kāla-karaṇam n. <>kāla + harana. See காலஹரணம். . |
காலகாலன் | kāla-kālaṉ n. <>id. + kāla. šiva, as one who subbued Yama; சிவன். காலகாலனைக் கம்பனெம்மானை (தேவா.1048, 1) . |
காலகூடம் | kālakūṭam n. <>kāla-kūṭa. The poison that came when the ocean of milk was churned; deadly poison; பாற்கடலில் தோன்றிய விஷம். |
காலங்கண்டவன் | kālaṅ-kaṇṭavaṉ n. <>kāla + [M. kālamkaṇdavan.] Aged and experienced person; வயதிலும் அனுபவத்திலும் முதிர்ந்தவன். |
காலங்கழி 1 - தல் | kālaṅ-kaḻi- v. intr. <>id.+. To pass away, as time; பொழுதுபோதல். |
காலங்கழி 2 - த்தல் | kālaṅ-kaḻi- v. intr. <>id. +. 1. To pass one's life-time; வாழ்நாள் போக்குதல். (திருக்கருவைக்கலித்.) 2. To make a living; |
காலங்காட்டி | kālaṅ-kāṭṭi adv. <>id. +. See காலங்காட்டிலும். Vul. . |
காலங்காட்டிலும் | kālaṅ-kāṭṭilum adv. <>id. +. Early in the morning; விடியற்காலையில். Loc. |
காலங்கார்த்தாலே | kālaṅ-kārttālē adv. <>id. +. காலத்தாலே. Very early in the morning; அதிகாலையில். Colloq. |
காலங்கிட்டு - தல் | kālaṅ-kiṭṭu- v. intr. <>id. +. See காலங்கூடு-. Colloq. . |
காலங்கூடு - தல் | kālaṅ-kūṭu- v. intr. <>id. +. To approach or overtake, as death near one's end; சாகுந்தருணம் நெருங்குதல். |
காலசக்கரம் | kāla-cakkaram n. <>id. +. cakra. 1. Sphere in which planets move; கிரகங்கள் சுழன்றுவருதற்குரிய மண்டலம். 2. The influence of planets on one's life at different periods; 3. Cycle of time whirligi of time; |